அமீரக செய்திகள்

பணத்தை மிச்சப்படுத்தும் டிராவல் பாஸ்.. துபாய் மெட்ரோவில் அன்லிமிட்டெட் பயணங்களை மேற்கொள்வது எப்படி..??

நீங்கள் தினசரி துபாய் மெட்ரோவில் பயணிக்கும் குடியிருப்பாளர்களாக இருந்தாலோ அல்லது ஒரு நாள் மட்டும் துபாய்க்கு வரும் சுற்றுலாப் பயணியாக இருந்தாலோ துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) வழங்கும் டிராவல் பாஸைப் பெற்றால் மலிவான கட்டணத்தில் வரம்பற்ற பயணத்தை மேற்கொள்ளலாம்.

இந்த டிராவல் பாஸை பெறுவதற்கு பல வழிகள் உள்ளன. துபாயில் வரம்பற்ற பயணங்களை அனுபவிக்க துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையத்தால் (RTA) வழங்கப்படும் டிராவல் பாஸை, RTA இன் ‘nol Pay’ ஆப் அல்லது அருகிலுள்ள மெட்ரோ ஸ்டேஷனில் ஆன்லைனில் வாங்கலாம்.

டிராவல் பாஸ் என்றால் என்ன?

நீங்கள் தற்போது வைத்திருக்கும் எந்த நோல் கார்டிலும் (சில்வர், ப்ளூ அல்லது கோல்ட்) டிராவல் பாஸைப் பெறலாம். உங்களிடம் நோல் கார்டு இல்லையெனில், நீங்கள் டிராவல் பாஸைப் பெற ரெட் டிக்கெட்டை வாங்கலாம்.

பொதுவாக ரெட் டிக்கெட் ஒரு பயணத்திற்கானது (single trip) என்றாலும், அதை டிராவல் பாஸாக மாற்றுமாறு கவுண்டர் ஏஜெண்டிடம் நீங்கள் கோரலாம். இதன் மூலம் ஒரு நாளில் மெட்ரோவில் ஐந்து பயணங்கள் (5 trips) வரை அனுபவிக்க முடியும்.

அதுபோல, உங்களிடம் டிராவல் பாஸ் இருந்தால், எமிரேட்டுகளுக்கு இடையே இயக்கப்படும் பேருந்துகளைத் தவிர, பொதுப் போக்குவரத்தின் எந்தப் பாதையிலும் பல பயணங்களை மேற்கொள்ள முடியும்.

டிராவல் பாஸ் வேலிடிட்டி பற்றிய விபரங்கள்:

  • நோல் ரெட் டிக்கெட் – ஒரு நாள்
  • பதிவு செய்யாத நோல் சில்வர் அல்லது கோல்ட் கார்டுகள் – ஏழு நாட்கள்.
  • பதிவுசெய்யப்பட்ட அல்லது தனிப்பயனாக்கப்பட்ட நோல் கார்டுகள்: 30 நாட்கள், 90 நாட்கள் அல்லது 365 நாட்கள்

டிராவல் பாஸைப் பெறுவதற்கான வழிகள்:

  1. ஆப்பிள், ஆண்ட்ராய்டு மற்றும் Huawei சாதனங்களில் கிடைக்கும் நோல் பே (nol pay) ஆப்ஸ்
  2. டிக்கெட் விற்பனை இயந்திரங்கள் (Ticket vending machines)
  3. டிக்கெட் அலுவலக இயந்திரங்கள்

டிராவல் பாஸ் கட்டணம்:

துபாய் பொது போக்குவரத்து வரைபடமானது ஏழு மண்டலங்களாக (zones) பிரிக்கப்பட்டுள்ளது. ஆகவே, நீங்கள் முதலில் டிராவல் பாஸை வாங்கும்போது, ​​எத்தனை மண்டலங்களுக்குப் பயணிக்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பாஸ் மூலம் நீங்கள் அனைத்து மண்டலங்களிலும் பயணிப்பதற்கும் விருப்பம் உள்ளது.

மேலும், ஒவ்வொரு மண்டலத்திலும் மெட்ரோ நிலையங்கள், பேருந்து நிலையங்கள், டிராம் நிலையங்கள் மற்றும் வாட்டர் பஸ் நிலையங்கள் என அனைத்து பொதுபோக்குவரத்து வசதிகளும் உள்ளன. ஆகையால், நீங்கள் பயணிக்கும் மண்டலங்கள் மற்றும் உங்கள் டிராவல் பாஸின் வேலிடிட்டிக்கு ஏற்ப கட்டணம் மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது.


வழக்கமான ரெட் டிக்கெட்: 

  • ஒரு மண்டலம்: 4 திர்ஹம்
  • இரண்டு மண்டலங்கள்: 6 திர்ஹம்
  • இரண்டுக்கும் மேற்பட்ட மண்டலங்கள்: 8.50 திர்ஹம்

ரெட் டிக்கெட் (கோல்டு)

  • ஒரு மண்டலம்: 8 திர்ஹம்
  • இரண்டு மண்டலங்கள்: 12 திர்ஹம்
  • இரண்டுக்கும் மேற்பட்ட மண்டலங்கள்: 17 திர்ஹம்

மேலே பட்டியலிடப்பட்டுள்ள கட்டணம் அனைத்தும் சிங்கிள் ட்ரிப்பின் விலை. எனவே, நீங்கள் எத்தனை பயணங்களை மேற்கொள்ள விரும்புகிறீர்கள் என்பதைப் பொறுத்து அதிகபட்சம் ஐந்து பயணங்கள் வரை இந்த டிக்கெட்டை நீங்கள் டாப் அப் செய்து கொள்ளலாம்.

சில்வர் நோல் கார்டு:

7 நாட்களுக்கு:

  • ஒரு மண்டலம்: 50 திர்ஹம்
  • இரண்டு மண்டலங்கள்: 80 திர்ஹம்
  • அனைத்து மண்டலங்களும்: 110 திர்ஹம்

30 நாட்களுக்கு:

  • ஒரு மண்டலம்: 140 திர்ஹம்
  • இரண்டு மண்டலங்கள்: 230 திர்ஹம்
  • அனைத்து மண்டலங்களும்: 350 திர்ஹம்

90 நாட்களுக்கு:

  • ஒரு மண்டலம்: 330 திர்ஹம்
  • இரண்டு மண்டலங்கள்: 550 திர்ஹம்
  • அனைத்து மண்டலங்களும்: 830 திர்ஹம்

365 நாட்களுக்கு:

  • ஒரு மண்டலம்: 1,060 திர்ஹம்
  • இரண்டு மண்டலங்கள்: 1,770 திர்ஹம்
  • அனைத்து மண்டலங்களும்: 2,670 திர்ஹம்

கோல்டு நோல் கார்டு:

ஏழு நாட்களுக்கு:

  • ஒரு மண்டலம்: 100 திர்ஹம்
  • இரண்டு மண்டலங்கள்: 160 திர்ஹம்
  • அனைத்து மண்டலங்களும்: 220 திர்ஹம்

30 நாட்களுக்கு:

  • ஒரு மண்டலம்: 280 திர்ஹம்
  • இரண்டு மண்டலங்கள்: 460 திர்ஹம்
  • அனைத்து மண்டலங்களும்: 700 திர்ஹம்

90 நாட்களுக்கு:

  • ஒரு மண்டலம்: 660 திர்ஹம்
  • இரண்டு மண்டலங்கள்: 1,100 திர்ஹம்
  • அனைத்து மண்டலங்களும்: 1,660 திர்ஹம்

365 நாட்களுக்கு:

  • ஒரு மண்டலம்: 2,120 திர்ஹம்
  • இரண்டு மண்டலங்கள்: 3,540 திர்ஹம்
  • அனைத்து மண்டலங்களும்: 5,340 திர்ஹம்

ப்ளூ நோல் கார்டு: (சலுகைகளைப் பெறும் கேட்டக்ரி)

ஏழு நாட்களுக்கு:

  • ஒரு மண்டலம்: 25 திர்ஹம்
  • இரண்டு மண்டலங்கள்: 40 திர்ஹம்
  • அனைத்து மண்டலங்களும்: 55 திர்ஹம்

30 நாட்களுக்கு:

  • ஒரு மண்டலம்: 70 திர்ஹம்
  • இரண்டு மண்டலங்கள்: 115 திர்ஹம்
  • அனைத்து மண்டலங்களும்: 175 திர்ஹம்

90 நாட்களுக்கு:

  • ஒரு மண்டலம்: 165 திர்ஹம்
  • இரண்டு மண்டலங்கள்: 275 திர்ஹம்
  • அனைத்து மண்டலங்களும்: 415 திர்ஹம்

365 நாட்களுக்கு:

  • ஒரு மண்டலம்: 530 திர்ஹம்
  • இரண்டு மண்டலங்கள்: 885 திர்ஹம்
  • அனைத்து மண்டலங்களும்: 1,335 திர்ஹம்

ஆன்லைனில் டிராவல் பாஸைப் பெறுவது எப்படி?

அன்லிமிட்டெட் பயணங்களுக்கான டிராவல் பாஸைப் பெற, உங்களிடம் நோல் கார்டு இருக்க வேண்டும். இல்லையென்றால், https://rta.ae/ என்ற RTA இணையதளத்தில் ஒரு நோல் கார்டை வாங்கலாம் அல்லது அருகிலுள்ள மெட்ரோ நிலையத்திற்குச் சென்று டிக்கெட் அலுவலக கவுண்டரில் இருந்து நோல் கார்டை வாங்கலாம்.

நோல் கார்டை வாங்கியதும் பின்பற்ற வேண்டிய படிகள்:

  1. உங்கள் மொபைலில் nol Pay ஆப்-ஐ டவுன்லோட் செய்து, UAEPASS மூலம் உள்நுழையவும்.
  2. ஹோம் பேஜ்-இல் கீழ்நோக்கி ஸ்க்ரோல் செய்து, ‘Purchase Travel Pass’ என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. அதனையடுத்து நோல் கார்டை உங்கள் மொபைலில் ஸ்கேன் செய்யவும்.
  4. அதன் பிறகு, உங்கள் நோல் கார்டிலிருந்து பேலன்ஸ் மற்றும் டிரான்சாக்சன் ஹிஸ்டரி போன்ற தகவல்களை ஆப் மீட்டெடுக்கும்.
  5. அடுத்தபடியாக, ‘Travel Pass’ வகையைத் தேர்ந்தெடுக்கவும். உங்கள் நோல் கார்டைப் பொறுத்து டிராவல் பாஸ் விருப்பம் கிடைக்கும்.
  6. பின்னர், மண்டல வகையைத் தேர்ந்தெடுத்து, காட்சி வரைபடத்தில் நீங்கள் பயணிக்க விரும்பும் மண்டலம் அல்லது மண்டலங்களைத் தேர்ந்தெடுக்கவும்.
  7. ஆன்லைனில் கிரெடிட் அல்லது டெபிட் கார்டு மூலம் பணம் செலுத்துங்கள்.
  8. பணம் செலுத்தியதும், அதை ஆக்டிவேட் செய்ய, உங்கள் கார்டை மீண்டும் ஸ்கேன் செய்யவும்.

ஒருவேளை மேற்குறிப்பிட்ட மண்டலங்களை விட்டு வெளியே பயணம் தேற்கொள்ள வேண்டுமென்றால் அதற்கு வழக்கமான கட்டணமே வசூலிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!