அமீரக செய்திகள்

அமீரகவாசிகள் விசா இல்லாமல் ஆர்மீனியாவுக்கு செல்ல அனுமதி உண்டா..?? நீங்கள் தகுதியானவரா என்பதைத் தெரிந்து கொள்வது எப்படி..?? உங்களுக்கான பதில் இங்கே..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து விமானத்தில் வெறும் நான்கு மணிநேரத்தில் செல்லக்கூடிய தொலைவில் இருக்கின்றது அர்மீனியா (Armenia) எனும் நாடு. இது ஒரு பிரபலமான சுற்றுலாத் தலமாகும். பனி மூடிய மலைகள் மற்றும் தொல்பொருள் தளங்கள் என பார்வையாளர்கள் சுற்றிப்பார்க்க பல்வேறு இடங்கள் இங்கு உள்ளன. சுற்றுலாவாசிகள் சுற்றிப் பார்க்க ஏற்ற இடங்களில் அர்மீனியாவும் ஒன்றாகும்.

அர்மீனியாவுக்கு செல்ல அமீரக குடியிருப்பாளர்களுக்கு பல விமான விருப்பங்களும் உள்ளன. விமான நிறுவனங்கள் ஒரு வழிப்பயணத்திற்கு 500 திர்ஹம் முதல் கட்டணமாக வசூலிக்கின்றன. ஆனால், விசா தேவைகள் என்ன என்பது பற்றி அறிந்திருப்பது மிகவும் அவசியம்.

அர்மீனியாவை பொருத்தவரை சுமார் 40 க்கும் மேற்பட்ட நாட்டினர் விசா இல்லாமல் பயணிக்கலாம். இருப்பினும், செல்லுபடியாகும் எமிரேட்ஸ் ஐடியைக் கொண்ட சில நாட்டவர்கள் அர்மீனியாவுக்கு வந்தவுடன் 21 நாள் ஆன்-அரைவல் விசாவைப் (On-arrival visa) பெறலாம். மற்ற நாட்டவர்கள் ஒரு டிராவல் ஏஜென்ட் மூலமாகவோ அல்லது ஆர்மீனியாவின் eVisas க்கான ஆன்லைன் தளத்தின் மூலமாகவோ விசாவிற்கு விண்ணப்பிக்க வேண்டியிருக்கும்.

அர்மீனியாவில் வருகையின் போது விசாவிற்கு தகுதியானவர் யார்?

அமீரகத்தில் வசிக்கும் இந்தியர்களுக்கு செல்லுபடியாகும் எமிரேட்ஸ் ஐடி இருந்தால், அவர்கள் அர்மீனியாவுக்குச் சென்றவுடன் ஆன்-அரைவல் விசா பெறத் தகுதியுடையவர்கள் ஆவர்.

அர்மீனியாவின் வெளியுறவு துறை அமைச்சகத்தின் (MFA) வலைத்தளத்தின்படி, பாஸ்போர்ட்களை வைத்திருக்கும் இந்தியர்கள் GCC நாடுகளில் வழங்கப்பட்ட செல்லுபடியாகும் விசா அல்லது செல்லுபடியாகும் எமிரேட்ஸ் ஐடியை வழங்கினால் அர்மீனியாவின் எல்லையில் இந்த விசாவைப் பெற்றுக் கொள்ளலாம். பெரும்பாலும் இங்கு இலையுதிர் மற்றும் குளிர்காலத்தில்தான் சுற்றுலாப்பயணிகள் பயணம் செய்ய விரும்புகின்றனர்.

எனவே, நீங்கள் இந்த பருவங்களில் அர்மீனியாவுக்கு பயணிக்க நினைத்தால், துபாய், அபுதாபி மற்றும் ஷார்ஜாவிலிருந்து அமீரகத்தைத் தளமாகக் கொண்ட எமிரேட்ஸ், எதிஹாட், ஃப்ளை துபாய், விஸ் ஏர் மற்றும் ஏர் அரேபியா போன்ற நிறுவனத்தின் விமானங்களில் நேரடியாக பயணிக்கலாம். மேலும், நீங்கள் இ-விசாவைப் பெறுவது உங்களுக்கு கூடுதல் உதவியாகவும் இருக்கும்.

இ-விசாவின் நன்மைகள்:

அமீரகத்தில் வசிக்கும் சில வெளிநாட்டுக் குடியிருப்பாளர்கள் விமான நிலையத்திற்கு வந்தவுடன் விசாவைப் பெறலாம் அல்லது ஆன்லைன் விசா தளத்தின் மூலம் eVisa விற்கு விண்ணப்பிக்கலாம் என்ற இரண்டு விருப்பங்கள் உள்ளன.

பொதுவாக, விமான நிலையத்தில் விசாவைப் பெறுவதற்கு விசா படிவத்தை நிரப்புவதற்கும் மற்றும் வங்கி அறிக்கைகள் அல்லது ரிட்டர்ன் டிக்கெட் போன்ற ஆவணங்களை சமர்பிப்பதற்கும் நீண்ட வரிசையில் காத்திருந்து விசாவை பெற அதிக நேரம் ஆகலாம்.

ஆனால், இ-விசாவானது பாஸ்போர்ட் கட்டுப்பாட்டில் உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தும், மேலும் இந்த விசாவை சில நாட்களிலேயே பெறலாம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், உங்கள் அச்சிடப்பட்ட விசா மற்றும் செல்லுபடியாகும் பாஸ்போர்ட்டை எல்லைக் கட்டுப்பாட்டில் காண்பித்தால் போதும், நாட்டிற்குள் நுழைய எளிதாக அனுமதி கிடைக்கும்.

செலவு மற்றும் காலம்:

ஆன் அரைவல் விசாவில் நீங்கள் 21 நாட்கள் வரை நாட்டில் தங்கலாம். இதற்கு 29 திர்ஹம்கள் வரை மட்டுமே செலவாகும். ஆனால், இ-விசாவில் நீங்கள் 25 திர்ஹம் செலவில் குறைந்தபட்ச காலம் 21 நாட்கள் வரையிலும், 124 திர்ஹம் செலவில் அதிகபட்ச காலம் 120 நாட்கள் வரையிலும் தங்கலாம்.

ஆன்-அரைவல் விசாவிற்குத் தேவையான ஆவணங்கள்:

நீங்கள் ஆன்-அரைவல் விசாவைத் தேர்வு செய்கிறீர்கள் என்றால், விமான நிலையத்தில் பாஸ்போர்ட் மற்றும் எமிரேட்ஸ் ஐடியைத் தவிர கூடுதல் ஆவணங்களை வழங்குமாறு உங்களிடம் கேட்கப்படலாம். அர்மீனியாவின் வெளியுறவு அமைச்சகத்தின் படி, பின்வரும் ஆவணங்கள் உங்களிடம் இருக்க வேண்டும்:

  • ரிட்டர்ன் டிக்கெட்
  • ஹோட்டல் முன்பதிவு விவரங்கள்
  • டிராவல் இன்சூரன்ஸ்
  • வங்கி அறிக்கை

இ-விசாவிற்கு விண்ணப்பிக்கும் படிகள்:

  1. முதலில் நீங்கள் https://evisa.mfa.am/ என்ற ஆன்லைன் விசாக்களுக்கான அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிட வேண்டும்.
  2. அடுத்தபடியாக, ‘ordinary passport’ என்பதைத் தேர்வு செய்து, மெனுவில் கிடைக்கும் நாடுகளின் பட்டியலிலிருந்து உங்கள் தேசியத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. அதன் பிறகு, உங்கள் இ-மெயில் ஐடியை உள்ளிடவும், சில வினாடிகளில் உங்கள் மெயிலில் ஆக்டிவேஷன் லிங்க்கை பெறுவீர்கள். அதில் ‘confirm’ என்ற பொத்தானைக் கிளிக் செய்யவும்.
  4. உங்கள் பாஸ்போர்ட் விவரங்கள், முழுப் பெயர், பிறந்த தேதி, வேலை மற்றும் UAE மற்றும் ஆர்மீனியாவில் உள்ள தொடர்புத் தகவல் (contact information) போன்றவற்றை உள்ளிட்டு விசா விண்ணப்பப் படிவத்தை நிரப்பவும். இவற்றுடன் நீங்கள் தங்கும் ஹோட்டலின் விவரங்களை சேர்க்கலாம் என்றும் கூறப்படுகிறது.
  5. சமீபத்திய பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்தைப் பதிவேற்றவும்.
  6. அடுத்து, உங்கள் பாஸ்போர்ட்டின் நகலை பதிவேற்றவும்.

ஆதார ஆவணங்கள்:

அர்மீனியா இ-விசா போர்ட்டலின் படி, உங்களின் விமான டிக்கெட்டுகள், ஹோட்டல் முன்பதிவு, குடியுரிமை அனுமதி, வங்கி அறிக்கைகள் அல்லது பயணக் காப்பீடு போன்ற கூடுதல் ஆதார ஆவணங்களை சமர்ப்பிக்க பரிந்துரைக்கப்படுகிறது.

  • உங்கள் பயணத்தின் நோக்கம் மற்றும் கால அளவைத் தேர்ந்தெடுக்கவும்.
  • இறுதியாக, நீங்கள் உள்ளிட்ட விவரங்கள் அனைத்தையும் சரிபார்த்து விட்டு, உங்கள் கிரெடிட் அல்லது டெபிட் கார்டு மூலம் போர்டல் மூலம் ஆன்லைனில் கட்டணத்தைச் செலுத்தவும்.
  • அது முடிந்ததும், பரிவர்த்தனை எண்ணுடன் உறுதிப்படுத்தல் இ-மெயிலைப் பெறுவீர்கள். இந்த எண்ணை வைத்து உங்கள் விசா விண்ணப்பத்தின் நிலையைக் கண்காணிக்கலாம்.
  • உங்களின் விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்ட பிறகு, இ-விசா இமெயில் மூலம் அனுப்பப்படும். டிஜிட்டல் விசாவின் பிரிண்ட் அவுட்டை நீங்கள் எடுக்க வேண்டும், ஏனெனில் நீங்கள் அதை பாஸ்போர்ட் கட்டுப்பாட்டில் வழங்க வேண்டும்.

Related Articles

Back to top button
error: Content is protected !!