ADVERTISEMENT

அமீரகத்தில் தொடங்கவிருக்கும் கல்வியாண்டு: இந்த விதிமீறலுக்கு 1,000 திர்ஹம் அபராதம்..!! 10 ப்ளாக் பாய்ண்ட்ஸ்..!! வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை..!!

Published: 27 Aug 2023, 4:40 PM |
Updated: 27 Aug 2023, 5:39 PM |
Posted By: Menaka

அமீரகத்தில் 2023-2024 இன் புதிய கல்வியாண்டு தொடங்க உள்ளதால், இயக்குனரகம் மாணவர்களின் சாலை பாதுகாப்பை இலக்காகக் கொண்ட விரிவான பாதுகாப்புத் திட்டத்தை வகுத்துள்ளது.

ADVERTISEMENT

இதன்படி அமீரகத்தில் சாலைகளில் செல்லும்போது, பள்ளிப் பேருந்துகளில் “Stop” பலகையைக் கண்டால், நீங்கள் உங்கள் வாகனத்தை நிறுத்த வேண்டும் என்றும் மேலும், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ஐந்து மீட்டருக்கு குறையாத தூரத்தில் நிறுத்த வேண்டும் என்றும் வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த விதிகளுக்கு இணங்கத் தவறுபவர்கள் மீது 1,000 திர்ஹம்கள் அபராதம் மற்றும் 10 ப்ளாக் பாயிண்டுகள் விதிக்கப்படும் என்று அபுதாபி காவல்துறையின் பொதுக் கட்டளையின் கீழ் இயங்கும் அபுதாபி போக்குவரத்து மற்றும் ரோந்துப் பிரிவு இயக்குனரகம் வாகன ஓட்டிகளுக்கு நினைவூட்டியுள்ளது.

ADVERTISEMENT

இந்த நடவடிக்கையானது, “Our Children are a Trust” என்ற முழக்கத்தில் இணைக்கப்பட்டுள்ளது. இது குறித்து போக்குவரத்து மற்றும் ரோந்து இயக்குநரகத்தின் இயக்குனர் பிரிகேடியர் ஜெனரல் மஹ்மூத் யூசப் அல் பலுஷி அவர்கள் விவரிக்கையில், எமிரேட்டில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதற்கும், பள்ளி பேருந்துகளின் இயக்கத்தை எளிதாக்குவதற்கும், நடைபாதைகளை ஒழுங்காகக் கடப்பதற்கும், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் போக்குவரத்துக் காவலர்கள் ரோந்துப் பணிகளை மேற்கொள்வார்கள் என்று கூறியுள்ளார். மேலும், மாணவர்களின் நல்வாழ்வைப் பாதுகாப்பது அபுதாபி காவல்துறை தலைமையகத்தின் முக்கிய அக்கறை என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதுமட்டுமின்றி, மாணவர்கள் மற்றும் கல்வி ஊழியர்களின் பாதுகாப்பைப் பேணுவதற்கான உந்துதலை வலுப்படுத்த பல்வேறு மூலோபாய பங்காளிகளுடன் சந்திப்புகள் திட்டமிடப்பட்டுள்ளதாக அல் பலுஷி தெரிவித்துள்ளார். எனவே, மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இருவருக்கும் மகிழ்ச்சியான கல்வியாண்டு வருமென்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

ADVERTISEMENT

பிரச்சாரத்தின் முக்கியத்துவம்:

இந்தப் பிரச்சாரங்கள் போக்குவரத்துச் சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளைப் பற்றி சாலைப் பயனர்களுக்கு தெரியப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக அல் பலுஷி கூறினார்.

அத்துடன் பள்ளி பேருந்து ஓட்டுநர்கள் தங்கள் பேருந்துகளை நியமிக்கப்பட்ட பாதுகாப்பான இடங்களில் நிறுத்துமாறும், மாணவர்கள் ஏறுவதற்கும், இருக்கைகளை ஆக்கிரமிப்பதற்கும், அவர்கள் பாதுகாப்பாக இறங்குவதை உறுதி செய்வதற்கும் போதுமான நேரத்தை கொடுக்குமாறும் வலியுறுத்தியுள்ளார். அதேசமயம், அதிவேகத்திற்கு எதிராகவும், குறிப்பாக பனிமூட்டமான சூழ்நிலையில் தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்கவும் பேருந்து ஓட்டுநர்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

குடும்பங்களின் பொறுப்பு:

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்லும் போது கவனமாக இருக்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். குறிப்பாக, பத்து வயதுக்குட்பட்ட குழந்தைகளை முன் இருக்கைகளில் உட்கார வைக்கக்கூடாது என்றும் எச்சரித்துள்ளார். கூடவே, சாலைகளை பாதுகாப்பாக கடக்க குழந்தைகளுக்கு உதவுமாறு பெற்றோர்களை ஊக்குவித்துள்ளார்.

கூடுதலாக, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு பேருந்தில் ஏறுவதற்கும் இறங்குவதற்கும் சரியான நடைமுறைகளை கற்பிக்கவும், பேருந்திற்காக காத்திருக்கும் போது சாலையில் விளையாடுவதை தவிர்க்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.