அமீரக செய்திகள்

225 திர்ஹம்களில் மாதம் முழுவதும் அன்லிமிட்டெட் பேருந்து பயணங்களை அனுபவிக்கலாம்!! – Sayer சந்தா கார்டை அறிமுகம் செய்த ஷார்ஜா RTA..!!

ஷார்ஜாவில் நீங்கள் அடிக்கடி பொதுப் பேருந்துகளில் பயணிக்கிறீர்களா? அப்படியானால், ஷார்ஜா சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையத்தால் (SRTA) இயக்கப்படும் ஷார்ஜா சிட்டி பேருந்துப் பாதையான Mowasalat பேருந்துகளில் வழங்கப்படும் சயெர் (Sayer) சந்தா கார்டு மூலம், நீங்கள் அன்லிமிட்டெட் பேருந்து பயணங்களை அனுபவிக்கலாம்.

இந்த மாதாந்திர பாஸ் கார்டின் விலை 225 திர்ஹம் மட்டுமே. நீங்கள் Mowasalat பேருந்துகளில் ஏறும்போது, பேருந்து ஓட்டுநரிடம் உங்களுக்கான சயெர் கார்டை வாங்கிக் கொள்ளலாம்.

சயெர் சந்தா கார்டு பற்றிய விவரங்கள்:

சாம்பல் மற்றும் நீல நிறத்தில் உள்ள சயெர் சந்தா கார்டுகள் வழக்கமான கார்டில் இருந்து வேறுபட்டவை ஆகும். இந்த சந்தா கார்டு பேருந்தில் பயணிக்கும் பயணிகளுக்கு 30 நாட்களுக்கு வரம்பற்ற பயணங்களை மேற்கொள்ள அனுமதிக்கிறது.

SRTA இன் படி, சந்தா கார்டு ஐந்து ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். மேலும், ஒவ்வொரு மாதமும் சந்தாவைப் புதுப்பிக்கலாம். நீங்கள் சந்தா கார்டை வாங்கினால், ஒரு நாளில் எத்தனை பயணங்கள் வேண்டுமானாலும் மேற்கொள்ளலாம். உங்கள் பயணத்திற்கான கட்டணம் மாதாந்திர பாஸ் செலவில் ஈடுசெய்யப்படும்.

சயெர் சந்தா கார்டின் செலவு:

  • சாம்பல் நிற சந்தா கார்டைப் பெற, 5 % மதிப்பு கூட்டப்பட்ட வரியுடன் (VAT) 5 திர்ஹம் மட்டுமே.
  • மாதாந்திர ரீசார்ஜ் – 225 திர்ஹம்ஸ்

இந்த செலவு விகிதத்தை நீங்கள் வழக்கமான Sayer கார்டுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், கார்டை 45 திர்ஹம், 90 திர்ஹம் மற்றும் 180 திர்ஹம்களுக்கு மட்டுமே ரீசார்ஜ் செய்ய முடியும். ஷார்ஜா நகருக்குள் ஒரு வழக்கமான அட்டையில் பயணம் செய்ய 6 திர்ஹம் செலவாகும்.

சயெர் சந்தா கார்டை ரீசார்ஜ் செய்வதற்கான படிகள்:

1. Mowasalat பேருந்துகளில் ஏதேனும் ஒன்றில் ஏறி, உங்கள் Sayer கார்டை ரீசார்ஜ் செய்யுமாறு, ஓட்டுநரிடம் கேளுங்கள்.

2. ஓட்டுநருக்கு பணமாகவோ அல்லது கார்டு மூலமாகவோ ரீசார்ஜ் பணத்தை செலுத்தி விட்டு, மறக்காமல் உங்களின் ரசீதை பெற்றுக்கொள்ளுங்கள்.

இதில் குறிப்பிடத்தக்க விசயம் என்னவெனில், இந்த பாஸ் மூலம், ஷார்ஜா நகருக்குள் பஸ் லைனில் இயங்கும் Mowasalat பேருந்துகளில் மட்டுமே பயணிக்க முடியும், SRTA ஆல் இயக்கப்படும் பொதுப் போக்குவரத்து பேருந்துகளில் மற்ற எமிரேட்டுகளுக்கு இடையேயான பயணத்திற்குப் பயன்படுத்த முடியாது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

Related Articles

Back to top button
error: Content is protected !!