அமீரக செய்திகள்

மறைந்த ஷேக் சயீத் அவர்களுக்கு நாடு முழுவதும் அனைத்து மசூதிகளிலும் ஜனாஸா தொழுகை நடைபெறும் என அறிவிப்பு!!

அமீரக அதிபரின் சகோதரரும், அபுதாபி ஆட்சியாளரின் பிரதிநிதியுமான மறைந்த ஷேக் சயீத் பின் சயீத் அல் நஹ்யான் அவர்களின் ஜனாஸா தொழுகை, லுஹர் தொழுகைக்குப் பிறகு இன்று (ஜூலை 27) நடைபெறும் என்று ஜனாதிபதி நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இது அபுதாபியின் அல் பதீனில் உள்ள ஷேக் சுல்தான் பின் சையத் தி ஃபர்ஸ்ட் மசூதியில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நாடு முழுவதும், அனைத்து மசூதிகளிலும் அதே நேரத்தில் இறந்தவருக்கான இறுதித் தொழுகை (ஜனாஸா தொழுகை) நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நீதிமன்றம் வழங்கிய ஆலோசனையின்படி, அபுதாபியில் உள்ள அல் முஷ்ரிஃப் அரண்மனையில் இன்று (வியாழக்கிழமை) மாலை 4.30 மணி முதல் 6:30 மணி வரையிலும், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் காலை 10 மணி முதல் 12 மணி வரையிலும் மற்றும் 4.30 மணி முதல் மாலை 6.30 மணி வரையிலும் இரண்டு அமர்வுகளில் இரங்கல் தெரிவிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!