ADVERTISEMENT

UAE: 100 வெற்றியாளர்களுக்கு 2 கிலோ தங்கத்தை வாரி வழங்கவுள்ள எமிரேட்ஸ் டிரா!! புதிய அறிவிப்பு வெளியீடு..!!

Published: 30 Aug 2023, 12:21 PM |
Updated: 30 Aug 2023, 12:42 PM |
Posted By: Menaka

அமீரகத்தில் செயல்பட்டு வரும் ராஃபிள் டிராக்களில் ஒன்றான எமிரேட்ஸ் டிராவில் பங்கு பெறும் பங்கேற்பாளர்கள், இந்த வார இறுதியில் குறிப்பாக செப்டம்பர் 3, 2023 அன்று தங்கம் வெல்லும் அற்புதமான வாய்ப்பைப் பெறுவார்கள் என்று எமிரேட்ஸ் டிரா  அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

எமிரேட்ஸ் டிரா வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, EASY6, FAST5 மற்றும் MEGA7 வாராந்திர குலுக்கல்கள் மூலம் ரொக்கப் பரிசுகளை வெல்வது மட்டுமின்றி, 100 பங்கேற்பாளர்கள் கோல்டு ரேஃபிளில் மொத்தம் 2 கிலோ தங்க நாணயங்களை வெல்லலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வார இறுதியில் நடைபெற்ற எமிரேட்ஸ் டிராவில், அனைத்து கேம்களிலும் சுமார் 11,372 வெற்றியாளர்கள் மொத்தப் பரிசுத் தொகையாக 916,117 திர்ஹம்களுக்கு மேல் வென்றுள்ளதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

டிராவில் பங்கேற்பது எப்படி?

எமிரேட்ஸ் டிரா கோல்ட் ரேஃபிளில் பங்கேற்பதற்கு செப்டம்பர் 3, 2023க்குள் EASY6, FAST5 மற்றும் MEGA7 கேம்களுக்கான டிக்கெட்டுகளை வாங்க வேண்டும். இதனை வாங்கும் போது குறிப்பிட்ட ராஃபிள் டிராவில் மட்டுமல்லாமல், நீங்கள் கோல்ட் ரேஃபிளிலும் இலவசமாக பங்கு பெறலாம் என கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

கோல்டு ரேஃபிள் விவரங்கள்:

இந்த போட்டியில் ரேண்டம் நம்பர் ஜெனரேட்டரைப் (Random Number Generator) பயன்படுத்தி 100 வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மூன்று டிரா பிரிவுகளாக வெவ்வேறு தேதிகளில் நடைபெறும்:

  • EASY6: செப்டம்பர் 1 ஆம் தேதி நடைபெறும் நேரடி EASY6 டிராவின் போது, ​​30 வெற்றியாளர்கள் தலா 15 கிராம் தங்கத்தைப் பெறுவார்கள்.
  • FAST5: செப்டம்பர் 2 அன்று, FAST5 நேரலை டிராவில் 60 வெற்றியாளர்கள் 20 கிராம் தங்கத்தைப் பெறுவார்கள்.
  • MEGA7: செப்டம்பர் 3இல் நடைபெறும்  MEGA7 லைவ் டிராவில் 10 வெற்றியாளர்கள் ஒவ்வொருவரும் 50 கிராம் தங்கத்தை எடுத்துச் செல்வார்கள்.

மேலும், எமிரேட்ஸ் டிரா, அதன் வெற்றியாளர்களுக்கு தங்க நாணயங்கள், ரொக்கப் பரிசுகள் என்று வாரி வழங்குவது மட்டுமல்லாமல், அமீரக அரசாங்கத்தின் நிலைத்தன்மை பணியை ஆதரித்து வருவதாகத் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, ஐக்கிய அரபு அமீரகத்தின் பவளப்பாறை மறுசீரமைப்பு திட்டத்தின் (Coral Reef Restoration) மூலம், நாட்டின் கடல் பல்லுயிர் பெருக்கத்தை செழுமைப்படுத்துவதற்கு எமிரேட்ஸ் டிராவின் முயற்சிகள் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

மேலும் வரவிருக்கும் கேம்கள் யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற எமிரேட்ஸ் டிராவின் அதிகாரப்பூர்வ டிஜிட்டல் தளங்களில் நேரலையாக ஒளிபரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு 800 7777 7777 என்ற எண்ணில் வாடிக்கையாளர் ஆதரவு மையத்தைத் தொடர்பு கொள்ளவும் அல்லது https://www.emiratesdraw.com/ ஐப் பார்வையிடுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.