அமீரக செய்திகள்

UAE: செப்டம்பர் வரை நீடிக்கும் சம்மர் விற்பனை..!! ஏராளமான தயாரிப்புகளுக்கு எக்கச்சக்கமான தள்ளுபடிகள்…!!

அமீரகம் முழுவதும் கோடைகாலம் தொடங்கியதை முன்னிட்டு சம்மர் சேல் தொடங்கப்பட்டு பெரும்பாலான பொருட்களுக்கு தள்ளுபடி விலையும் பரிசுக்கூப்பன்களும் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த சம்மர் விற்பனை காரணமாக குடியிருப்பாளர்களும் சுற்றுலாப் பயணிகளும் அதிரடியாக ஷாப்பிங் அனுபவங்களில் களமிறங்கியுள்ளனர்.

இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் 23ஆம் தேதி தொடங்கிய அபுதாபி ஷாப்பிங் சீசனின் ஒரு பகுதியாக, அபுதாபியில் உள்ளவர்கள் ஆகஸ்ட் 7 முதல் செப்டம்பர் 10 வரை 24 மணிநேர சூப்பர் சேல் மற்றும் பேக்-டு- ஸ்கூல் ஆஃபர்களை எதிர்பார்க்கலாம் என கூறப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியான தகவல்களின் படி, இந்த ஷாப்பிங் ஃபெஸ்டிவலில், யாஸ் மால், அபுதாபி மால், அல் வஹ்தா மால் மற்றும் ரீம் மால் உள்ளிட்ட 25 மால்களில் எக்கச்சக்கமான தள்ளுபடி சலுகைகள் மற்றும் ஏரளாமான தயாரிப்புகளுடன் கிட்டத்தட்ட 3,500 க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனையாளர்கள் பங்கேற்க உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, ஷாப்பிங் ஃபெஸ்டிவல் முடியும் வரை, ஃபேஷன் கொலாபரேஷன், எக்ஸ்க்ளூசிவ் ஈவன்ட் மற்றும் ஸ்பெஷல் மாஸ்டர் கிளாஸ்கள் என அபுதாபி குடியிருப்பாளர்கள் பல்வேறு மால்களில் பல நிகழ்வுகளை அனுபவிக்கலாம் என கூறப்படுகின்றது.

அபுதாபியைப் போன்றே, துபாய் சம்மர் சர்ப்ரைசஸ் (DSS) துபாய் எமிரேட்டில் உள்ள 35 மால்களில் நடந்து வருகிறது. கடந்த ஜூன் 29 தொடங்கிய DSS ஆனது அதன் 26வது சீசனில் 3,000க்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்களில் பிரபலமான பிராண்டுகளுக்கு 75 சதவீதம் வரை தள்ளுபடிகளை வழங்குவது குறிப்பிடத்தக்கது. இது எதிர்வரும் செப்டம்பர் 3 வரை 67 நாட்கள் இயங்கும்.

அதுபோல, ஷார்ஜாவில் எண்ணற்ற ப்ரோமோஷன்கள், மெகா தள்ளுபடிகள், பொழுதுபோக்கு நிகழ்வுகள் மற்றும் மதிப்புமிக்க பரிசுகள் நிறைந்த 65 நாள் எக்ஸ்ட்ராவேகன்சா எமிரேட் முழுவதும் நடந்து வருகிறது. இந்த ஆண்டு 20 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், ஷார்ஜா முழுவதும் உள்ள வணிக வளாகங்கள் மற்றும் கடைகளில் புகழ்பெற்ற சர்வதேச பிராண்டுகளுக்கு 25 சதவீதம் முதல் 75 சதவீதம் வரை தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன.

இதற்கிடையில், எதிர்வரும் ஆகஸ்ட் 18 அன்று துபாயில் சம்மர் ரெஸ்டாரன்ட் வீக் (Summer Restaurant Week) தொடங்க உள்ளது. இது துபாய் முழுவதும் பல்வேறு உணவுகளை அறிந்து சுவைத்துப் பார்க்க ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!