ADVERTISEMENT

UAE: ஆண்களை அவதூறாக பேசி பெண் வெளியிட்ட வெறுப்பூட்டும் வீடியோ வைரல்!! 5 ஆண்டு சிறை மற்றும் 5 லட்சம் திர்ஹம்ஸ் அபராதம்.. நாடு கடத்தவும் உத்தரவு..!!

Published: 6 Jul 2023, 8:39 PM |
Updated: 6 Jul 2023, 9:06 PM |
Posted By: Menaka

அமீரகத்தில் பெண் ஒருவர் வெளியிட்ட வெறுக்கத்தக்க வகையில் பேசிய (hate speech) வீடியோ ஒன்று வைரல் ஆன நிலையில், அவருக்கு ஐந்தாண்டுகள் சிறைத்தண்டனையும், 500,000 திர்ஹம்கள் அபராதமும் விதித்து அபுதாபி குற்றவியல் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை தீர்ப்பளித்துள்ளது. மேலும், சிறைத்தண்டைக்கு பின்னர் அவரை நாடு கடத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ADVERTISEMENT

அத்துடன் வீடியோவை அப்லோட் செய்ய பயன்படுத்திய மொபைல் போனை பறிமுதல் செய்து மொபைல் போன் மற்றும் அது வெளியிடப்பட்ட சமூக ஊடக கணக்கு இரண்டிலிருந்தும் வெறுக்கத்தக்க வீடியோ கிளிப்பை நீக்குமாறும் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

கூடுதலாக, அதிகாரிகள் அந்த பெண்ணின் சமூக ஊடக கணக்கை மூடிவிட்டு, எந்தவொரு சமூக வலைத்தளம் அல்லது தகவல் தொழில்நுட்ப வழிமுறைகளையும் அந்த பெண் நிரந்தரமாக பயன்படுத்த முடியாதவாறு தடை செய்துள்ளனர்.

ADVERTISEMENT

ஆண்களையும் மற்றும் வீட்டுப் பணியாளர்களையும் துஷ்பிரயோகம் செய்யும் வகையில் அந்த பெண் வெளியிட்ட வீடியோ சமூக ஊடகங்களில் அதிவிரைவாக வைரல் ஆனதால், இந்த விவகாரம் பொது வழக்கறிஞரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

அதன் பிறகு, குற்றம் சாட்டப்பட்டவரிடம் நடத்தப்பட்ட முழுவிசாரணையின் அடிப்படையில், பெண்ணின் மீது குற்றம் சாட்டிய பப்ளிக் பிராசிகியூஷன் தகுதிவாய்ந்த குற்றவியல் நீதிமன்றம் அவருக்குத் தக்க தண்டனையை விதிக்குமாறு கோரிக்கை வைத்தது.

ADVERTISEMENT

அமீரகத்தை பொருத்தவரை பிறரை அசிங்கப்படுத்தும் வகையில் அல்லது வெறுப்பூட்டும் வகையில் ஏதேனும் செயலைச் செய்தால், அவர்களுக்கு குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது 500,000 திர்ஹம்ஸில் இருந்து அதிகபட்சமாக 2 மில்லியன் திர்ஹம்களுக்கு மிகாமல் அபராதமும் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.