அமீரக செய்திகள்

துபாய் மாலில் ஐஃபோன் 15 மாடலை வாங்குவதற்கு அலை மோதிய கூட்டம்!! – ஒரு நாளுக்கு முன்னதாகவே நீண்ட வரிசையில் காத்திருந்த ஐபோன் ஆர்வலர்கள்…

பிரபல தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் அதன் புதிய மாடல் ஐபோன் 15 சீரிஸை ஐக்கிய அரபு அமீரகம் உட்பட பல நாடுகளில் இன்று (வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 22) வெளியிடத் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், இந்த புதிய மாடலை இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிடப்படுவதற்கு முன்னதாக நேற்றிரவே துபாய் மாலில் உள்ள ஆப்பிள் ஸ்டோரில்  நூற்றுக்கணக்கான மக்கள் நீண்ட வரிசையில் நிற்கத் தொடங்கியுள்ளனர்.

இவ்வாறு நேற்றிரவு ஆப்பிள் ஸ்டோர் முன்பு குவிந்த வாடிக்கையாளர்களை வெளியீட்டு தேதியில் வருமாறும் அல்லது ஆன்லைனில் முன்பதிவு செய்யுமாறும் அங்கிருந்த பாதுகாப்புக் காவலர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், பல வாடிக்கையாளர்கள் புதிய மாடல் ஐபோனைப் பெறுவதற்கு ஆர்வமுடன் காத்திருந்ததாகவும் கூறப்படுகிறது. அவர்களில் உஸ்பெகிஸ்தான் வெளிநாட்டவரான அஜீஸ் கரிமோவா என்ற குடியிருப்பாளர், தான் முன்பதிவு செய்த ஐபோனை வாங்குவதற்காக நேற்று மாலை 4 மணிக்கு முன்னதாகவே துபாய் மாலுக்குச் சென்றுள்ளார்.

இது தொடர்பாக அவர் செய்தி ஊடகங்களிடம் பேசுகையில், தான் ஒரு ஆப்பிள் ஐபோனின் ரசிகன் என்பதால், முதல் நாளிலேயே போனை முன்பதிவு செய்ததாகவும், ஆனால் இன்று அலை மோதும் கூட்டத்தைப் பார்க்கும் போது, மொபைலை வாங்குவதற்கு நாளை அதிகாலை வர வேண்டும் என்று நினைப்பதகாவும் கூறியுள்ளார்.

இவரைப்போலவே, அகமது சுஃப்யான் என்ற மற்றொரு ஐபோன் ஆர்வலர், ஒரு நாள் முன்னதாகவே ஐபோன்களை விற்பனை செய்கிறார்கள் என்று மாலில் உள்ள ஒரு கூட்டம் சொன்னதை நம்பி ஆப்பிள் ஸ்டாரை நோக்கி விரைந்திருக்கிறார்.

இவர்களைப் போல நூற்றுக்கணக்கான ஐபோன் வாடிக்கையாளர்களினால், நேற்று துபாய் மாலில் சலசலப்பும் உற்சாகமும் உருவாகியுள்ளது. ஸ்டோரின் முன்பு அலைமோதிய மக்கள் கூட்டம், ஒரு திருவிழா போல இருந்ததாகவும் மாலுக்கு வந்த மற்ற குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சரி, அனைவரும் இப்படி போட்டிபோட்டுக் கொண்டு வாங்கும் இந்த புதிய மாடல் ஐபோனில் என்னென்ன சிறப்பம்சங்கள் உள்ளது என்பதை இங்கே பார்க்கலாம்.

iPhone 15 சிறப்பம்சம்:

முதன்முதலாக செப்டம்பர் 13 அன்று அறிமுகம் செய்யப்பட்ட iPhone 15 மொபைலில் 48MP பிரதான கேமரா, க்வாட்-பிக்சல் சென்சார் (quad pixel sensor) மற்றும் வேகமான ஆட்டோஃபோகஸுக்கு 100 சதவிகித ஃபோகஸ் பிக்சல்ஸ் என பல சிறப்பம்சங்கள் உள்ளன.

அத்துடன் iPhone 15 மற்றும் அதன் AirPods Pro சாதனங்களின் சார்ஜிங் கேஸ் ஆகிய இரண்டிற்கும் USB-C சார்ஜிங் கேபிள்கள் வழங்கப்படுகின்றன. மேலும், இவை ஏரோஸ்பேஸ்-கிரேட் டைட்டானியம் டிசைன் கொண்ட முதல் ஐஃபோன்களாகும்.

Related Articles

Back to top button
error: Content is protected !!