ADVERTISEMENT

ஷார்ஜா: பார்க்கிங் அபராதத்தில் 50 சதவீதம் தள்ளுபடி பெற வாய்ப்பு..!! தள்ளுபடிக்கு நீங்கள் தகுதியுடையவரா என்பதை எப்படி சரிபார்க்கலாம்..??

Published: 10 Sep 2023, 6:27 PM |
Updated: 10 Sep 2023, 6:53 PM |
Posted By: Menaka

ஷார்ஜா நிர்வாகக் கவுன்சில் (SEC) கடந்த செவ்வாய்க்கிழமையன்று (செப்டம்பர் 5) எமிரேட்டில் இதுவரை பதிவான அனைத்து முனிசிபல் விதி மீறல்களுக்கும் அபராதத்தில் 50 சதவீதம் தள்ளுபடியை வழங்குவதாக அறிவித்திருந்தது.

ADVERTISEMENT

முனிசிபாலிட்டி வெளியிட்டுள்ள முன்னறிவிப்பின் படி, செப்டம்பர் 5, 2023க்கு முன்னர் விதிக்கப்பட்ட அனைத்து நகராட்சி மீறல்களுக்கும் தள்ளுபடி வழங்கப்படும். மேலும், இந்தச் சலுகை 90 நாட்களுக்கு செல்லுபடியாகும்.

எனவே, நீங்களும் தள்ளுபடி சலுகையின் கீழ் உங்கள் போக்குவரத்து அபராதங்களைச் செலுத்தலாம். ஒருவேளை, ஷார்ஜாவில் பார்க்கிங் விதிமீறலுக்காக நீங்கள் அபராதம் பெற்றிருந்தால் 50 சதவீத தள்ளுபடியைப் பெறலாம். அதாவது, பார்க்கிங் அபராதம் ஷார்ஜாவில் உள்ள முனிசிபல் அபராதத்தின் கீழ் வருகிறது.

ADVERTISEMENT

உங்கள் போக்குவரத்து அபராதங்களை எப்படிச் சரிபார்ப்பது?

  • ஷார்ஜா முனிசிபாலிட்டியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வழியாக உங்களது அபராதங்களைச் சரிபார்க்கலாம்-https://portal.shjmun.gov.ae/en/eServices/Pages/Services.aspx?sercatid=133
  • மேலே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கைக் கிளிக் செய்து, ‘pay vehicle fines’ என்ற சேவையைப் பார்வையிடவும்.
  • அதனையடுத்து ‘Enter the service’ என்பதைக் கிளிக் செய்து, உங்கள் வாகனத்தின் நம்பர் பிளேட் மூலம் அபாரதங்களைத் தேடுங்கள்.
  • உங்கள் வாகனம் பதிவு செய்யப்பட்ட எமிரேட் மற்றும் பிளேட் நம்பர் போன்ற உங்கள் நம்பர் பிளேட் விவரங்களை உள்ளிட்டு ‘Search’ என்பதைக் கிளிக் செய்யவும்.
  • நீங்கள் தள்ளுபடிக்கு தகுதியுடையவராக இருந்தால், அசல் அபராதத்தின் விலைக்கு பதிலாக, தள்ளுபடி செய்யப்பட்ட விலையை காண்பிக்கும்.

ஷார்ஜா முனிசிபாலிட்டி இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள சில பார்க்கிங் மீறல்கள் :

  1. பார்க்கிங் பகுதியில் செல்லுபடியாகும் டிக்கெட்டை வாங்க மற்றும் காட்டத் தவறினால் 150 திர்ஹம் அபராதம் செலுத்த நேரிடும்.
  2. நேர வரம்பை மீறி அதிக நேரம் பார்க்கிங் செய்தால்-100 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும்
  3. வாகனங்களின் இயக்கத்தைத் தடுக்கும் வகையில் பார்க்கிங் மற்றும் பிற சொத்துக்கள் அல்லது வாகன ஓட்டிகளை ஆபத்தில் ஆழ்த்துவது போன்ற நடத்தைகளுக்கு 200 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும்.
  4. டிக்கெட் மெஷின், இன்ஸ்ட்ரக்சன் பேனல் அல்லது ஏதேனும் பார்க்கிங் வசதியை தவறாகப் பயன்படுத்துதல் – 500 திர்ஹம் அபராதம்
  5. ஊனமுற்றோருக்கு நியமிக்கப்பட்டிருக்கும் பார்க்கிங் பகுதியில் வாகனத்தை நிறுத்துதல்- 1,000 திர்ஹம் அபராதம்
  6. லைசென்ஸ் இல்லாமல் பார்க்கிங்கை முன்பதிவு செய்தல் – 1000 திர்ஹம் அபராதம்.
  7. லைசென்ஸ் இல்லாமல் பொது பார்க்கிங் பகுதியில் கார்களை கழுவுதல் – 500 திர்ஹம் அபராதம்.
  8. ஏற்கனவே, பிறருக்காக ஒதுக்கப்பட்டுள்ள பார்க்கிங் இடத்தில் பார்க்கிங் செய்தல்- 1,000 திர்ஹம் அபராதம்
  9. லைசென்ஸ் இல்லாமல் போர்டுகள் அல்லது சாதனங்களை மூடுதல்- 500 திர்ஹம் அபராதம்
  10. பார்க்கிங் இடத்தின் முன்பதிவு அனுமதியைக் காட்டத் தவறுதல்- 300 திர்ஹம் அபராதம்
  11. லைசென்ஸ் இல்லாமல் கடைக்கு வெளியே உள்ள இடத்தில் பார்க்கிங் செய்தல்- 1,000 திர்ஹம் அபராதம்