ADVERTISEMENT

UAE: 20 முதல் 200 திர்ஹம்ஸ் வரையிலான மலிவு விலையில் மிக்ஸி, டிவி, வாஷிங் மெஷின் மற்றும் ஃபிரிட்ஜ் போன்ற எலெக்ட்ரானிக் சாதனங்கள் விற்பனை..!! எங்கு தெரியுமா..??

Published: 8 Sep 2023, 6:17 PM |
Updated: 8 Sep 2023, 6:32 PM |
Posted By: Menaka

அமீரகத்தில் வசிக்கும் நீங்கள் மிக குறைந்த விலையில் மிக்ஸி, வாஷிங் மெஷின்கள், ஃபிரிட்ஜ்கள், மைக்ரோவேவ் ஓவன்கள் மற்றும் LCD டிவிகள் போன்ற எலெக்ட்ரானிக் சாதனங்களை வாங்க நினைக்கிறீர்கள் என்றால், நீங்கள் ஷார்ஜா இண்டஸ்ட்ரியல் பகுதிகளில் (Sharjah Industrial Areas) உள்ள தொழில்துறை பகுதி 6 இல் இருக்கும் எலெக்ட்ரானிக் சந்தைக்குச் செல்வது ஒரு சிறந்த தீர்வாகும். ஏனெனில் இந்த எலக்ட்ரானிக்ஸ் சந்தையானது உபயோகப்படுத்தப்பட்ட பல்வேறு எலக்ட்ரானிக் பொருட்களுக்கு சிறந்த சலுகைகளை வழங்குகிறது.

ADVERTISEMENT

இங்கு, உங்களுக்கு விருப்பமான எலெக்ட்ரானிக் சாதனங்களை 20 திர்ஹம்கள் முதல் 200 திர்ஹம் வரையிலான விலைகளில் வாங்கி மகிழலாம். இந்த பரபரப்பான எலக்ட்ரானிக் சந்தையில், கடையின் நடைபாதை முழுவதும் ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் ஏராளமான எலெக்ட்ரானிக் சாதனங்கள் உங்களை வரவேற்கும்.

ADVERTISEMENT

இங்கு மிகவும் மலிவான விலையில் வீட்டு உபயோகப் பொருட்கள் கிடைக்கும் என்பதால், நல்ல விலையில் வாங்குவதற்கு வாடிக்கையாளர்களின் கூட்டம் அலைமோதியவாறு இருக்கும் என்று கூறப்படுகின்றது. குறிப்பாக, ஒவ்வொரு வீடுகளிலும் அத்தியாவசியமாகப் பயன்படுத்தப்படும் ஃபிரிட்ஜ்களை உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற தொடக்க விலையான 250 திர்ஹம்களில் வாங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த எலெக்ட்ரானிக் சந்தை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை இயங்கும் என்றும், பின் ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு, பிற்பகல் 4:30 மணிக்குத் திறக்கப்பட்டு இரவு 11 மணி வரை இயங்கும் என கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அதுபோல, உங்கள் TV யை மாற்ற விரும்பினால் புதிய LCD TV-யானது 200 திர்ஹம்களில் இருந்து கிடைக்கின்றன. அத்துடன் 200 திர்ஹம்களில் வாஷிங் மெஷின்களும், 30 திர்ஹம்களுக்கு அயன் பாக்சும், வெறும் 100 திர்ஹம்களில் ஓவன்களும் மற்றும் 20 திர்ஹம்களுக்கு ஒரு கெட்டில் போன்றவற்றை நீங்கள் வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அதிரடி விற்பனை குறித்து  விற்பனையாளர் ஒருவர் கூறுகையில், இங்குள்ள ஏராளமான எலெக்ட்ரானிக் பொருள்களில் சில பயன்படுத்தப்பட்டவை, சில சாதனங்கள் புதியவை. என்னதான் பயன்படுத்தப்பட்டவையாக இருந்தாலும், இந்த சாதனங்கள் எந்த கோளாறுமின்றி இயங்கும் என்று உறுதியளித்துள்ளார்.

அதேபோல், மற்றொரு விற்பனையாளர் கூறுகையில், அவரிடம் உள்ள அனைத்து தயாரிப்புகளுக்கும் 10 நாள் உத்தரவாதத்தை வழங்குவதாகவும், அந்த காலக்கெடுவிற்குள் சாதனத்தில் ஏதேனும் கோளாறுகள் ஏற்பட்டால், வாடிக்கையாளர்கள் அதை மாற்றியமைப்பதற்காக திருப்பித் தரலாம் என்றும் கூறியுள்ளார்.

எப்படி இவ்வளவு மலிவு விலையில் கிடைக்கிறது?

இந்த எலெக்ட்ரானிக் சாதனங்களின் மலிவான விலை பற்றிய ரகசியம் குறித்துப் பகிர்ந்த விற்பனையாளர், “இங்கே கிடைக்கும் பல எலெக்ட்ரானிக் சாதனங்கள், நாட்டை விட்டு வெளியேறி சொந்த ஊருக்கு பயணிக்கும் அல்லது தங்களின் பழைய சாதனங்களை மாற்ற முடிவு செய்த நபர்களிடமிருந்து பெறப்பட்டவை, எனவே இவற்றை நாங்கள் முழுமையாக ஆய்வு செய்து, சிறந்த முறையில் செயல்படுகின்றன என்பதை உறுதி செய்ததும் புதுப்பித்து விற்பனைக்கு வைக்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

எப்போதும் பரபரப்பாக இருக்கும் சந்தையில், உங்களுக்குத் தேவையான எலெக்ட்ரானிக் பொருட்களை எளிதாகக் கண்டுபிடிப்பதற்காக சந்தையில் ஒவ்வொரு வகையான சாதனங்களுக்கும் பல பிரிவுகள் உள்ளன.

 

இதற்கிடையில், ஃபிரிட்ஜ் அல்லது வாஷிங் மெஷின் போன்ற பெரிய பொருட்களை கொண்டு செல்வது பற்றிய கவலையும் வாடிக்கையாளர்களுக்கு இருக்கும். ஆனால் இங்குள்ள சில கடைகள் குறிப்பிட்ட தொகைக்கு மேல் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இலவச டெலிவரி சேவையை வழங்குவதாக தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.