ADVERTISEMENT

UAE: கோடைகாலங்களில் அதிகரிக்கும் மின் கட்டணம்..!! மின் நுகர்வைக் குறைக்க DEWA-ன் டிப்ஸ்கள் இதோ…

Published: 5 Aug 2023, 11:32 AM |
Updated: 5 Aug 2023, 12:42 PM |
Posted By: Menaka

துபாயில் கடுமையான கோடை வெப்பம் கொளுத்தி வரும் நிலையில், குடியிருப்புகளில் பல்வேறு மின் சாதனங்களின் தேவை அதிகரிப்பதுடன் மின்சாரப் பயன்பாடும் அதிகரிக்கும். இதனால் உங்களின் மின்சாரக் கட்டணமும் கிடுகிடுவென உயரும்.

ADVERTISEMENT

இது உங்கள் சொந்த செலவினங்களைப் பற்றியது மட்டுமல்ல, மின் சாதனங்களின் பயன்பாடும் சுற்றுச்சூழலில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே, நீங்கள் மின்சாரம் மற்றும் நீர் ஆதாரங்களை அளவாகப் பயன்படுத்தி உங்கள் கட்டணத்தையும் குறைக்க விரும்பினால், பின்வரும் சில குறிப்புகளைப் பின்பற்றலாம் என துபாயின் மின்சாரம் மற்றும் நீர் ஆணையம் (Dubai Electricity and Water Authority-Dewa) தெரிவித்துள்ளது.

1. அத்தியாவசியமற்ற சாதனங்களை மதியம் 12 மணி முதல் மாலை 6 மணி வரை பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.

ADVERTISEMENT

துபாய் எமிரேட்டில் வெப்பநிலை உச்சத்தில் இருக்கும் நிலையில், துபாய் மின்சாரம் மற்றும் நீர் ஆணையம் (Dubai Electricity and Water Authority-Dewa), மதியம் 12 மணி முதல் மாலை 6 மணி வரை அத்தியாவசியமற்ற உபகரணங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு குடியிருப்பாளர்களை கேட்டுக்கொள்கிறது. ஏனெனில் இவை ‘பீக் லோட்’ நேரம் ஆகும்.

மேலும், காலை அல்லது மாலை வேளைகளில் பயன்படுத்த தண்ணீர் ஹீட்டர்கள், எலெக்ட்ரிக் ஓவன்கள், வாஷிங் மெஷின்கள் மற்றும் டிஷ் வாஷர் போன்ற சாதனங்களை பயன்படுத்துவதை மறுபரிசீலனை செய்யுமாறு குடியிருப்பாளர்களை அறிவுறுத்தியுள்ளது.

ADVERTISEMENT

இது உங்கள் மின்சாரக் கட்டணத்தைக் குறைக்கப் போவதில்லை என்றாலும், பீக் லோட் நேரங்களில் அதிக ஆற்றலை உருவாக்க கூடுதல் எரிபொருள் பயன்படுத்தப்படாமல் இருப்பதை உறுதிசெய்ய உதவும்.

2. ACயை 24°Cஇல் பயன்படுத்த அறிவுறுத்தல்

உங்கள் ACயை 24 டிகிரி செல்சியஸில் வைத்து, ‘automatic mode’ இல் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். நீங்கள் வெளியில் இருந்து உங்கள் வீட்டிற்குள் நுழைந்ததும் வெப்பநிலையை 24 டிகிரி செல்சியஸுக்குக் குறைக்க வேண்டும் என்று நினைத்தால், உங்கள் அறையை குளிரூட்டுவதற்கு சிறிது நேரம் கொடுத்து, பின் ACயில் 24 டிகிரி செல்சியஸுக்கு அமைக்க அனுமதிப்பது நல்லது.

மேலும், ஒவ்வொரு முறையும் நீங்கள் வெப்பநிலையை ஒரு டிகிரி செல்சியஸ் குறைக்கும்போது, ​​உங்கள் ACயின் மின்சார நுகர்வு 5% அதிகரிக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

3. AC ஃபில்டர்களை சுத்தமாக வைத்திருக்கவும்:

உங்கள் AC ஃபில்டர்களில் ஏதேனும் அழுக்கு அல்லது அடைப்பு இருந்தால், அது சாதாரண காற்றோட்டத்தைத் தடுக்கலாம். எனவே, கோடை காலத்தில் உங்கள் AC ஃபில்டர்களை அவ்வப்போது அல்லது மாதத்திற்கு ஒருமுறை சுத்தம் செய்வது நல்லது.

4. திரைச்சீலைகள் பயன்படுத்தவும்:

கோடைகாலங்களில் உங்கள் ACயின் சுமையைக் குறைக்க திரைச்சீலைகள் பயன்படும். அவை அறையின் கண்ணாடி அல்லது ஜன்னல்கள் வழியாக நுழையும் வெப்பத்தை குறைக்க உதவுகின்றன, அறையை குளிர்ச்சியாக இருக்க அனுமதிக்கிறது.

5. வெதர் ஸ்ட்ரிப்பிங் மற்றும் கால்க்கிங் (weather stripping and caulking):

உங்கள் குடியிருப்பின் கதவுகள் மற்றும் ஜன்னல்களைச் சுற்றியுள்ள இடைவெளிகளை மூடுவதற்கு, வெதர் ஸ்ட்ரிப்பிங் மற்றும் கால்க்கிங் ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன. இவற்றை நீங்கள் ஒரு ஹார்டுவேர் ஸ்டோரிலோ அல்லது ஆன்லைனிலோ வாங்கலாம். இவை உங்கள் வீட்டிற்குள் குளிர்ந்த காற்றை வைத்திருக்கவும், வெப்பக் காற்று நுழைவதைத் தடுக்கவும் உதவும்.

6. வாஷிங் மெஷினில் ஹாட் வாட்டர் அமைப்பைப் பயன்படுத்த வேண்டாம்:

நீங்கள் வாஷிங் மெஷினில் துவைக்கும் போது, குழாயிலிருந்து வரும் நீர் மிதமான சூட்டில் இருந்தால், ஹாட் வாட்டர் அமைப்பில் வெப்பநிலையைக் குறைக்கவும். இவ்வாறு நீங்கள் வெப்பநிலையைக் குறைப்பதால், 50 சதவீத நுகர்வு குறையும்.

அதுபோல, நீங்கள் அடர் நிறத்தில் இருக்கும் துணிகளை துவைத்தால், அவற்றை குளிர்ந்த நீரில் துவைக்குமாறு Dewa பரிந்துரைக்கிறது, ஏனெனில் அது அவற்றின் சாயத்தைப் பாதுகாப்பதுடன் ஆற்றல் நுகர்வையும் மிச்சப்படுத்துகிறது.

மேற்கூறிய மின் சிக்கனக் குறிப்புகளைப் பின்பற்றியும், உங்கள் பில் வழக்கத்திற்கு மாறாக அதிகமாக இருப்பதாக உணர்ந்தால், நீங்கள் Dewaவின் ‘Consumption Assessment Tool’ஐப் பயன்படுத்தலாம். இது உங்கள் வீட்டின் மின் நுகர்வின் அளவைக் கண்காணிப்பதுடன் நிலையான முடிவுகளை எடுக்கவும் உதவும்.