ADVERTISEMENT

அமீரகத்தில் இன்று 46ºC யை எட்டும் அதிகபட்ச வெப்பநிலை!! தூசியுடன் கூடிய காற்று வீசும் என்று எச்சரிக்கை விடுத்த NCM..!!

Published: 2 Jul 2023, 11:29 AM |
Updated: 2 Jul 2023, 11:52 AM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்றைய தினம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) தெரிவித்துள்ளது. மேலும், சில இடங்களில் லேசானது முதல் மிதமான காற்று வீசுவதை உணரலாம் என்றும், அத்துடன் பகலில் சில நேரங்களில் தூசியுடன் கூடிய காற்று வீசும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அதேசமயம், நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை 46 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகலாம் என கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, அபுதாபியில் வெப்பநிலை 40ºC வரையிலும், துபாயில் 39ºC வரையிலும் வெப்பநிலை பதிவாகும் என்று தெரிகிறது.

இருப்பினும், குறைந்தபட்ச வெப்பநிலையானது அபுதாபியில் 27ºC ஆகவும், துபாயில் 28ºC ஆகவும் மற்றும் உள் பகுதிகளில் 24ºC ஆகவும் பதிவாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. NCMஇன் படி, அபுதாபியில் ஈரப்பதம் 25 முதல் 75 சதவீதம் வரையிலும், துபாயில் 25 முதல் 80 சதவீதம் வரையிலும் இருக்கும்.

ADVERTISEMENT

இதற்கிடையில், கடலில் அலைகளின் சீற்றம் மிதமானதாக இருக்கும். மேலும் அரேபிய வளைகுடாவில் மேற்கு நோக்கி சீற்றமாகவும், ஓமன் கடலில் சற்று கரடுமுரடாகவும் இருக்கும் என்றும் NCM தெரிவித்துள்ளது.