அமீரக செய்திகள்

UAE Jobs: 7,000 திர்ஹம்களுக்கும் அதிகமான மாதாந்திர சம்பளத்துடன் டிரைவர் வேலை..!! தேவையான தகுதி, வயது வரம்பு மற்றும் நிபந்தனை உள்ளிட்ட விவரங்கள் வெளியீடு…!!

துபாய் பொதுப் போக்குவரத்து நிறுவனங்களில் ஒன்றான துபாய் டாக்ஸி கார்ப்பரேஷன் (DTC) லிமோசின் டிரைவர்கள், ஸ்கூல் பஸ் டிரைவர்கள் மற்றும் பஸ் சூப்பர்வைசர் போன்ற பணிகளுக்கு அனைத்து நாட்டினரையும் பணியமர்த்துவதற்கான நேர்காணல்களை நடத்த உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் DTC, இந்த பணிகள் அனைத்திற்குமான சம்பளம், தகுதி, வயது வரம்பு மற்றும் நிபந்தனைகளையும் வெளியிட்டுள்ளது. அதன்படி, லிமோசின் டிரைவர் பணிக்கு 7,000 திர்ஹம்களுக்கும் அதிகமான மாதாந்திர சம்பளத்தை வழங்குவதால், இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் இரண்டு வருட அனுபவம் மற்றும் சொந்த நாடு, அமீரகம் அல்லது GCC ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

அதுபோல, பள்ளி பேருந்து ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது 23 முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும். அமீரக ஓட்டுநர் உரிமம் (கனரக வாகன எண். 6) அவசியம். இதற்கு மாதம் 2,700 திர்ஹம் சம்பளம் வழங்கப்படும்.

பஸ் சூப்பர்வைசர் பணிக்கு, 23 முதல் 45 வயதுடைய பெண் விண்ணப்பதாரர்கள் பணியமர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நேர்காணலில் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு 1,500 முதல் 1,800 திர்ஹம் வரை மாத சம்பளம் மற்றும் பலன்கள் வழங்கப்படும்.

எதிர்வரும் ஆகஸ்ட் 11, வெள்ளிக்கிழமை காலை 7 மணி முதல் 11 மணி வரை டிரைவர் மற்றும் சூப்பர்வைசர் பணிகளுக்கான நேர்காணல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, இது Privilege Labour Recruitment Office M-11, அபு ஹெயில் மையத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2022 ஏப்ரலில், DTC ஆப் மூலம் அதிக எண்ணிக்கையிலான பயணங்களைச் செய்த 10 ஓட்டுநர்களை துபாய் டாக்ஸி கௌரவித்துள்ளது. மேலும், துபாய் எமிரேட் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளுக்கு தனது சேவைகளை விரிவுபடுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக, 20,000க்கும் மேற்பட்ட மாணவர்களை உள்ளடக்கிய 58 அரசுப் பள்ளிகளை அதன் DTC ஸ்கூல் பஸ் ஆப்-இல் ஒருங்கிணைக்கத் தொடங்கியது. தற்போது, DTCயின் ஸ்கூல் பஸ்கள் சுமார் 800 வழித்தடங்களில் போக்குவரத்து சேவைகளை வழங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!