ADVERTISEMENT

UAE: ADNOC நடத்தும் ப்ரோமோஷனில் 50,000 திர்ஹம் ரொக்கப் பரிசு, ஒரு வருட இலவச பெட்ரோலை வென்றுள்ள வாடிக்கையாளர்கள்..!!

Published: 29 Aug 2023, 8:31 AM |
Updated: 29 Aug 2023, 9:13 AM |
Posted By: Menaka

அமீரக அரசாங்கத்திற்கு சொந்தமான எண்ணெய் நிறுவனமான அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனமானது (ADNOC) ஏற்கெனவே வெளியிட்ட ப்ரோமோஷன் அடிப்படையில், அமீரக குடியிருப்பாளர்கள் இருவர் 50,000 திர்ஹம் ரொக்கப் பரிசு மற்றும் ஒரு வருடத்திற்கு இலவச எரிபொருள் மற்றும் ரிவார்ட் பாயிண்ட்களை வெல்லும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.

ADVERTISEMENT

அதன்படி, 50,000 ரொக்கப் பரிசை ஹருன் மியா என்பவரும், அப்தல்லா யூசுப் என்பவர் ஒரு வருட இலவச எரிபொருளையும், அப்துல்லா அஹ்மத் அல்ஷேஹி என்ற நபர் 5 மில்லியன் ரிவார்டு பாயின்ட்களையும் வென்றுள்ளனர்.

அமீரகத்தில் உள்ள Adnoc சேவை நிலையங்களானது அதன் பதிவுசெய்த வாடிக்கையாளர்கள், எந்த Adnoc ஒயாசிஸ் கன்வீனியன்ஸ் ஸ்டோரிலும், கார் வாஷ், லூப் மாற்றம், LPG ஆன்லைன் அல்லது EV சார்ஜிங் போன்றவற்றிற்கு 20 திர்ஹம் செலவழித்தாலும் அல்லது எரிபொருளுக்கு 60 திர்ஹம்கள் செலவழித்தாலும் அவர்களுக்கு உடனடி தினசரி பரிசுகளை வழங்குவதாக ப்ரோமோஷன் செய்துள்ளது.

ADVERTISEMENT

அந்த வகையில், மேற்கூறிய வாடிக்கையாளர்கள் வாராந்திர பரிசுகளான 50,000 திர்ஹம் ரொக்கம், ஒரு வருடத்திற்கு இலவச எரிபொருள், 5 மில்லியன் ரிவார்ட் பாய்ண்ட்ஸை ச்வெல்வதுடன் கிராண்ட் பரிசான 1 கிலோ தங்கத்தை வெல்லும் வாய்ப்பையும் பெறுவார்கள் என கூறப்பட்டிருந்தது.

பங்கேற்பது எப்படி?

ADNOC நிறுவனத்தின் அதிரடி ப்ரோமோஷனில் பங்கேற்க வேண்டுமெனில், உங்களிடம் அமீரக ஃபோன் நம்பர், எமிரேட்ஸ் ஐடி இருக்க வேண்டும் மற்றும் நீங்கள் Adnoc Rewards உறுப்பினராக இருக்க வேண்டும்.

ADVERTISEMENT

இவையனைத்தும் உங்களிடம் இருக்கும்பட்சத்தில், நீங்கள் ADNOC விநியோக ஆப்-இல் பதிவு செய்யலாம் அல்லது சேவை நிலையத்தைப் பார்வையிடலாம். ஒவ்வொரு முறை நீங்கள் பொருட்கள் வாங்குவதற்கு முன்பும், இதில் பங்கேற்க உங்கள் எமிரேட்ஸ் ஐடி அல்லது ரிவார்ட்ஸ் மெம்பர்ஷிப் QR குறியீட்டைக் காட்ட வேண்டும்.

இறுதியாக, வெற்றியாளர்கள் அனைவரும் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் அப்ளிகேஷனில் அறிவிக்கப்படுவார்கள். கடந்த ஜூன் மாதம் 26 ஆம் தேதி தொடங்கிய இந்த ப்ரோமோஷன், செப்டம்பர் 24, 2023 வரை நடைபெறும், இதில் 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 25 ஆம் தேதி வெற்றியாளர்களுக்கு 1 கிலோ தங்கம் பரிசாக வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.