அமீரக செய்திகள்

துபாய் ஏர்போர்ட்டில் விரைவில் வரவிருக்கும் புதிய நடைமுறை..!! செக்-இன், பாஸ்போர்ட் கவுண்டர் மற்றும் போர்டிங் என அனைத்திற்கும் ஒரே பயோமெட்ரிக் சிஸ்டம்..!!

பயணிகளுக்கு தங்களின் பயண நெறிமுறைகளை எளிதாக்கவும் பாதுகாப்பிற்காகவும் பல்வேறு புதிய தொழில்நுட்பங்களையும் சிறப்பம்சங்களையும் அறிமுகப்படுத்தி வரும் துபாய் விமான நிலையத்தில் செக்-இன், இமிக்ரேஷன் மற்றும் போர்டிங் ஆகிய அனைத்து செயல்முறைக்கும் ஒற்றை பயோமெட்ரிக் முறையை செயல்படுத்தும் புதிய திட்டம் ஒன்றில் துபாய் செயல்பட்டு வருவதாகத் GDRFA அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

துபாய் – GDRFAயின் அதிகாரி ஒருவர், இன்று (செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 12) ஒரு செய்தியாளர் கூட்டத்தில் பேசுகையில், துபாய் சர்வதேச விமான நிலையம் (DXB) எதிர்காலத்தில் பயணிகளின் தனிப்பட்ட உடல் அல்லது நடத்தை பண்புகளின் அடிப்படையில் அடையாளம் காண பயோமெட்ரிக் தொழில்நுட்பத்தை முழுமையாக வரிசைப்படுத்தும் என்று தெரிவித்துள்ளார்.

அதிகாரிகளின் கூற்றுப்படி, விமான நிலைய பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதுடன் இமிகிரேஷன் கவுண்டர்களின் தேவையை நீக்கி, பயணிகளுக்கு மென்மையான மற்றும் தடையற்ற விமான நிலைய அனுபவத்தை வழங்குவது இந்த ஒற்றை பயோமெட்ரிக் பயன்பாட்டின் நோக்கமாகும் என கூறப்பட்டுள்ளது.

இது குறித்து GDRFAஇன் துணை இயக்குநர் மேஜர் ஜெனரல் ஒபைத் பின் சுரூர் என்பவர் கூறுகையில், இந்த ஒற்றை பயோமெட்ரிக் திட்டத்தில் இரண்டு ஆண்டுகளாக பணியாற்றி வருவதாகவும், செக்-இன் செய்ய வரும் பயணிகள் இமிகிரேஷன், ஓய்வறை மற்றும் போர்டிங் என அனைத்து செயல்முறைகளிலும் ஒரே பயோமெட்ரிக்ஸைப் பயன்படுத்தி ஸ்மார்ட் பயணத்தை அனுபவிப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், புதிய திட்டம் நடைமுறைக்கு வரும் பட்சத்தில் இப்போது பார்க்கும் கிளாசிக் கவுண்டர்களைப் பார்க்க முடியாமல் போகலாம் என்றும் அவர் கூறியிருக்கிறார். அதுமட்டுமின்றி, பயணிகள் தங்கள் ஐடி ஆவணங்களைப் பயன்படுத்தாமலேயே பயணிக்க உதவும் காண்டாக்ட்லெஸ் ஸ்மார்ட் டிராவல் சிஸ்டம் என்ற புதிய தொழில்நுட்பம் மிக விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

அத்துடன் துறைமுகங்களின் எதிர்காலம் குறித்த கொள்கை உருவாக்கம் பற்றிய வரவிருக்கும் சர்வதேச மாநாடு பற்றியும் மேஜர் ஜெனரல் ஒபைட் பேசியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள தகவல்களின் படி, செப்டெம்பர் 19 ஆம் தேதி ஆரம்பமாகவுள்ள இந்த இரண்டு நாள் நிகழ்வு துபாயில் உள்ள மதீனத் ஜுமைராவில் நடைபெறவுள்ளது, இதில் ஆசியா, ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் அமீரகத்தை சேர்ந்த பங்கேற்பாளர்கள் பங்கேற்கின்றனர்.

ஸ்மார்ட் கேட்களைப் பயன்படுத்துபவர்கள்:

42 மில்லியனுக்கும் அதிகமான பயணிகளை வரவேற்ற துபாய் சர்வதேச விமான நிலையத்தில், இந்தாண்டின் முதல் ஆறு மாதங்களில் மட்டும் சுமார் 37 சதவீதம் பேர் ஸ்மார்ட் கேட்களைப் பயன்படுத்தியுள்ளதாகத் தரவுகள் வெளியாகியுள்ளன.

தற்போது, DXBயில் 120 ஸ்மார்ட் கேட்கள் செயல்படுகின்றன, மேலும் இந்த ஆண்டு இறுதிக்குள் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இது 150ஐ எட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதுபோல, ஸ்மார்ட் கேட்ஸ் மற்றும் பிற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி 80 சதவீத மக்களை அடைவதே எங்கள் இலக்கு என்றும், ஓரிரு ஆண்டுகளில் இந்த இலக்கை எட்டுவோம் என்றும் GDRFAஇன் மான நிலைய பாஸ்போர்ட் துறையின் உதவி இயக்குநர் மேஜர் ஜெனரல் தலால் அல் ஷங்கேடி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!