ADVERTISEMENT

அமீரகத்தின் விபத்து இல்லாத நாள்: பிளாக் பாய்ண்ட்ஸ் நீக்கியுள்ளதை எப்படி சரிபார்ப்பது…??

Published: 31 Aug 2023, 6:13 PM |
Updated: 31 Aug 2023, 6:20 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தில் இரண்டு மாத கோடை விடுமுறைக்குப் பிறகு, கடந்த திங்கள்கிழமை (ஆகஸ்ட் 28) மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது. இந்த புதிய கல்வியாண்டின் தொடக்கத்தில் மாணவர்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்யும் வகையில், ஆகஸ்ட் 28 ஆம் தேதியை ‘விபத்துகள் இல்லாத நாள்’ (Day Without Accidents) என்று உள்துறை அமைச்சகம் (MoI) அறிவித்திருந்தது.

ADVERTISEMENT

அமைச்சகம் நடத்தும் இந்த பிரச்சாரத்தின் படி, அன்றைய தினம் சாலைகளில் மிகவும் கவனமாகவும் பொறுப்புடனும் வாகனம் ஓட்டுவோம் என வாகன ஓட்டிகள் உறுதிமொழி எடுக்கலாம் என்றும் இதில் பங்குபெற விரும்பும் வாகன ஓட்டிகள் MoI இணையதளத்தில் பாதுகாப்பு உறுதிமொழியை எடுக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதுமட்டுமின்றி, வாகன ஓட்டிகளை ஊக்குவிக்கும் வகையில், அன்றைய தினம் போக்குவரத்து விதிமீறல்களைப் பதிவு செய்யாமல் பாதுகாப்பாக செல்லும் வாகன ஓட்டிகளின் டிரைவிங் லைசென்ஸில் நான்கு பிளாக் பாயிண்ட்கள் நீக்கப்படும் என்று வாகன ஓட்டிகளுக்கு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

குறிப்பாக, ஆன்லைனில் பிளாக் பாயின்ட் அகற்றம் நடைபெறும் என்பதால், விலக்கு பெற வாகன ஓட்டிகள் சேவை மையத்திற்குச் செல்ல வேண்டியதில்லை என்பதையும் சுட்டிக்காட்டியிருந்தது. பொதுவாக, கடுமையான போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு அபராதத்துடன் சேர்த்து விதிக்கக்கூடிய தண்டனை நடவடிக்கையே பிளாக் பாயிண்ட் ஆகும்.

இவ்வாறு வாகன ஓட்டிகள் 24 பாயிண்ட்களை சேர்த்தவுடன் அவர்களின் டிரைவிங் லைசென்ஸ் இடைநிறுத்தப்படும். தற்போது, ‘விபத்துகள் இல்லாத நாள்’ பிரச்சாரத்தில், வாகன ஓட்டிகள் மீறல்கள் மற்றும் விபத்துகள் இன்றி பயணித்திருந்தால் அதனை எப்படி சரிபார்ப்பது என்பதை கீழே காணலாம்.

ADVERTISEMENT

லைசென்ஸில் உள்ள ப்ளாக் பாய்ண்ட்ஸை எப்படி சரிபார்க்கலாம்

துபாய் போலீஸ் இணையதளத்தில்

• https://www.dubaipolice.gov.ae/ என்ற லிங்கில் செல்லவும்

• ‘services’ என்பதைக் கிளிக் செய்து, பின்னர் ‘traffic services’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

• ‘fines inquiry and payment’ என்பதைக் கிளிக் செய்யவும்.

• ‘access service’ என்பதைக் கிளிக் செய்யவும்.

• அதன்பிறகு உங்களது அபராதம் பற்றி விசாரிக்க உங்களுக்கு விருப்பம் இருக்கும். அதில்

1. Number Plate

2. Traffic code number

3. license

4. Ticket

• அதில் ‘license details’ என்பதைத் தேர்ந்தெடுத்து, உங்கள் லைசென்ஸ் நம்பர் மற்றும் ஆதாரத்தை உள்ளிடவும் (உங்கள் உரிமத்தை வழங்கிய எமிரேட்). பின்னர் உங்களை ஒரு பயனராக சரிபார்க்க கேப்ட்சா படத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

• ‘search’ என்பதைக் கிளிக் செய்தால் உங்கள் லைசென்ஸில் ஏதேனும் கருப்பு புள்ளிகள் இருந்தால் இணையதளம் உங்களுக்குத் தெரிவிக்கும்.

உள்துறை அமைச்சக இணையதளத்தில்

• moi.gov.ae ஐப் பார்வையிடவும்

• ‘இ-சேவைகள்’ மெனுவின் கீழ், ‘போக்குவரத்து மற்றும் உரிமம்’ என்பதைக் கிளிக் செய்யவும்.

• உங்கள் UAE PASS-ஐப் பயன்படுத்தி MOI போர்ட்டலில் உள்நுழையவும்.

• திரையின் மேல் உள்ள மெனுவில் ‘டாஷ்போர்டை’ கிளிக் செய்யவும்.

• அதில் உங்களது ப்ளாக் பாய்ண்ட்ஸ், நீங்கள் செலுத்த வேண்டிய போக்குவரத்து அபராதங்கள், நீங்கள் தாக்கல் செய்த போக்குவரத்து அறிக்கைகள் அல்லது நீங்கள் எழுப்பிய புகார்கள் அல்லது விசாரணைகள் உள்ளிட்ட உங்கள் போக்குவரத்துக் கோப்பின் சுருக்கத்தை காண்பீர்கள்.