ADVERTISEMENT

அமீரகத்தில் நடைபெறும் டயாபட்டீஸ் சேலஞ்ச்: உடல் எடை குறைப்பில் வெற்றி பெறுபவர்களுக்கு 5,000 திர்ஹம்ஸ் பரிசுத்தொகை…!!

Published: 21 Aug 2023, 12:38 PM |
Updated: 21 Aug 2023, 12:50 PM |
Posted By: Menaka

ராஸ் அல் கைமாவில் செயல்பட்டு வரும் RAK மருத்துவமனையானது தொடர்ந்து இரண்டாம் ஆண்டாக நீரிழிவு நோயாளிகளுக்கான உடல் குறைப்பு சவாலை தொடங்கியுள்ளது. கடந்த ஆகஸ்ட் 14 அன்று தொடங்கப்பட்ட இந்த டயாபட்டிஸ் சேலஞ்ச்சில் பங்கேற்க, இதுவரை சுமார் 4,000க்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. RAK மருத்துவமனை நடத்தும் இந்த இரண்டாம் ஆண்டு பிரச்சாரம், Type 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்படும் அபாயத்தைக் குறைக்கும் நம்பிக்கை கொண்டவர்களிடமிருந்து பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ராஸ் அல் கைமாவின் சுகாதாரம் மற்றும் தடுப்பு அமைச்சகத்தின் ஆதரவுடன் நடைபெறும் இந்த மூன்று மாத பிரச்சாரம், 5.7 மற்றும் அதற்கு மேற்பட்ட இரத்த சர்க்கரை (HbA1c) உள்ளவர்களை இலக்காகக் கொண்டுள்ளது. ஏனெனில், 5.7 என்ற அளவு ப்ரீ-டயாபட்டீஸ் இருப்பதைக் குறிக்கிறது, 6.5க்கு மேல் சென்றால் அது டயாபட்டீஸ் நோயைக் குறிக்கிறது.

RAK மருத்துவமனையின் சவாலின் படி, ஆண் மற்றும் பெண் பிரிவுகளில் உடற்பயிற்சி மற்றும் உணவுமுறை மாற்றங்கள் மூலம் இரத்தச் சர்க்கரை அளவில் பெரிய மாற்றங்களைச் செய்பவர்களுக்கு பரிசுத் தொகையாக மொத்தம் 20,000 திர்ஹம்கள் வழங்கப்படும் என்றும் மேலும், முதல் பரிசு ஒவ்வொன்றுக்கும் 5,000 திர்ஹம் மற்றும் முதல் மற்றும் இரண்டாவது ரன்னர் அப்களுக்கு முறையே 3,000 மற்றும் 2,000 திர்ஹம் பரிசு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

RAK மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் ரசா சித்திக் என்பவர் இது குறித்துக் கூறுகையில், போட்டியில் பங்கேற்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது, அவர்களின் ஆரோக்கியத்திற்கான மக்களின் அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாகும் என்றும், மாற்றத்திற்கான இந்த உறுதிப்பாட்டைக் காண்பது ஊக்கமளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சர்க்கரை நோய் உள்ளவர்கள் அனைவரும் இந்த நாடு தழுவிய இயக்கத்தில் இணைந்து, மாற்றத்தைத் தழுவுவதில் வழி நடத்துமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

ADVERTISEMENT

அதுமட்டுமின்றி, உலகளவில் டைப் 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2021 இல் சுமார் 73 மில்லியனிலிருந்து 2045 ஆம் ஆண்டில் 136 மில்லியனாக இருமடங்காக உயரக்கூடுமர என்று சர்வதேச டயாபட்டீஸ் ஃபெடரேஷன் (International Diabetes Federation) கணித்துள்ளது.

இந்நிலையில், RAK மருத்துவமனையின் சுகாதார நிபுணர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் மருத்துவர்கள் அடுத்த மூன்று மாதங்களில், சர்க்கரை நோயை குறைக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் முறையான சுகாதார குறிப்புகள் போன்றவற்றை வாராந்திர வெபினார்கள் (Webinars) மூலம் வழங்குவார்கள் என்று கூறப்படுகிறது.

விருப்பமுள்ளவர்கள் இந்த சவாலில் பங்கேற்க https://www.rakdiabeteschallenge.comhttps://www.rakdiabeteschallenge.com என்ற லிங்கில் சென்று பதிவு செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.