ஐக்கிய அரபு அமீரகத்தின் நாடாளுமன்ற அமைப்பான ஃபெடரல் நேஷனல் கவுன்சில் (FNC) வெளிநாட்டினருக்கு வழங்கப்படும் பணி அனுமதி (work permit) காலத்தை இரண்டு ஆண்டுகளில் இருந்து மூன்று ஆண்டுகாளாக நீட்டிக்க ஒப்புதல் தெரிவித்துள்ளது. FNC குழுவானது பணி அனுமதி பெறுவது தொடர்பான நிதிச் செலவுகளைக் குறைப்பதற்காக பரிந்துரைக்கப்பட்ட நடவடிக்கைகளின் கீழ் இது வந்துள்ளது.
பொதுவாக செல்லுபடியாகும் அனுமதியின்றி நாட்டில் பணிபுரிவது சட்டவிரோதமானதாகும். தற்போது, ஐக்கிய அரபு அமீரகத்தில் பணி அனுமதி இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்படுகின்ற நிலையில், இந்த ஆவணமானது மனித வளம் மற்றும் குடியேற்ற அமைச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், நிதி, பொருளாதாரம் மற்றும் தொழில்துறை விவகாரங்களுக்கான FNC குழு சமர்ப்பித்த அறிக்கையில், இந்த இரண்டு வருட கால அளவை மூன்று ஆண்டுகளாக அதிகரிப்பதற்கான பரிந்துரையும் அடங்கும். அத்துடன் பணி மாறுதலுக்கான பணி அனுமதிக் கட்டணத்தைத் தள்ளுபடி செய்வது உள்ளிட்ட பிற பரிந்துரைகளையும் FNC முன்மொழிந்துள்ளது.
இது மட்டுமில்லாமல், தகுதிகாண் காலத்திற்குப் (probation period) பிறகு தொழிலாளர்கள் குறைந்தபட்சம் ஒரு வருடத்திற்கு ஒரு முதலாளியுடன் பணிபுரிய வேண்டும் என்பதும் FNC அங்கீகரித்த பரிந்துரைகளில் ஒன்றாகும். ஆனால், முதலாளி ஒப்புக்கொண்டால் இந்த தேவையை தள்ளுபடியும் செய்யலாம்.
தொழிலாளர் பாதுகாப்பு தொடர்பான நெகிழ்வான கொள்கைகள்:
பெடரல் நேஷனல் கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்ற மனித வளங்கள் மற்றும் குடியேற்ற அமைச்சர் அப்துல்ரஹ்மான் அல் அவார் அவர்களால், அபாயங்களில் இருந்து தொழிலாளர்களைப் பாதுகாக்க நடைமுறையில் உள்ள மூன்று முக்கிய கொள்கைகளும் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. அவை,