ADVERTISEMENT

துபாயில் ஸ்மார்ட் பெடஸ்ட்ரியன் கிராசிங் சிஸ்டம் தொடக்கம்..!! – AI டெக்னாலஜி மூலம் பாதசாரிகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் முயற்சி…

Published: 3 Aug 2023, 10:44 AM |
Updated: 3 Aug 2023, 10:58 AM |
Posted By: Menaka

துபாயில் AI மூலம் இயங்கும் பதினான்கு ஸ்மார்ட் பெடஸ்ட்ரியன் கிராசிங் சிஸ்டம் (pedestrian crossing systems) செயல்படுத்தப்பட்டுள்ளன. துபாய் சிலிக்கான் ஒயாசிஸ் (DSO) இல் உள்ள ரியல் டைம் புலனறிதல் மற்றும் கனெக்டிவிட்டி AI ஆனது, பாதசாரிகள், சைக்கிள் ஓட்டுபவர்கள் மற்றும் பிற பாதிக்கப்படக்கூடிய சாலைப் பயனர்களைக் கண்டறிய வடிவமைக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

சுமார் இரண்டு வருட விரிவான சோதனைக்கு பிறகு இந்த தொழில்நுட்பம் செயல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த சிஸ்டத்தின் அல்காரிதம் (algorithm), பெடஸ்ட்ரியன் கிராஸிங்கை அணுகும் வாகனங்கள் மற்றும் பிற சாலைப் பயனர்களைக் கண்காணிக்க வடிவமைக்கப்பட்டுள்ளது மற்றும் இந்த சிஸ்டம் அல்ட்ரா-ஹை ஸ்பீட் மற்றும் குறைந்த தாமதம் கொண்ட 5G இணைப்புடன் பொருத்தப்பட்டுள்ளது.

இது அலெர்ட்களைச் செயல்படுத்த அல்லது செயலிழக்கச் செய்வதற்கும் அவற்றின் கால அளவைக் கட்டுப்படுத்துவதற்கும் நெகிழ்வுத்தன்மையை வழங்குவதுடன் பாதையைக் கடக்கும் காட்சிகளின் அடிப்படையில் தனிப்பயனாக்கம் (customisation) செய்யவும் அனுமதிக்கிறது.

ADVERTISEMENT

மேலும், முன்னரே தீர்மானிக்கப்பட்ட கிராஸிங் நேரத்திற்கு அல்லது கிராஸ்வாக் அல்லது அதன் அருகாமையில் ஒரு பாதசாரி கண்டறியப்படும் வரை எச்சரிக்கைகள் செயலில் இருக்கும்படி கட்டமைக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

அத்துடன் Derq ஆல் உருவாக்கப்பட்ட இந்த சிஸ்டம், நடவடிக்கை கணிப்பு மாதிரிகளைப் (behaviour prediction model) பயன்படுத்துவதாகக் கூறப்படுகிறது. இந்த நவீன டெக்னாலஜியால், சாலைகளில் ஒளிரும் எச்சரிக்கை பலகைகள், எச்சரிக்கை விளக்குகள் மற்றும் பாதசாரிகள் கடக்கும் போக்குவரத்து சிக்னல்களை செயல்படுத்த முடியும்.

ADVERTISEMENT

இந்த புதிய சிஸ்டம் குறித்து துபாய் ஒருங்கிணைந்த பொருளாதார மண்டலங்கள் ஆணையத்தின் (DIEZ) பொறியியல் மற்றும் நிலைத்தன்மைக்கான தலைமை அதிகாரி முயம்மர் அல் கதீரி என்பவர் கூறுகையில், இந்த சிஸ்டம், DSO இன் நிலையை தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட மண்டலமாக உறுதிப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றுவதாகவும், குடியிருப்பாளர்கள் மற்றும் வணிக கூட்டாளர்களுக்கு தடையற்ற மற்றும் அறிவார்ந்த வாழ்க்கை மற்றும் பணி அனுபவத்தை வழங்குவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், Derq உடனான நீண்டகால கூட்டாண்மை மூலம், பாதசாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதிலும், துபாயின் ஸ்மார்ட் சிட்டி நிகழ்ச்சி நிரலை முன்னேற்றுவதிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை நாங்கள் தொடர்ந்து மேற்கொள்வோம் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

அதுமட்டுமின்றி, சாலைகளில் வலுவான பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் சைக்கிள் பயண்பாட்டிற்கான நட்பு நகரமாக துபாயை நிலைநிறுத்திக் கொள்ளவும் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து விருப்பங்களை மேம்படுத்தவும் துபாயின் தொலைநோக்கு பார்வையுடன் Derq ஒத்துழைப்பதாக Derq இன் CEO மற்றும் இணை நிறுவனரும் தெரிவித்துள்ளார்.