அமீரக செய்திகள்

UAE: அபுதாபியில் வீசும் புழுதிப்புயல்..!! மஞ்சள், ஆரஞ்சு எச்சரிக்கைகளை வெளியிட்ட வானிலை மையம்..!! குடியிருப்பாளர்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்…

அமீரகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் வரை ஆங்காங்கே மழை பெய்த நிலையில் தற்பொழுது மீண்டும் அனைத்து இடங்களிலும் வெயிலின் தாக்கம் காணப்படுகின்றது. இந்திலையில் அபுதாபியின் சில பகுதிகளில் தூசி நிறைந்த வானிலை காணப்படுவதால், ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கைகளை வெளியிட்டுள்ளது.

அபுதாபி எமிரேட்டில் ஆங்காங்கே புழுதிப்புயல் வீசி வருவதால், குறிப்பாக எமிரேட்டின் ஹப்ஷான் பகுதியில் குடியிருப்பாளர்கள் இன்று காலை முதல் மாலை 4.30 மணி வரை கூடுதல் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு NCM அறிவுறுத்தியுள்ளது.

மேலும், தூசி நிறைந்த வானிலையின் விளைவாக, சாலைகளில் தெரிவுநிலை மோசமாக இருக்கும் என்பதால், வாகன ஓட்டிகள் மெதுவாகவும் கவனமாகவும் இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

NCM அறிவிப்பின் படி, அல் ருவைஸ், அல் மிர்ஃபர் மற்றும் லிவா மற்றும் அல் அய்ன் பகுதிகள் மஞ்சள் எச்சரிக்கையில் வைக்கப்பட்டுள்ளன. எனவே, இப்பகுதியில் உள்ள குடியிருப்பாளர்கள் வெளிப்புற நடவடிக்கைகளுக்குச் செல்லும்போது கவனமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதிகளின் வரைபடம்:

அத்துடன் இன்றைய தினம் வானிலை ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், காற்று சில சமயங்களில் பலமாக வீசக்கூடும் என்றும், கிழக்கு கடற்கரையில் மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாகவும் NCM தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!