அமீரக செய்திகள்

UAE: ‘Rent A Car’-ல் வாகனத்தை எடுக்க வழிமுறைகள் என்ன..?? காரை வாடகைக்கு எடுத்து விபத்து ஏற்பட்டால் என்ன செய்வது..??

அமீரகத்தில் வசிக்கும் நபர்கள் தங்களுக்கு சொந்தமாக வாகனம் இல்லையென்றால் விடுமுறை நாட்களில் பயணம் மேற்கொள்ள காரை வாடகைக்கு எடுத்து ஓட்டும் வசதி இருப்பது நாம் அனைவரும் அறிந்ததே. இதன் மூலம் கார் சொந்தமாக வாங்க வசதி இல்லாதவர்கள் ‘Rent A Car’ வழியாக ஒரு சில மணி நேரங்களுக்கோ அல்லது சில நாட்களுக்கோ காரை பயன்படுத்திக் கொள்ளலாம்.

அமீரகத்தில் வசிப்பவர்கள் மட்டுமல்லாமல் மற்ற வளைகுடா நாடுகளில் இருந்து அமீரகத்திற்கு சுற்றுலா வருபவர்களும் வளைகுடா நாடுகளின் டிரைவிங் லைசென்ஸை பயன்படுத்தி அமீரகத்தில் வாகனம் ஓட்டலாம். இவ்வாறு அமீரகத்திற்கு வருபவர்கள் ‘Rent A Car’ மூலமாக வாடகைக்கு கார் எடுத்து அமீரகத்தை சுற்றிப் பார்க்கலாம்.

அதன்படி தினசரி, வாராந்திர மற்றும் மாதாந்திர அடிப்படையில் காரை வாடகைக்கு எடுக்கலாம். நீங்கள் வாடகைக்கு எடுக்கும் கார் மற்றும் நீங்கள் பயன்படுத்தும் நிறுவனத்தைப் பொறுத்து விலை மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

கார் வாடகை விவரங்கள்:

>> ஒரு முன்னணி வாடகை நிறுவனம் Toyota Yaris 1.5L வகை காரை ஒரு நாளைக்கு 70 திர்ஹம், ஒரு வாரத்திற்கு 536 திர்ஹம் மற்றும் ஒரு மாதத்திற்கு 1,575 திர்ஹம்களுக்கும் வழங்குகிறது. அதுபோல, ஒரு Montero Sport 3.0 HL ஐ நாளொன்றுக்கு 189 திர்ஹம், வாரத்திற்கு 1,134 திர்ஹம் மற்றும் மாதத்திற்கு 31,50 திர்ஹம் என்ற விலையில் வாடகைக்கு எடுக்கலாம்.

>> அதேசமயம், நீங்கள் துபாயில் ஆடம்பரமான சொகுசுப் பயணத்தை அனுபவிக்க விரும்பினால், நீங்கள் ஒரு ஃபெராரியை வாடகைக்கு எடுக்கலாம், ஆனால் அதற்கு நிறைய செலவாகும். நீங்கள் ஃபெராரி SF90 Stradale காரை ஒரு நாளைக்கு 10,000 திர்ஹம்களில் வாடகைக்கு எடுக்கலாம். அத்துடன் ஒரு அஸ்தான் மார்ட்டின் வான்டேஜ் (Aston Martin Vantage) காரை ஒரு நாளைக்கு 2,500 திர்ஹம்களில் எடுக்கலாம்.

>> நீங்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருத்தில் கொள்பவராக இருந்தால், உங்களுக்காக பல கார் வாடகை நிறுவனங்கள் இப்போது மின்சார மற்றும் ஹைப்ரிட் வாகனங்களுக்கான விருப்பங்களை வழங்குகின்றன. அதுமட்டுமின்றி, மணிநேர அடிப்படையில் பிரீமியம் கார்களை வாடகைக்கு எடுக்கும் விருப்பத்தையும் வழங்குகின்றன.

கூடுதல் செலவுகள்:

>> நீங்கள் எந்தவகைக் காரை வாடகைக்கு எடுத்தாலும், இறுதியாக பில்லில் 5 சதவீத VAT வரியை செலுத்த வேண்டும். மேலும், எந்த நிறுவனத்தின் காரை எடுத்திருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்து டோல் கட்டணங்கள் மாறுபடலாம்.

>> துபாயில் சாலிக் கேட்டைக் கடக்கும் ஒவ்வொரு முறையும் 5 திர்ஹம்ஸ் முதல் 6 திர்ஹம் வரை ஒவ்வொரு நிறுவனத்தைப் பொறுத்து கட்டணம் வசூலிக்கப்படுகிறது. துபாயில் தற்போது 8 சாலிக் கேட் செயல்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

>> எனவே, நீங்கள் நாட்டில் முக்கிய நெடுஞ்சாலைகளை அடிக்கடி கடக்க நினைத்தால், அதற்குண்டான செலவையும் கணக்கிடலாம். அத்துடன் வாகனப் பதிவுக் கட்டணமாக நாளொன்றுக்கு 5 திர்ஹம்கள், அதிகபட்சமாக மாதம் 75 திர்ஹம்கள் வரை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆவணங்களை முடிக்கும் செயல்முறை:

>> அமீரக குடியிருப்பாளர்கள் தங்கள் எமிரேட்ஸ் ஐடி மற்றும் UAE டிரைவிங் லைசென்ஸை சமர்ப்பிக்க வேண்டும். அதேவேளை, சுற்றுலாப்பயணிகள் தங்கள் பாஸ்போர்ட், சுற்றுலா விசா மற்றும் டிரைவிங் லைசென்ஸ் அல்லது சர்வதேச ஓட்டுநர் அனுமதி ஆகியவற்றைக் கொண்டு வர வேண்டும். டிஜிட்டல் நகல்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

>> பொதுவாக சுற்றுலாப் பயணிகளுக்கு காரை வாடகைக்கு எடுப்பதற்கு முழுப் பணத்தையும் செலுத்த வேண்டும் மற்றும் அவர்கள் ஏதேனும் போக்குவரத்துக் குற்றத்தைச் செய்தால், அவர்களின் கிரெடிட் கார்டில் 1,000 முதல் 4,000 திர்ஹம் வரை நிறுவனம் தடுத்து வைக்கலாம். பிரீமியம் கார்களுக்கு இந்த டெபாசிட்  பணம் அதிகம்.

>> இந்தத் தொகை காரைத் திருப்பிக் கொடுத்த சில நாட்களுக்குப் பிறகு விடுவிக்கப்படும். காரைத் திருப்பி அனுப்பும் போது சிஸ்டத்தில் காட்டப்படாத அபராதம் அவர்கள் பெறவில்லை என்பதை உறுதிப்படுத்துவதற்காக இது செய்யப்படுகிறது.

விபத்து ஏற்பட்டால் என்ன செய்வது?

வாடகைக் கார்கள் காப்பீடு செய்யப்பட்டுள்ளதால், எந்த விபத்தும் மற்ற விபத்துகளைப் போலவே கையாளப்படும். விபத்தில் சிக்கிய வாகன ஓட்டிகளும் மற்ற ஓட்டுநர்களைப் போன்ற அதே விதிகளை எதிர்கொள்வார்கள், இதில் தீவிரமான வழக்குகளில் காவல் நிலையம் அல்லது நீதிமன்றத்திற்குச் செல்லலாம்.

ஒருவேளை குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால், காப்பீடு எந்த சேதத்தையும் ஈடுகட்டாது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில், வாடிக்கையாளரிடமிருந்து பணத்தை மீட்டெடுக்க வாடகை நிறுவனத்திற்கு உரிமை உண்டு, ஆனால் டிரைவர் நண்பரின் காரை ஓட்டினால், அவரே அனைத்து சேதங்களுக்கும் காவல்துறை அபராதங்களுக்கும் பொறுப்பாவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதே காரை நீங்கள் ஓமான் நோக்கி ஓட்டலாமா?

எல்லா நிறுவனங்களும் இதை அனுமதிப்பதில்லை என்றாலும், இதை அனுமதிக்கும் சில நிறுவனங்கள் ஒரு வழி கார் வாடகைக் கட்டணத்தையும் வேறு சில கூடுதல் கட்டணங்களையும் வசூலிக்கும். உங்களுக்கு விரிவான காப்பீடு மற்றும் கார் நிறுவனத்திடமிருந்து NOC தேவைப்படும்.

சிட்டி காரை ஆஃப்-ரோடிற்கு பயன்படுத்தலாமா?

பாலைவனத்தில் வாகனம் ஓட்டுவதற்கு நீங்கள் செடானைப் பயன்படுத்த முடியாது. இதனால் ஏற்படக்கூடிய எந்த சேதத்திற்கும் நீங்கள் மட்டுமே முழுப் பொறுப்பாளியாவீர்கள்.

Related Articles

Back to top button
error: Content is protected !!