அமீரக செய்திகள்

துபாய்: குளோபல் வில்லேஜில் கியோஸ்க், உணவு வண்டிகளை திறக்க டிரேட் லைசன்ஸ் தேவையில்லை.. அறிவிப்பை வெளியிட்ட நிர்வாகம்..!!

துபாயின் குளோபல் வில்லேஜ் சீசன் 28 எதிர்வரும் அக்டோபர் 18 ஆம் தேதி தொடங்குகின்ற நிலையில், கியோஸ்க் மற்றும் உணவு வண்டிகளை அதன் உள்ளே அமைப்பதற்கான ரிஜிஸ்டரேஷன் தற்போது திறக்கப்படும் என குளோபல் வில்லேஜ் நிர்வாகம் அறிவித்துள்ளது.

அத்துடன், கியோஸ்க் மற்றும் உணவு வண்டிகளை அமைப்பதற்கு டிரேட் லைசன்ஸுக்கான தேவை இல்லமாலே ஆபரேட்டர்கள் இந்த முறை ரிஜிஸ்டரேஷனில் பங்கேற்கலாம் என்றும் அது தெரிவித்துள்ளது. மேலும், இங்கு கியோஸ்க் மற்றும் உணவு வண்டி கூட்டாளர்கள் தங்கள் முதலீடுகளில் சிறப்பான வருமானத்தை ஈட்டியுள்ளதாகவும், அவர்களில் சிலர் 1997 முதலே பங்கேற்பாளர்களாக இருப்பதாகவும் குளோபல் வில்லேஜ் கூறியுள்ளது.

மேலும் கூறுகையில், “தொழில்முனைவோருக்கு இது விரிவான சேவைகள் மற்றும் ஆதரவை வழங்குகிறது. இந்த சேவைகளில் கியோஸ்க் கட்டமைப்புகள் மற்றும் பணியாளர் விசாக்களுக்கான உதவிகளும் அடங்கும். டிரேட் லைசன்ஸின் தேவை நீக்கப்பட்டதால், தொழில்முனைவோர் தங்கள் F&B வணிகங்களை தடையின்றி அமைக்கலாம்” என்றும் குளோபல் வில்லேஜ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அதுபோல, சரக்கு மேலாண்மைக்கான ஸ்டோரேஜ் வசதிகளை வழங்குவதுடன் வர்த்தக நிறுவனங்களுடன் இணைந்து வர்த்தகத்தை ஆதரிப்பதாகவும், கூடுதலாக பங்கேற்பாளர்களுக்கு ஃபெடரல் டேக்ஸ் அத்தாரிட்டி ரிஜிஸ்டரேஷன் ஆதரவையும்  வழங்குவதாகவும் குளோபல் வில்லேஜ் கூறியுள்ளது.

மேலும், வரி விதிமுறைகளுக்கு இணங்குவதை உறுதி செய்வது மட்டுமின்றி, பணம் செலுத்தும் செயல்முறையை வாடிக்கையாளர்களுக்கு எளிதாக்குவதற்கு பாயின்ட்-ஆஃப்-சேல் (POS) அமைப்புகள் மற்றும் இ-பேமண்ட் டெர்மினல்களைப் பெறுவதிலும் பங்கேற்பாளர்களுக்கு உதவுவதாகவும் அது குறிப்பிட்டுள்ளது.

அமீரகத்தில் மிகவும் பிரபலமான பொழுதுபோக்கு இடங்களில் ஒன்றான குளோபல் வில்லேஜ், அதன் கடந்த ஆண்டு சீசனில் உலகம் முழுவதிலும் இருந்து 9 மில்லியன் பார்வையாளர்களை ஈர்த்துள்ளது. மேலும் இந்த ஆண்டு வழக்கத்தை விடவும் ஒரு வாரம் முன்னதாகவே அதாவது அக்டோபர் 18ம் தேதியே திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Back to top button
error: Content is protected !!