ADVERTISEMENT

வளைகுடா நாடுகளில் வசிப்பவர்கள் அமீரகத்திற்கு பயணிக்க இ-விசா அப்ளை செய்வது எப்படி..??

Published: 13 Aug 2023, 6:41 PM |
Updated: 13 Aug 2023, 7:07 PM |
Posted By: jesmi

நீங்கள் வளைகுடா (GCC) நாடுகளில் (சவூதி அரேபியா, குவைத், கத்தார், ஓமான், பஹ்ரைன்) வசிப்பவராக இருந்து, விடுமுறை அல்லது வேலைப் பயணத்திற்காக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செல்ல விரும்பினால், 30 நாள் இ-விசாவுக்கு ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம். பலர் இது போன்று மற்ற வளைகுடா நாடுகளில் இருந்து அமீரகத்திற்கு வருகை புரிந்தாலும் ஒரு சிலருக்கு இது குறித்த தெளிவான விபரங்கள் தெரிவதில்லை. அதற்காகவே இந்த பதிவு.

ADVERTISEMENT

GCC குடியிருப்பாளர்களுக்கான eVisa விண்ணப்பமானது அமீரகத்தின் அடையாளம், குடியுரிமை, சுங்கம் மற்றும் துறைமுக பாதுகாப்புக்கான ஃபெடரல் ஆணையத்தின் (ICP) அதிகாரப்பூர்வ ஆன்லைன் சேவை தளமான smartservices.icp.gov.ae மூலம் கிடைக்கிறது. இதனை விண்ணப்பதாரர்கள் எளிதில் பெற்றுக்கொள்ளலாம். அது குறித்த விரிவான தகவல்களை கீழே காணலாம்.

eVisa க்கு தேவையான ஆவணங்கள்:

• GCC நாடுகளில் ஒன்றின் செல்லுபடியாகும் ரெசிடென்ஸ் விசா – குறைந்தபட்சம் மூன்று மாதங்களுக்கு விசா செல்லுபடியாகும் நிலையில் இருக்க வேண்டும்.
• செல்லுபடியாகும் பாஸ்போர்ட் நகல், பாஸ்போர்ட் குறைந்தது ஆறு மாதங்களுக்கு செல்லுபடியாகும் நிலையில் இருக்க வேண்டும்.
• பாஸ்போர்ட் அளவு வண்ண புகைப்படம். நீங்கள் பாஸ்போர்ட் புகைப்படத்தை பதிவேற்றும் முன் அது ICP ஆல் கட்டாயப்படுத்தப்பட்ட தரநிலைகள் மற்றும் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.

ADVERTISEMENT

உங்கள் மனைவி அல்லது குழந்தைகள் போன்ற குடும்ப உறுப்பினர்களுடன் நீங்கள் பயணம் செய்கிறீர்கள் என்றால், அவர்களின் விசாவிற்கு விண்ணப்பிக்கும் போது நீங்கள் உறவினருக்கான சான்றை வழங்க வேண்டும். கூடுதலாக, சில நாடுகளை சேர்ந்தவர்கள் தங்கள் சொந்த நாட்டின் தேசிய ஐடியை வழங்க வேண்டியிருக்கலாம். விண்ணப்பத்தில் நீங்கள் வழங்கிய தகவலைப் பொறுத்து, தேவையான ஆவணங்கள் மாறுபடலாம் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

செலவு:

  •  கோரிக்கை கட்டணம் (Request Fees) : 100 திர்ஹம்ஸ்
  • வெளியீட்டு கட்டணம் (Issue fees) : 100 திர்ஹம்ஸ்
  • ஸ்மார்ட் சேவை கட்டணம்: 100 திர்ஹம்ஸ்
  • இ-சேவை கட்டணம்: 28 திர்ஹம்ஸ்
  • ICP கட்டணம்: 22 திர்ஹம்ஸ்

மொத்தம்: 350 திர்ஹம்ஸ்

ADVERTISEMENT

ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

>> ICP ஸ்மார்ட் சர்வீஸ் பிளாட்ஃபார்ம் மூலம் ஆன்லைனில் eVisa விண்ணப்பத்தை அணுக, உங்களிடம் UAE PASS கணக்கு இருக்க வேண்டும், இது அமீரகத்தில் உள்ள குடிமக்கள், குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாவாசிகளுக்கான தேசிய டிஜிட்டல் அடையாளமாகும்.

>> பின் இணையதளத்திற்குச் சென்று (smartservices.icp.gov.ae) உங்கள் மின்னஞ்சல் மற்றும் கடவுச்சொல் அல்லது உங்கள் UAE PASS கணக்குடன் உள்நுழைய வேண்டும்.

>> அடுத்து, நீங்கள் ஒரு தனிப்பட்ட டாஷ்போர்டுக்கு அனுப்பப்படுவீர்கள்.

>> அடுத்து, நீங்கள் பயணம் செய்யும் எமிரேட்டின் ICP துறையைக் கிளிக் செய்யவும், உதாரணமாக – அடையாள மற்றும் குடியுரிமைக்கான ஃபெடரல் அத்தாரிட்டி\அபுதாபி அல்லது ஷார்ஜா.

>> பிறகு, ‘GCC குடியிருப்பாளருக்கான நுழைவு அனுமதியை வழங்கு (Issue Entry Permit For GCC Resident)’ என்ற சேவையைத் தேடவும்.

>> ‘Start Service’ என்பதைக் கிளிக் செய்யவும்

>> விண்ணப்ப படிவத்தில் உள்ளிடப்பட்ட தகவலின் அடிப்படையில், விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை பதிவேற்றவும்.

>> அதன் பிறகு, உங்கள் விசா விண்ணப்பத்தின் நிலையைக் கண்காணிக்கப் பயன்படுத்தக்கூடிய பரிவர்த்தனை எண்/கோரிக்கை எண்ணைப் (transaction number/request number) பெறுவீர்கள்.

UAE விசா விண்ணப்பத்தை ஆன்லைனில் எவ்வாறு கண்காணிப்பது?

1. இணையதளத்தைப் பார்வையிடவும் – smartservices.icp.gov.ae .
2. இணையதளத்தின் முகப்புப் பக்கத்தில், ‘Quick Search’ பட்டியில் 15 இலக்க கோரிக்கை எண்ணை உள்ளிடவும்.
3. ‘Inquiry’ பொத்தானைக் கிளிக் செய்யவும்

ICP அமைப்பு உங்கள் விண்ணப்பத்தின் நிலையைக் காண்பிக்கும்.

இவிசா எத்தனை நாட்களுக்குள் வழங்கப்படும்?

ஒரு முறை ஒப்புதல் அளிக்கப்பட்ட விசிட் விசா வழங்குவதற்கு தோராயமாக இரண்டு முதல் ஐந்து வேலை நாட்கள் ஆகும். விண்ணப்பப் படிவத்தில் நீங்கள் வழங்கிய மின்னஞ்சல் முகவரியில் eVisaவைப் பெறுவீர்கள்.