ADVERTISEMENT

‘டைம் மிஸ்ஸே ஆகாது’.. சொன்ன டைமில் விமான சேவைகளை வழங்கும் எதிஹாட் ஏர்வேஸ்!! உலகளவில் தரவரிசைப்படுத்தப்பட்டு வெளியிட்ட பட்டியல்….!!

Published: 25 Jul 2023, 12:31 PM |
Updated: 25 Jul 2023, 12:46 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தின் ஏர்லைன் நிறுவனமான எதிஹாட் ஏர்வேஸ், மத்திய கிழக்கின் மிகச்சரியான ஆன்-டைம்  (most on-time) ஏர்லைன்களில் ஒன்றாகவும், உலகளவில் மிகவும் சரியான நேரத்தில் (most punctual) செயல்படும் விமான நிறுவனங்களில் ஒன்றாகவும் தர வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்தாண்டின் முதல் ஆறு மாதங்களில், எதிஹாட் ஏர்லைன் விமானங்கள் 15 நிமிடங்களுக்குள் 83.4 சதவீதம் என்ற ஆன்-டைம் வருகை செயல்திறன் மதிப்பீட்டை எட்டியதாக விமான நிறுவனம் திங்களன்று அறிவித்துள்ளது.

உலகளாவிய விமானப் பகுப்பாய்வுக் குழுவான OAGயின் ஜூலை மாதத்திற்கான பங்க்சுவாலிட்டி லீக் மதிப்பீடுகளின்படி, மத்திய கிழக்கில் உள்ள சில விமான நிறுவனங்களில் ஒன்றான எதிஹாட் ஏர்லைன் தொடர்ச்சியாக 80 சதவீதத்திற்கு மேல் ஆன்-டைம் வருகையின் செயல்திறனைப் பதிவு செய்கிறது மற்றும் உலகளவில் மிகக் குறைந்த விகிதங்களிலேயே சேவை ரத்து (cancellation) செய்யப்படும் விமானங்களில் ஒன்றாகவும் இருக்கின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இது குறித்து எதிஹாட் ஏர்வேஸின் CEO முகமது அல் புலூக்கி அவர்கள் பேசுகையில், இந்த முதல் பாதி முடிவானது, எதிஹாட் ஏர்வேஸுக்கு ஒரு முக்கியமான மைல்கல் மற்றும் அதை மேம்படுத்த மேலும் புதுமையான தீர்வுகளை ஆராய்ந்து, நம்பகமான செயல்பாடுகளை தொடர்ந்து வழங்குவதற்கான ஏர்லைனின் அர்ப்பணிப்புக்கான சான்று இது என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இந்த கோடை மாதங்களில் சுமார் நான்கு மில்லியன் பயணிகள் அபுதாபி சர்வதேச விமான நிலையம் வழியாக எதிஹாட் விமானங்களில் பயணிப்பார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். அதேவேளை, நம்பகமான விமான அட்டவணை மற்றும் சிறந்த சேவை ஆகியவற்றையும் பயணிகள் எதிர்பார்க்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT