அமீரக செய்திகள்

துபாய்: மலிவான டாக்ஸி முதல் ஆடம்பர டாக்ஸி வரை..!! கட்டணம், முன்பதிவு, பிரத்யேக சேவைகள் உள்ளிட்ட அனைத்து விபரங்களும் உள்ளே..!!

துபாயின் டாக்ஸி சேவைகளானது எளிதான போக்குவரத்து முறைகளில் ஒன்றாகும். பயணிகளுக்கு மிகச் சிறந்த அனுபவத்தை வழங்க டாக்ஸி சேவைகளுக்கான ஆப்ஸ் உள்ளன. இருப்பினும், தற்போது, துபாயில் ஆறு முக்கிய நிறுவனங்கள் இந்த டாக்ஸி சேவையில் முன்னணியில் இருக்கின்றன.

இதில் உங்களுக்கு RTAவின் துபாய் டாக்ஸி முதல் யாங்கோ, உபெர் மற்றும் கரீம் போன்ற சர்வதேச ரைடு-ஹைலிங் ஆப்ஸ் வரையிலான விருப்பங்கள் உள்ளன. எனவே, துபாயில் டாக்ஸிகளை எவ்வாறு முன்பதிவு செய்வது மற்றும் அவற்றின் கட்டணம் என்ன என்பது உட்பட பல்வேறு விவரங்களைப் பற்றி இங்கு பார்க்கலாம்.

DXBயில் எளிதாகக் கிடைக்கும் டாக்ஸி:

துபாய் சர்வதேச விமான நிலையத்திலிருந்து (DXB) நீங்கள் ஒரு டாக்ஸியை எடுப்பது மிகவும் எளிது. ஒவ்வொரு டெர்மினலிலும் ஒரு பிரத்யேக டாக்ஸி ரேங்க் உள்ளது, அங்கு 24 மணி நேரமும் பயணிகளுக்காக டாக்ஸிகள் காத்துக்கொண்டிருக்கும்.

எனவே, DXBயில் இருந்து துபாய்க்கு ஒரு டாக்ஸியைப் பெறும்போது, ​​மீட்டருக்கு 25 திர்ஹம்களில் இருந்து தொடங்கும். அங்கிருந்து ஒரு கிலோமீட்டர் பயணத்திற்கு 1.96 திர்ஹம்ஸ் கட்டணமாகும்.

மேலும், நீங்கள் Uber இன் டாக்ஸி சேவையைப் பயன்படுத்த விரும்பினால், Uber ஆப்-இல் உங்கள் லொக்கேஷனை துபாய் சர்வதேச விமான நிலையமாக (DXB) தேர்ந்தெடுக்கவும். அதன்பிறகு, நீங்கள் எந்த டெர்மினலில் இருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்து, உங்கள் பயணம் உறுதிசெய்யப்பட்டு, உங்கள் பிக்-அப் பாயின்ட் தெரியவரும்.

துபாயிலிருந்து அபுதாபிக்கு டாக்ஸி சேவை:

நீங்கள் துபாயிலிருந்து அபுதாபிக்கு 250 முதல் 300 திர்ஹம் வரையிலான செலவில், ஒன்-வே பயணத்திற்கு ஒரு டாக்ஸியைப் பெறலாம். இதற்கு நீங்கள் கரீம் ஆப் இல் முன்பதிவு செய்ய வேண்டும்.

துபாயில் டாக்ஸி சேவைக்கு ரைட்-ஹெய்லிங் ஆப்ஸ்:

Blacklane 

துபாயில் உள்ள Chauffeur நிறுவனத்தின் Blacklane துபாய் விமான நிலையத்திலிருந்து நகரத்திற்கு டாக்ஸி சேவைகளை வழங்குகிறது. நீங்கள் ஆடம்பரமாக பயணிக்க விரும்புகிறீர்கள் என்றால் இந்த டாக்ஸி சேவையினை மொபைல் ஆப்-ஐப் பயன்படுத்தி முன்பதிவு செய்யலாம். மேலும், டிரைவர் உங்களுக்காக ஒரு மணி நேரம் வரை எந்தவித கூடுதல் கட்டணமுமின்றி காத்திருக்கும் வசதியும் இதில் உள்ளது.

முன்பதிவு செய்வது எப்படி: இணையதளம் வழியாக முன்பதிவு செய்யலாம்.

கட்டணம்: நீங்கள் தேர்ந்தெடுக்கும் கார் வகை மற்றும் பயணிக்கும் தூரத்தைப் பொறுத்து கட்டணம் மாறுபடும்.

கரீம் (Careem):

நீங்கள் துபாயில் டாக்ஸிகளைப் பயன்படுத்த விரும்பினால், ‘Careem’ ஆப்-ஐ டவுன்லோட் செய்ய வேண்டும். அதுபோல, துபாய் மற்றும் மற்ற எமிரேட்டுகளுக்கு இடையே நகரங்களுக்கு இடையேயான பயணங்களுக்கு Hala Taxi ஐ முன்பதிவு செய்யலாம். இங்கே நீங்கள் பலவிதமான கார்களைத் தேர்வு செய்ய முடியும்.

  • முன்பதிவு: மொபைல் ஆப் வழியாக முன்பதிவு செய்யலாம்.
  • கட்டணம்: டாக்ஸிக்கான ஆரம்பக் கட்டணம், ஒரு கிமீ வீதம் மற்றும் காத்திருப்பு நேரம் ஆகியவை உட்பட நீங்கள் தேர்ந்தெடுத்த வாகனம் மற்றும் பயணிக்கும் தொலைவைப் பொறுத்து கட்டணம் மாறுபடும். கூடுதல் விபரங்களுக்கு https://careem.com/ இங்கே கிளிக் செய்யவும்.

துபாய் டாக்ஸி கார்ப்பரேஷன்:

இந்த கார்கள் துபாய் டாக்ஸி கார்ப்பரேஷனுக்குச் சொந்தமான டாக்ஸிகள் ஆகும். நீங்கள்  ஆங்காங்கே கிடைக்கும் டாக்ஸிகளிலும் செல்லலாம் அல்லது முன்கூட்டியே முன்பதிவு செய்யலாம்.

  • முன்பதிவு : 800 880 88 என்ற எண்ணிற்கு அழைக்கவும் அல்லது DTC மொபைல் ஆப் வழியாகப் பதிவு செய்யவும்.
  • கட்டணம்: காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மீட்டர் 5 திர்ஹ்ம்களாகவும், இரவு 10 மணி முதல் 6 மணி வரை 5.5 திர்ஹம்களாகவும், ஒரு கிமீக்கு 2.19 திர்ஹம்களாகவும் இந்த டாக்ஸி கட்டணம் இருக்கும்.

ஹலா டாக்ஸி (Hala Taxi):

துபாயில் மிகவும் மலிவான டாக்ஸி சேவைகளில் ஹலா டாக்ஸி ஒன்றாகும். Careem ஆப்-இல் பட்டியலிடப்பட்டுள்ள ஹலா டாக்ஸி விருப்பத்தில் சென்று, உங்கள் பிக்-அப் மற்றும் டிராப்-ஆஃப் இடத்தை நீங்கள் தேர்வு செய்யலாம் மற்றும் கார் அல்லது வேனுக்கு இடையே தேர்வு செய்யும் விருப்பமும் உங்களுக்கு உள்ளது.

  • முன்பதிவு: Careem ஆப்-இல் சென்று “ஹாலா டாக்ஸி” விருப்பத்தைத் தேர்வு செய்யவும்.
  • கட்டணம்: 8 திர்ஹம் தொடக்கக் கட்டணத்துடன் குறைந்தபட்சம் 12 திர்ஹம் மற்றும் ஒரு கி.மீ.க்கு 1.91 திர்ஹம் வசூலிக்கப்படும். https://halaride.com/ மூலம் ஹலா டாக்ஸி சேவையைப் பெறலாம்.

யாங்கோ (Yango):

யாங்கோ துபாய்க்கு புதிய டாக்ஸி சேவை வழங்குநராக இருக்கலாம். ஆனால், உலகம் முழுவதும் 12 நாடுகளுக்கும் மேலாக இந்த சேவை உள்ளது. இந்த யாங்கோ ஒரே ஃபோனில் பல கார்களை முன்பதிவு செய்யும் திறன் மற்றும் மாற்று பிக்-அப் புள்ளிகளைக் கண்டறியும் திறன் உள்ளிட்ட அம்சங்களைக் கொண்டுள்ளது. லெக்ஸஸ் ES உள்ளிட்ட கார்கள் இதில் வழங்கப்படும்.

  • முன்பதிவு: Android மற்றும் iOS-ல் மொபைல் ஆப் கிடைக்கிறது.
  • கட்டணம்: தொடக்கக் கட்டணம், ஒரு கிமீ வீதம் மற்றும் காத்திருக்கும் நேரம் ஆகியவை உட்பட தேர்ந்தெடுக்கப்பட்ட வாகனம் மற்றும் பயணித்த தூரத்தைப் பொறுத்து மொத்த கட்டணம் மாறுபடும்.
  • யாங்கோ-https://yango.com/en_fi/

உபெர்(Uber):

Uber சுமார் 71 நாடுகளில் 10,000 நகரங்களில் இயங்கும் டாக்ஸி நிறுவனமாகும். இதில் நீங்கள் சென்றடைய வேண்டிய இடத்தைத் தேர்வு செய்யலாம். உங்கள் பிக்-அப்பை உறுதிசெய்வதற்கு முன், கட்டண மதிப்பீட்டையும் பெறலாம். மேலும், 30 நாட்களுக்கு முன்னதாகவே பயணங்களை முன்பதிவு செய்யும் வசதியும் இதில் உள்ளது.

  • முன்பதிவு செய்யும் வழிகள்: மொபைலில் உள்ள Uber ஆப் மூலம் முன்பதிவு செய்யலாம்.
  • கட்டணம்: நீண்ட தொலைவிற்கு சிக்கனமான விலையில் பயணத்தை அனுபவிக்கலாம்.
  • Uber-https://uber.com/

XXRIDE:

XXRIDE என்பது துபாயில் இயங்கும் புதிய டாக்ஸி சேவைகளில் ஒன்றாகும், மேலும் இது உலகளாவிய அங்கீகாரத்துடன் வருகிறது. இந்த நிறுவனத்திலிருந்து நீங்கள் ரைட்ஷேரிங் மற்றும் ரைட்-ஹைய்லிங் சேவையைப் பயன்படுத்தலாம்.

  • முன்பதிவு: மொபைல் ஆப் பயன்படுத்தி முன்பதிவு செய்யலாம்.
  • கட்டணம்: தொடக்கக் கட்டணம், ஒரு கிமீ வீதம் மற்றும் காத்திருக்கும் நேரம் ஆகியவை உட்பட தேர்ந்தெடுக்கப்பட்ட வாகனம் மற்றும் பயணித்த தூரத்தைப் பொறுத்து மொத்த கட்டணம் மாறுபடும்.
  • XXRIDE-@xxride_official (04 295 9942).

Related Articles

Back to top button
error: Content is protected !!