ADVERTISEMENT

UAE Pass ஸ்மார்ட் ஆப்: மோசடி குறித்து குடியிருப்பாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள ஆணையம்..!!

Published: 8 Sep 2023, 1:55 PM |
Updated: 8 Sep 2023, 2:29 PM |
Posted By: Menaka

அமீரகத்தில் UAE Pass ஐப் பயன்படுத்தி மோசடி செய்ததாக சமூக வலைதளங்களில் செய்திகள் வந்த நிலையில் அமீரகத்தின் தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் அரசு ஒழுங்குமுறை ஆணையம் (TDRA) இது குறித்து பதிவு ஒன்றை குடியிருப்பாளர்களுக்கு வெளியிட்டுள்ளது.

ADVERTISEMENT

அதில் UAE PASS மிகவும் பாதுகாப்பானது என்று  குடியிருப்பாளர்களுக்கு உறுதியளித்துள்ளது. ஆன்லைனில் நடைபெறும் மோசடிகளைத் தவிர்க்க, குடியிருப்பாளர்கள் எந்தவொரு பட்டனை கிளிக் செய்வதற்கு முன்பும் தங்களுக்கு வந்த தகவலை முழுமையாகச் சரிபார்ப்பது அவசியம் என்று அறிவுறுத்தியுள்ளது.

குறிப்பாக, மொபைலில் நோட்டிஃபிகேஷன் அல்லது லாக்இன் செய்யுமாறு உங்களிடம் கேட்கப்படும்போது எச்சரிக்கையுடன் செயல்படுமாறு குடியிருப்பாளர்களை TDRA வலியுறுத்தியுள்ளது.

ADVERTISEMENT

மேலும் “UAE Pass ஸ்மார்ட் ஆப் ஆனது, பயனர்களுக்கு டிஜிட்டல் அடையாளத்தை வழங்குகிறது மற்றும் வெவ்வேறு பயன்பாடுகளுக்கான பல பயனர்பெயர்கள் மற்றும் கடவுச்சொற்களை (password) உருவாக்க அல்லது நினைவில் வைத்திருக்க வேண்டிய தேவையை நீக்குகிறது, இது மிகவும் பாதுகாப்பான அப்ளிகேஷனாகும்” என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது.

சமீப காலமாக குடியிருப்பாளர்கள் அதிகளவில் ஆன்லைன் மோசடியில் சிக்கி வருவதால் எச்சரிக்கையுடன் இருக்க பொதுமக்களை அதிகாரிகள் அறிவுறுத்திக்கொண்டே இருக்கின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் அமீரகத்தின் அரசு அப்ளிகேஷனை பயன்படுத்திக் கொண்டு இருந்த போது ஒருவர்  ஆன்லைன் மோசடிக்கு ஆளானதாக செய்தி ஒன்று வெளியானது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அதிகாரிகளும் குடியிருப்பாளர்களை எச்சரித்திருந்தனர்.

ADVERTISEMENT

அதே போல் மற்றொரு நபர் ஆஃபர் விலையில் உணவை ஆர்டர் செய்யலாம் என தோன்றிய விளம்பரத்தை நம்பி ஆர்டர் செய்ய முயன்றவருக்கு அவரின் வங்கித்தொகையில் இருந்து ஆயிரக்கணக்கில் திர்ஹம்ஸை இழந்து ஏமாற்றப்பட்ட சம்பவமும் நிகழ்ந்துள்ளது. எனவே குடியிருப்பாளர்கள் ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க நம்பகமான தளத்தை அல்லது அப்ளிகேஷனைப் பயன்படுத்துமாறும், அப்போதும் ஏதேனும் விளம்பரம் தோன்றி அதில் உங்கள் தகவலை கேட்டாலும் ஏமாறாமல் விழிப்புணர்வுடன் செயல்படுமாறும் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.