அமீரக செய்திகள்

UAE: வெளிநாட்டவர்கள் டிரைவிங் லைசன்ஸ் எடுப்பதற்கு ‘ஒன்-டே டெஸ்ட்’ எனும் புதிய முறையை அறிமுகம் செய்துள்ள ஷார்ஜா காவல்துறை..!!

ஷார்ஜாவில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் டிரைவிங் லைசன்ஸ் பெறுவதற்கு ‘ஒன்-டே டெஸ்ட்’ என்ற புதிய முயற்சியை ஷார்ஜா காவல்துறை அறிமுகம் செய்துள்ளது. இந்த புது முயற்சியானது, ஒரே நாளில் ப்ரிலிமினரி மற்றும் சிவில் சோதனைகளை ஒருங்கிணைப்பதன் மூலம், விண்ணப்பதாரர்களுக்கு ஒரே நாளில் சோதனைகளை வழங்க இது அனுமதிக்கும்.

எலெக்ட்ரானிக் மற்றும் ஆன்-சைட் என இரண்டு கட்டங்களாக நடைபெறும் இந்த சேவை,  எதிர்வரும் செப்டம்பரில் முடிவடையும் என்று மெக்கானிக்ஸ் மற்றும் டிரைவிங் லைசன்ஸ் துறையின் இயக்குநர் கர்னல் காலித் முஹம்மது எல்-கே அவர்கள் தெரிவித்துள்ளார்.

மேலும் இதன் முதல்கட்டம் எலெக்ட்ரானிக் முறையில் நடைபெறும் என்பதால், டிரைவிங் லைசன்ஸ் பெற விண்ணப்பிப்பவர்கள் நேரில் வரத் தேவையில்லை என்பதையும் காலித் முஹம்மது குறிப்பிட்டுள்ளார்.

எனவே, முதல் கட்டத்தில் MOI அப்ளிகேஷனைப் பயன்படுத்தி புதிய டிரைவிங் லைசன்ஸிற்கான கோப்பைத் திறக்கலாம். ஆன்லைனில் நடத்தப்படும் எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு, இரண்டாவது கட்டத்திற்கு செல்லலாம்.

இரண்டாவது கட்டத்தில் நேரில் சென்று பிராக்டிகல் பயிற்சியை எதிர்கொள்ள வேண்டும். அதன் பிறகு, இறுதித் தேர்வுத் தேதியில் ஒரே நாளில் ப்ரிலிமினரி மற்றும் சிவில் தேர்வுகள் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்த முயற்சியானது நேஷனல் சர்வீஸ் ஆட்சேர்ப்பு மற்றும் உயர்நிலைப் பள்ளி பட்டதாரிகளுக்கானது என்று ஷார்ஜா காவல்துறையால் தெரிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!