அமீரக செய்திகள்

UAE: தொடங்கவிருக்கும் புதிய கல்வியாண்டு.. ஸ்டேஷனரி முதல் லேப்டாப் வரை அனைத்திற்கும் தள்ளுபடி அறிவிப்பு..!! பரிசுப்பொருட்களும் வெல்லலாம்..!! முழுவிபரங்கள் உள்ளே..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் விடப்பட்டுள்ள கோடைகால பள்ளி விடுமுறை முடிந்து, மீண்டும் எதிர்வரும் ஆகஸ்ட் 28 அன்று புதிய கல்வியாண்டு தொடங்கவிருப்பதை முன்னிட்டு, பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் பள்ளிகளுக்கு திரும்புவதற்குத் தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில், சில்லறை விற்பனையாளர்கள் பள்ளி செல்வதற்கு தேவைப்படும் ஏராளமான பொருட்களுக்கு சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளுடன் விற்பனையத் தொடங்கியுள்ளனர். இதனை முன்னிட்டு, குடியிருப்பாளர்கள் பேக்குகள் மற்றும் ஸ்டேஷனரி பொருட்கள் முதல் மடிக்கணினிகள் மற்றும் மின்னணு சாதனங்கள் வரை மலிவு விலையில் பொருட்களை வாங்கலாம்.

தள்ளுபடி வழங்கி வரும் நிறுவனங்களில் ஒன்றான அமீரகத்தில் இயங்கி வரும் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான ஜம்போ தொடங்கியுள்ள தள்ளுபடி பிரச்சாரத்தின் படி, ஒரு மாணவர் பள்ளிக் கட்டணத்தில் 25,000 திர்ஹம்ஸ் மற்றும் புத்தம் புதிய லேப்டாப்களை வெல்லும் வாய்ப்பைப் பெறலாம் என கூறப்பட்டுள்ளது.

இந்த பிரச்சாரத்தில் பரிசுகளை வெல்ல வேண்டுமெனில், செப்டம்பர் 3 ஆம் தேதி வரை ஜம்போ ஸ்டோர்களில் லேப்டாப்கள், டேப்லெட்டுகள், கணினிகள், உதிரி பாகங்கள் போன்றவற்றில் 1,000 திர்ஹம் செலவழித்து பொருளை வாங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கூறிய எலெக்ட்ரானிக் சாதனங்களில் ஏதேனும் ஒன்றில் 1,000 திர்ஹம் செலவழித்து ஷாப்பிங் செய்பவர்கள் ஒவ்வொரு நாளும் புதிய லேப்டாப்பை வெல்வதற்கான தினசரி பரிசு டிராவில் நுழைவார்கள் என கூறப்பட்டுள்ளது. மேலும் ஜம்போ நிறுவனமானது, லேப்டாப்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட மாடல்களை வாங்குவதற்கு 400 திர்ஹம் வரை மாணவர் மற்றும் ஆசிரியர்களுக்கு தள்ளுபடியை வழங்குவதாகவும் தெரிவித்துள்ளது.

இதேபோல், லேண்ட்மார்க் குழுமத்தின் துணை நிறுவனமான சென்டர்பாயின்ட், பேக் பேக்குகள் முதல் ஸ்டேஷனரி, பள்ளி உடைகள் போன்ற பள்ளிக்குத் தேவையான பொருட்களுக்கும் தள்ளுபடியை அறிவித்துள்ளது. இங்கு பேக்குகள், காலணிகள், எழுதுபொருட்கள், பேக் பேக்குகள் மற்றும் பிற பொருட்களுக்கு 75 சதவீதம் வரை தள்ளுபடியை பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்றொரு லேண்ட்மார்க் குழுமத்தின் துணை நிறுவனமான பேபிஷாப் ஸ்டோரிலும், லஞ்ச் பேக், தண்ணீர் பாட்டில்கள், பென்சில் கேஸ்கள் மற்றும் பலவற்றைக் கொண்ட பேக்பேக்குகள் அல்லது டிராலி பேக்குகளை மலிவான விலையில் வாங்கலாம்.

அதுமட்டுமின்றி, எந்தவொரு ஸ்கூல் பேக்கையும் வாங்கும் போது, Babyshop 400 திர்ஹம்களுக்கும் அதிகமான பரிசு வவுச்சர்களை வழங்குகிறது. இது அனைத்து பொருட்களையும் ஒரு வருட உத்தரவாதத்துடன் வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதே போன்று துபாயில் உள்ள டைம்ஸ் ஸ்கொயர் சென்டர், புதிய கல்வியாண்டின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில், ஆகஸ்ட் 25 முதல் 27 வரை கண்காட்சியை நடத்துகிறது. இந்த கண்காட்சியில் பார்வையாளர்கள்  லேப்டாப் அல்லது டேப்லெட்டைப் பெறக்கூடிய வாய்ப்பை பெறலாம் மற்றும் பழைய டேப்லெட்களை மாற்றிக்கொண்டு புதியதைத் திரும்பப் பெறலாம் மற்றும் பழைய புத்தகங்களை நன்கொடையாக அளித்து வவுச்சர்களைப் பெறலாம் என கூறப்பட்டுள்ளது.

அதுபோல, ஆகஸ்ட் 31 வரை இயங்கும், Noon.com இன் வாடிக்கையாளர்கள் பல்வேறு பொருட்களுக்கு 70 சதவீதம் வரை தள்ளுபடியைப் பெறலாம். இதில் விளையாட்டு உடைகள், ஸ்னீக்கர்கள், லென்ஸ்கள், கண் கண்ணாடி பிரேம்கள், சன்கிளாஸ்கள், கற்றல் மற்றும் கல்வி பொம்மைகள் மற்றும் எழுதுபொருள் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இவற்றுடன் சில்லறை விற்பனை நிறுவனங்களில் ஒன்றான கேரிஃபோர், எலக்ட்ரானிக்ஸ், ஸ்டேஷனரி, பேக் பேக்குகள் மற்றும் லஞ்ச் பாக்ஸ்கள் உள்ளிட்ட பள்ளிப் பொருட்களுக்கு 50 சதவீதம் வரை தள்ளுபடியை அறிவித்திருக்கிறது.

அதேசமயம், BBZ ஸ்டோரானது, அதன் அனைத்து விற்பனை நிலையங்களிலும் உள்ள பிரீமியம் பிராண்டுகளின் காலணிகள், பேக்பேக்குகள், பாதணிகள் மற்றும் அத்தியாவசிய ஸ்டேஷனரிகளுக்கு 50 சதவீதம் வரை தள்ளுபடியை வழங்குகிறது.

இவை மட்டுமின்றி, பிரபல சாம்சங் நிறுவனம், சமீபத்திய சாம்சங் நிறுவனம் 10,000 திர்ஹம்கள் வரையிலான வாராந்திர பரிசுகளை வெல்லும் வாய்ப்பை வழங்குகிறது.

வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு 999 திர்ஹம்களுக்கும் ஒரு ரேஃபிள் என்ட்ரியையும் 2,999 திர்ஹம் மற்றும் அதற்கு மேல் செலவழிக்கும் போது அதிகபட்சம் 3 ரேஃபிள் என்ட்ரிகளுக்கான வாய்ப்பைப் பெறலாம் என கூறப்பட்டுள்ளது. இது வாராந்திர டிராவில் 3 முறையும், மெகா டிராவில் 3 முறையும் நுழையும் வாய்ப்பை கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!