ADVERTISEMENT

அமீரகத்தில் புதிதாக மிகப்பெரிய சாலை திறப்பு: ராஸ் அல் கைமாவிலிருந்து துபாய்க்குச் செல்லும் போக்குவரத்தை சீராக்க முயற்சி..!!

Published: 28 Aug 2023, 2:27 PM |
Updated: 28 Aug 2023, 2:44 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகமானது ராஸ் அல் கைமாவிலிருந்து துபாய் வரையில் செல்லக்கூடிய புதிய பெரிய சாலையைத் திறந்து வைத்துள்ளது.  அமீ்கத்தின் எரிசக்தி மற்றும் உள்கட்டமைப்பு அமைச்சகத்தால் (Ministry of Energy and Infrastructure) திறந்து வைக்கப்பட்டுள்ள இந்த எமிரேட்ஸ் சாலை ‘E611’ புதிய கல்வியாண்டின் தொடக்கத் தேதியுடன் ஒத்துப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த புதிய சாலையானது, பள்ளி பேருந்துகளின் இயக்கத்தை எளிதாக்கும் நோக்கத்துடனும், வாகனங்களின் சீரான ஓட்டத்தை உறுதி செய்யும் நோக்கத்துடனும் திறக்கப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக, சாலையின் இருபுறமும் உள்ள நகர்ப்புற சமூகங்கள் மற்றும் வெவ்வேறு எமிரேட்டுகளுக்கு இடையே இணைப்பு மற்றும் தொடர்பை மேம்படுத்தும் வகையில், சாலையின் போக்குவரத்துத் திறனை உயர்த்த ‘E611’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

இது அல் பராஷி பகுதியில் தற்போதைய இன்டர்செக்சனை மேம்படுத்துவதற்கான ஒருங்கிணைந்த திட்டத்தின் ஒரு பகுதியாகும், இது இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.