அமீரக செய்திகள்

உலகின் போட்டி நிறைந்த வேலை சந்தைகளில் துபாய் மற்றும் தோஹா முதலிடம்.! – அமெரிக்க நகரங்களை விடவும் அதிகம் பேர் விண்ணப்பிப்பதாக தகவல்..!!

உலகின் மிகவும் போட்டி நிறைந்த வேலைச் சந்தைகளில் துபாய் மற்றும் தோஹா மற்ற நகரங்களை பின்னுக்கு தள்ளி முதலிடத்தில் உள்ளன. ஆன்லைன் ரெஸ்யூம் பில்டரான Resume.io இன் ஆய்வின்படி, வேலை தேடுபவர்களின் பிரத்யேக தளமான LinkedIn தளத்தில், அமெரிக்க நகரங்களை விடவும் வேலை வாய்ப்பிற்கு துபாய் மற்றும் தோஹா நகரங்களிலேயே அதிக எண்ணிக்கையிலான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

போட்டி சந்தை தொடர்பான பட்டியலில் அவற்றின் தரவரிசையை உருவாக்க, Resume.io நிறுவனம் ஒவ்வொரு அமெரிக்க மாநிலம் உட்பட 130 உலகளாவிய நகரங்களையும் கவனித்து, வேலை விளம்பரப்படுத்தப்பட்ட முதல் வாரத்தில் எத்தனை விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டன என்பதைக் கண்காணித்திருக்கிறது.

அந்த ஆய்வின் முடிவில், குறிப்பாக கத்தாரின் ஆதிக்கம் அதிகளவில் இருந்துள்ளது. அதற்கு காரணம் கடந்த ஆண்டு உலகக் கோப்பையை நடத்தியது தொடர்பாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. கத்தார் நாடானது 2010 ஆம் ஆண்டிலிருந்து, இந்த ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக கிட்டத்தட்ட 100 புதிய ஹோட்டல்களை நாடு முழுவதும் கட்டியுள்ளது.

அத்துடன், துறைமுகம் மற்றும் விமான நிலையத்தை விரிவுபடுத்துதல் மற்றும் நாட்டில் உள்ள சாலைகளை மறுசீரமைத்தல் என கத்தார் $250 பில்லியனுக்கும் மேலாக செலவழித்துள்ளது. இந்நிலையில், அங்குள்ள சராசரி வேலை விளம்பரத்திற்கு பிப்ரவரியில் அதிகளவிலான விண்ணப்பங்கள் குவிந்துள்ளதாக Resume.io ஆய்வு குறிப்பிடுகிறது.

அதுமட்டுமின்றி, கத்தாரில் உலகளாவிய குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிக்கப்பட்டிருப்பதும், தனிப்பட்ட வருமானத்திற்கு வரி விதிக்கப்படாததும் அங்கு வேலை செய்வதற்கு மிகவும் லாபகரமானதாக இருக்கிறது. எனவே, தோஹா போட்டி நிறைந்த வேலைச் சந்தைகளின்  பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

அதுபோலவே, மிகவும் போட்டி நிறைந்த வேலை சந்தைகளின் பட்டியலில் இடம்பிடித்துள்ள துபாய் மற்றும் அபுதாபியில் உள்ள தொழிலாளர்கள் வருமான வரி செலுத்துவதில்லை. LinkedIn தரவுகளின்படி, ஐக்கிய அரபு அமீரகத்தில் தொற்றுநோய்க்குப் பிந்தைய வேலைச் சந்தையை இயக்கும் சில வேலைகளில் சிறப்பு மருத்துவப் பணிகள் மற்றும் ஃப்ரீலான்ஸ் டிஜிட்டல் கன்டென்ட் பணிகள் ஆகியவை அடங்கும்.

இதனைத் தொடர்ந்து அமெரிக்காவின் மிக உயர்ந்த தரவரிசையில் இடம்பிடித்துள்ள இரண்டும் வடக்கு கலிபோர்னியாவில் உள்ள நகரங்களாகும் உள்ளன. அவை சான் ஜோஸ் மற்றும் சான் பிரான்சிஸ்கோ எனவும் ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.

மேலும், மற்ற முக்கிய அமெரிக்க நகரங்கள் வேலைச் சந்தையில் போட்டித்தன்மையுடன் இருந்தாலும், Resume.io ஆய்வுகளின் முடிவில் அவை உலகளாவிய முதல் 10 இடங்களைப் பிடிக்கவில்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.

Related Articles

Back to top button
error: Content is protected !!