அமீரக செய்திகள்

துபாயில் இரண்டு புதிய சைக்கிள் டிராக்குகள்: 90% கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளதாக துபாயின் RTA அறிவிப்பு!!

துபாயில் இருக்கக்கூடிய அல் கவானீஜ் மற்றும் முஷ்ரிஃப் பகுதியில் உள்ள 7 கிமீ நீளமுள்ள சைக்கிள் டிராக்குகளை 39 கிமீ வரை நீட்டிக்கும் பணி கிட்டத்தட்ட 90% நிறைவடைந்துள்ளதாக துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) செப்டம்பர் 17 அன்று அறிவித்திருந்தது.

சைக்கிள் டிராக் நீட்டிப்பு:

துபாயின் ஷேக் சையத் பின் ஹம்தான் அல் நஹ்யான் ஸ்ட்ரீட்டில் (D54) உள்ள குர்ஆனிக் கார்டனில் (Quranic Garden) இருந்து அல் கவானீஜ் ஸ்ட்ரீட்டை சந்திக்கும் வரை முதல் டிராக் செல்கிறது. இந்த முதல் டிராக், அல் கவானீஜில் இருக்கும் பழைய சைக்கிள் டிராக்குடன் இணைய அல் கவானீஜ் ஸ்ட்ரீட்டில் உள்ள ஒருங்கிணைந்த பாதசாரிகள் மற்றும் சைக்கிள் டிராக் பிரிட்ஜ் வழியாக தெருவைக் கடக்கிறது.

இரண்டாவது சைக்கிள் டிராக்கானது, முஷ்ரிப் பார்க்கில் தொடங்கி ஷேக் சையத் பின் ஹம்தான் அல் நஹ்யான் ஸ்ட்ரீட்டைச் இன்டர்செக்‌ஷன் வரை நீண்டு, பின்னர் அல் கவானீஜில் உள்ள சைக்கிள் டிராக்குடன் இணைய வடக்கு நோக்கிச் செல்கிறது.

மேற்கூறப்பட்ட இரண்டு சைக்கிள் டிராக்குகளும் 7 கிமீ தொலைவிற்கு நீண்டிருக்கும். இரு மாவட்டங்களிலும் தற்போதுள்ள சைக்கிள் டிராக்குகள் இரண்டு பகுதிகளிலும் 32 கிமீ வரை நீட்டிக்கப்பட்டுள்ளது, மேலும் புதிய பாதைகள் மூலம், இவற்றின் மொத்த நீளம் 39 கிமீ ஆக அதிகரிக்கும் என்று RTA தெரிவித்துள்ளது.

துபாயின் மாஸ்டர் பிளான்:

துபாய் 2040 நகர்ப்புற மாஸ்டர் பிளான் (Dubai 2040 Urban Master Plan) திட்டத்திற்கு ஏற்ப, அல் கவானீஜ் மற்றும் முஷ்ரிப்பில் உள்ள சைக்கிள் டிராக்குகளை நீட்டிப்பது நகரின் முக்கிய மாவட்டங்களை இணைக்கும் மாஸ்டர் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

ஏற்கனவே, துபாய் RTA உலகின் மிக நீளமான சைக்கிள் டிராக்கை அல் குத்ராவில் அமைத்து கின்னஸ் சாதனை படைத்துள்ளது, இதில் நீங்கள் 80.6 கிமீ தொலைவிற்கு சைக்கிளிங் செய்யலாம். மேலும், அடுத்த மூன்று ஆண்டுகளில் துபாயில் உள்ள சைக்கிள் டிராக்குகளின் மொத்த நீளம் 544 கிமீ முதல் 819 கிமீ வரை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

RTA விதித்துள்ள வேகவரம்பு:

  • தொழில்முறையாக இல்லாமல் பொழுதுபோக்குக்காக சைக்கிள் ஒட்டுபவர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட சைக்கிள் டிராக்குகளில் மணிக்கு 30 கிமீ வேக வரம்பை RTA நிர்ணயித்துள்ளது.
  • அதேபோல், நகர்ப்புறங்களில் பாதசாரிகளுடன் பகிரப்பட்ட டிராக்குகளில் நீங்கள் மணிக்கு 20 கிமீ வேக வரம்பை கடைபிடிக்க வேண்டும். இருப்பினும், சைக்கிளிங் பயிற்சி தடங்களுக்கு குறிப்பிட்ட வேக வரம்புகள் எதுவும் அமைக்கப்படவில்லை.

துபாயில் உள்ள சைக்கிள் டிராக்குகளின் பட்டியல்:

  1. அல் கூஸ் 4 சைக்கிளிங் டிராக்: 3 கிமீ நீளம் கொண்ட இந்த டிராக், அல் கூஸ் 4 இல் உள்ள குடியிருப்புப் பகுதிக்கு சேவை செய்கிறது, குறிப்பாக கம்யூனிட்டியில் உள்ள வெவ்வேறு பிரபலமான இடங்களுடன் இணைக்கிறது.
  2. அல் சுஃபூஹ் 2 டிராக்: 3.7 கிமீ நீளம் கொண்ட இந்த டிராக், துபாய் மெரினா பகுதியுடன் ஜுமேராவை இணைக்கும் அல் சுஃபூஹ் சாலைக்கு இணையாக செல்கிறது.
  3. துபாய் கேணல் டிராக்: இந்த ட்ராக், ஜுமைரா ஸ்ட்ரீட் மற்றும் அல் மேதான் இடையே 7 கிமீ நீளம் கொண்டது.
  4. துபாய் மெரினா டிராக்: துபாய் மெரினாவுக்கு சேவை செய்ய 5 கிமீ நீளம் கொண்ட சைக்கிள் டிராக் அமைக்கப்பட்டுள்ளது.
  5. ஜுமேரா ஸ்ட்ரீட் டிராக்: ஜுமேரா சாலைக்கு இணையாகச் செல்லும் இந்த டிராக் துபாய் கேனல் டிராக்குடன் இணைகிறது. இது 19கிமீ நீளம் கொண்டது.
  6. கவானீஜ் டிராக்: இது 19கிமீ நீளம் கண்டது மற்றும் அல் கவானீஜ் கம்யூனிட்டிக்கு சேவை செய்கிறது.
  7. மேதான் டிராக்: 13km நீளம் கொண்ட இந்த டிராக் District One communityஇல் அமைந்துள்ளது.
  8. முஷ்ரிப் டிராக்: தெற்கிலிருந்து வர்காவையும் வடக்கிலிருந்து கவானீஜையும் இணைக்கும் இந்த டிராக் 15கிமீ நீளம் கொண்டது.
  9. அல் குத்ரா ட்ராக்: அல் குத்ரா பாலைவனத்தின் வழியாக 86கிமீ தொலைவிற்கு நீண்டுள்ள இந்த டிராக்கில் ஓய்வெடுக்கும் நிலையங்கள் மற்றும் பெஞ்சுகள் பொருத்தப்பட்டுள்ளன.
  10. வர்கா டிராக்: மிர்திஃபிலிருந்து அல் வர்கா வரை 7.4கிமீ நீளத்திற்கு தொடரும் இந்த பாதை, அல் வர்கா பூங்காவை இணைக்கிறது.

Related Articles

Back to top button
error: Content is protected !!