அமீரக செய்திகள்

அபுதாபியில் இன்று இராணுவ அணிவகுப்பு!! விமானங்களின் அதிக சத்தம் மற்றும் இரைச்சல் குறித்து எச்சரிக்கை.. நேரில் பார்வையிட அழைப்பு விடுத்த பாதுகாப்பு அமைச்சகம்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தின் இராணுவம் ‘யூனியன் ஃபோர்ட்ரஸ் 9’ (Union Fortress 9) என்கிற இராணுவ அணிவகுப்புக்கு தயாராகி வரும் நிலையில், விமானங்களின் அதிகப்படியான இரைச்சல் மற்றும் சத்தங்கள் குறித்து அபுதாபி குடியிருப்பாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் பாதுகாப்பு அமைச்சகம் (Ministry of Defense) X தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இன்று (செப்டம்பர் 22, வெள்ளிக்கிழமை), அபுதாபியின் யாஸ் ஐலேண்டில் மாலை 4.30 மணி முதல் விமானங்கள் மற்றும் படை வாகனங்களின் இயக்கத்திலிருந்து உரத்த ஒலிகள் மற்றும் சத்தம் வெளிப்படும் என்று குடியிருப்பாளர்களுக்கு முன் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும், எதிர்வரும் நவம்பர் மாதம் அபுதாபியில் நடைபெறவுள்ள இராணுவ அணிவகுப்புக்கான ஆயத்தப் பணிகளின் ஒரு பகுதியாக இந்த ஒத்திகை நடைபெறுவதாகவும் அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது. கூடவே, ஒரு கடிதத்தில் இராணுவ அணிவகுப்பின் நேரடி நிகழ்ச்சியைக் காண வருமாறு பொதுமக்களுக்கு பாதுகாப்பு அமைச்சகம் அழைப்பும் விடுத்துள்ளது.

அமைச்சகம் வெளியிட்டிருந்த அந்த கடிதத்தில்” நாட்டையும், அதன் குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களையும் பாதுகாக்கும் UAE ராணுவத்தின் அர்ப்பணிப்பு மற்றும் உயர் திறன்களை பிரதிபலிக்கும் வகையில், நடைபெறவுள்ள அணிவகுப்பின் நேரடி நிகழ்ச்சியை காணும் வாய்ப்பை  பார்வையாளர்களுக்கு வழங்குவதில் பாதுகாப்பு அமைச்சகமும் ஏற்பாட்டுக் குழுவும் ஆர்வமாக உள்ளன” என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஆகவே, அமீரக குடியிருப்பாளர்கள் இராணுவ அணிவகுப்பை யாஸ் ஐலேண்டில் நிகழ்வின் மையப்பகுதியிலிருந்து பிரதான மேடையின் இருபுறமும் வைக்கப்படும் மாபெரும் திரைகளுடன் கண்டுகளிக்கலாம் என்றும் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!