அமீரக செய்திகள்

UAE: ஒன்-டே டிரைவிங் டெஸ்ட் திட்டம் மூலம் இதுவரை 194 பேர் பயனடைந்துள்ளதாக ஷார்ஜா காவல்துறை தகவல்…

ஷார்ஜா காவல்துறையின் ஜெனரல் கமாண்டில் உள்ள லைசன்சிங் அண்ட் டிரைவர் விவகாரத்துறை (Licensing and Drivers Affairs Department), அமீரகம் முழுவதும் இரண்டு வாரங்களுக்குள், மொத்தம் 194 ஆண் மற்றும் பெண் பயிற்சியாளர்கள் ‘ஒன்-டே டெஸ்ட்’ முன்முயற்சியின் மூலம் பயனடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

ஒன்-டே டெஸ்ட் முன்முயற்சியானது, ஒரே நாளில் எழுத்து முறை மற்றும் ப்ராக்டிக்கல் சோதனைகளை (பிரிலிமினரி மற்றும் நகர சோதனைகள்) இணைப்பதன் மூலம் இந்த ட்ரைவிங் லைசன்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

இந்த திட்டமானது தடையற்ற இரண்டு-நிலை செயல்முறையை வழங்குகிறது. உள்துறை அமைச்சகத்தின் (MOI) விண்ணப்பத்தின் மூலம் எலெக்ட்ரானிக் முறையில் நடத்தப்படும் முதல் கட்டத்தில், புதிய ஓட்டுநர் உரிமக் கோப்பைத் (file) திறந்து எழுத்து முறைத் தேர்வுகளில் கலந்து கொள்வது அடங்கும்.

இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு, இரண்டாம் கட்டத்திற்கு செல்லலாம். இந்த கட்டத்தில் பயிற்சியாளர்கள் ப்ராக்டிக்கல் பயிற்சியை எதிர்கொள்ள வேண்டும், இது நிபுணர் பயிற்றுவிப்பாளர்களால் வழிநடத்தப்படுகிறது.

டிரைவிங் ஸ்கூல் அட்டவணையில், குறிப்பிடப்பட்டுள்ள பயிற்சி நிபந்தனைகளைப் பூர்த்தி செய்தவுடன், இறுதித் தேர்வுக்கான தேதியில் “provisional” மற்றும் “city” லைசன்ஸ்கள் இரண்டையும் திட்டமிடப்பட்டுள்ளது.

எனவே, செப்டம்பர் இறுதி வரை இயங்கும் இந்த ஒன்-டே டெஸ்ட்டை பயன்படுத்திக் கொள்ளுமாறு வாகனங்கள் மற்றும் ஓட்டுநர் உரிமத் துறையின் இயக்குநர் கர்னல் காலித் முகமது அல்-கே வலியுறுத்தியுள்ளார். அதேசமயம், ஆர்வமுள்ளவர்கள் இந்த துறையின் உதவி எண்ணை (901) இல் தொடர்பு கொண்டு கூடுதல் தகவல்கள் மற்றும் சந்தேகங்களை கேட்டுக்கொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளார்.

Related Articles

Back to top button
error: Content is protected !!