அமீரக செய்திகள்

UAE: சம்பளம் வழங்குவதில் தாமதமா.? நிறுவனத்திற்கு தெரியாமல் ரகசிய புகார் அளிக்க MOHRE வழங்கும் சேவை இதோ..!!

அமீரகத்தில் நீங்கள் வாங்கும் சம்பளத்தில் அநியாயமாக பிடித்தம் செய்கிறார்களா? அல்லது சம்பளம் வழங்குவதில் தாமதம் செய்கிறார்களா? இவ்வாறான ஊதியம் தொடர்பான எந்த மீறல்களை நீங்கள் எதிர்கொண்டாலும், மனித வளங்கள் மற்றும் எமிரேடிசேஷன் அமைச்சகத்தில் (MOHRE) ரகசியப் புகாரை பதிவு செய்யலாம்.

MOHRE ஆப்-இல் உள்ள ‘My salary’ என்பது ரகசிய சேவையாகும். இது புகாரளிப்பவரின் அடையாளத்தை முதலாளிக்கு தெரிவிக்காமல், ஊதியம் தொடர்பான புகாரைப் பதிவு செய்ய ஊழியர்களை அனுமதிக்கிறது. எவ்வாறாயினும், இந்த இரகசிய சேவையைப் பயன்படுத்த வேண்டுமெனில், ஊழியர்கள் அமைச்சகத்தின் டேட்டாபேஸ்-இல் பதிவு செய்யப்பட வேண்டும்.

நான்கு வகையான சம்பள மீறல்கள்:

  1. 15 நாட்களுக்கு மேல் தாமதமாக வரும் சம்பளம்
  2. ஒரு மாதம் அல்லது இரண்டு மாதங்களாக சம்பளம் வழங்காமல் இருத்தல்
  3. கூடுதல் நேர ஊதியம் (overtime salary) பெறாதது
  4. சட்ட விரோதமான சம்பளப் பிடித்தம்

சட்டவிரோத சம்பளப் பிடித்தம் என்றால் என்ன?

புதிய அமீரக தொழிலாளர் சட்டத்தின் 25வது பிரிவு 2021 இன் சட்டம் எண். 33இன் படி, ஒரு நிறுவனம் அதன் ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட கடனை ரெகவரி செய்வது அல்லது ஊழியரால் ஏற்படும் சேதம் அல்லது இழப்பை ரெகவரி செய்வது போன்ற சில சந்தர்ப்பங்களில் ஊழியரின் சம்பளத்தைப் பிடித்தம் செய்ய முதலாளிகளுக்கு அனுமதி உண்டு.

ஆனால், அதே நிறுவனம் ஆட்சேர்ப்புக்கான செலவுகளை மீட்டெடுப்பது போன்ற சட்டப்பூர்வமற்ற காரணங்களுக்காக ஊழியர்களின் சம்பளத்தைப் பிடித்தம் செய்தால், நீங்கள் அமைச்சகத்தில் புகாரளிக்கலாம்.

MOHRE இல் புகாரைச் சமர்ப்பிக்கும் படிகள்:

  • உங்கள் மொபைலில் ‘MOHRE’ அப்ளிகேஷனை டவுன்லோட் செய்யவும்.
  • உங்களிடம் ஏற்கனவே MOHRE இல் ஆன்லைன் அக்கவுண்ட் இருந்தால் அல்லது UAEPASS அக்கவுண்ட் இருந்தால், ‘sign in’ என்பதைக் கிளிக் செய்யவும்.
  • உங்களிடம் கணக்கு இல்லையெனில், ‘Sign up’ என்பதைக் கிளிக் செய்து, ‘employee’ என்ற விருப்பத்தைத் தேர்வு செய்யவும். இதில் உங்கள் எமிரேட்ஸ் ஐடி எண், பாஸ்போர்ட் எண் அல்லது லேபர் கார்டு எண்ணைப் பயன்படுத்தி பதிவு செய்யலாம்.
  • அடுத்தபடியாக, ‘favourite services’ என்ற பிரிவின் கீழ் உள்ள ‘My salary’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  • அதன்பிறகு, ‘Apply for this service’ என்பதைத் தட்டவும்.
  • அதனைத் தொடர்ந்து உங்கள் மொபைல் நம்பரை உள்ளிட்டு, கடந்த ஒரு வருடத்தில் நீங்கள் பெற்ற சம்பளத்தைப் பற்றி புகார் செய்ய விரும்பும் மாதங்களைத் தேர்ந்தெடுக்கவும்.
  • அத்துடன், நான்கு வகையான புகார்களில் நீங்கள் எந்த வகையான புகாரைப் பதிவு செய்கிறீர்கள் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  • இறுதியாக, ‘Submit’ என்பதைக் கிளிக் செய்யவும்.

இவ்வாறாக, உங்கள் புகார் பதிவு செய்யப்படும், மேலும் விவரங்களைப் பெற உங்களை ஒரு பிரதிநிதி தொடர்பு கொள்வார்.

MOHRE இன் படி, புகார் விசாரிக்கப்பட்டு, புகார் உண்மை என நிரூபிக்கப்பட்டால், நிறுவனத்திற்குச் சென்று சோதனையிட உங்கள் விண்ணப்பமானது தொழிலாளர் ஆய்வுத் துறைக்கு (Labour Inspection Department) பரிந்துரைக்கப்படும். புகாரின் செல்லுபடியை தொழிலாளர் ஆய்வுத் துறை சரிபார்த்த பின்னர் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!