ADVERTISEMENT

கையும் களவுமாக பிடிபட்ட கடத்தல் கும்பல்: 7.65 பில்லியன் கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருள்களை கடத்த முயன்றவர்களைப் பாய்ந்து பிடித்த துபாய் போலீஸ்…

Published: 14 Sep 2023, 4:20 PM |
Updated: 14 Sep 2023, 4:45 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தில் சுமார் 3.87 பில்லியன் திர்ஹம் (இந்திய மதிப்பு-.7.65 பில்லியன் கோடி ரூபாய்) மதிப்புள்ள போதை மாத்திரைகளை கடத்த முயன்ற கும்பல் கையும்களவுமாக அதிகாரிகளிடம் பிடிபட்டுள்ளது. காவல்துறையினர் அளித்துள்ள தகவல்களின் படி, இந்த கடத்தல் கும்பலானது போதைப் பொருட்களை கதவுகள் மற்றும் அலங்காரப் பேனல்களில் மறைத்து கடத்த முயன்றது தெரிய வந்துள்ளது.

ADVERTISEMENT

இது குறித்து வெளியிடப்பட்ட செய்தியில் அதிகாரிகளின் ‘Operation Storm’ என்ற செயல்பாட்டின் மூலம், அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட 13 டன் கேப்டகன் மாத்திரைகளை 651 கதவுகள் மற்றும் 432 அலங்கார பேனல்களில் பொதித்து வைத்து கடத்த முயன்றவர்களிடமிருந்து  86 மில்லியன் மாத்திரைகளை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக துணைப் பிரதமரும் உள்துறை அமைச்சருமான லெப்டினன்ட் ஜெனரல் ஷேக் சைஃப் பின் சயீத் அல் நஹ்யான் அவர்கள் பேசுகையில், ஐந்து கண்டெய்னர்களில் போதைப் பொருள்களை கடத்த முயன்ற ஆறு சந்தேக நபர்களை துபாய் காவல்துறை அதிரடியாகக் கைது செய்ததாகத் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

அத்துடன் கடத்தல்காரர்களை அதிகாரிகள் எவ்வாறு கண்காணித்து ஒட்டு மொத்தமாகக் கைது செய்தனர் என்பதைக் காட்டும் வீடியோ ஒன்றையும் உள்துறை அமைச்சர் X தளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், கதவுகள் மற்றும் பேனல்களைப் பிரித்து அவற்றில் மறைத்து வைக்கப்பட்டுள்ள போதைப் பொருட்களைக் அதிகாரிகள் எவ்வாறு கண்டுபிடித்தனர் என்பது குறித்த காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.