ADVERTISEMENT

அமீரகத்தில் இன்று வெப்பநிலை 49 டிகிரி செல்சியஸ் வரை உயரும்!! NCM வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பு…

Published: 5 Aug 2023, 2:22 PM |
Updated: 5 Aug 2023, 2:24 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்றைய தினம் வானிலை ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) தெரிவித்துள்ளது. நாட்டின் ஓரிரு பகுதிகளில் லேசானது முதல் மிதமான காற்று வீசும், சில நேரங்களில் புத்துணர்ச்சியூட்டும் காற்று வீசினாலும், பகலில் தூசியுடன் கூடிய காற்று வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அதேசமயம், கிழக்கு கடற்கரையில் காலை நேரத்தில் குறைந்த மேகங்களும், பிற்பகலில் கிழக்கு மற்றும் தெற்கில் சில வெப்பச்சலன மேகங்களும் உருவாகும் என்று மையம் அறிவித்துள்ளது. இதன் மூலம் அமீரகத்தின் குறிப்பிட்ட பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், வெப்பநிலை 49 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, அபுதாபி மற்றும் துபாயில் வெப்பநிலை முறையே 43ºC மற்றும் 42ºC ஆகவும் உயரும் என்று கூறியுள்ளது. இருப்பினும், வெப்பநிலை குறைந்தபட்சமாக  அபுதாபியில் 33ºC ஆகவும், துபாயில் 35ºC ஆகவும், மலைப்பகுதிகளில் 23ºC ஆகவும் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அத்துடன் இன்றிரவு மற்றும் ஞாயிற்றுக்கிழமை காலை ஈரப்பதமாக இருக்கலாம் என்றும் சில கடலோரப் பகுதிகளில் மூடுபனி உருவாகும் வாய்ப்புள்ளதாகவும் NCM கூறியுள்ளது. அதுபோல, காற்றில் ஈரப்தத்தின் நிலை அபுதாபியில் 20 முதல் 85 சதவீதம் மற்றும் துபாயில் 20 முதல் 80 சதவீதம் வரையிலும் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.