அமீரக செய்திகள்

அமீரகத்தில் அரசு வேலைகளுக்கு விண்ணப்பிப்பது எப்படி? உங்களுக்கான முழு விவரங்களும் இங்கே…

ஐக்கிய அரபு அமீரகத்தில் அரசாங்க வேலைக்கு முயற்சி செய்கிறீர்களா? அப்படியானால், அமீரகத்தில் உள்ள அரசுத் துறைகள் தொடர்ந்து வெளியிடும் வேலைவாய்ப்புகள் குறித்து அறிந்து கொள்வது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

ஏற்கனவே, இந்த மாத தொடக்கத்தில், அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது, மத்திய அரசு ஊழியர்களுக்கான வெகுமதிகள் மற்றும் ஊக்கத்தொகை முறைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

அந்த ஒப்புதலின் படி, ஒரு மத்திய அரசு ஊழியரின் வருடாந்திர செயல்திறன், நிறுவனத்தில் அவரது சாதனைகள் மற்றும் தேசிய சாதனைக்கான பங்களிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் வெகுமதிகள் மற்றும் ஊக்கத்தொகைகள் வழங்கப்படும்.

மத்திய அரசுப் போலவே, ஒவ்வொரு எமிரேட்களின் உள்ளூர் அரசாங்கங்களும் தொடர்ந்து வேலைவாய்ப்பு குறித்த ப்ரோமோஷன்களை அறிவித்து வருகின்றன. எனவே, இத்தகைய அரசாங்க வேலையை பெற நீங்கள் பயன்படுத்த வேண்டிய சில ஆன்லைன் போர்ட்டல்களையும் அவற்றில் எப்படி பதிவு செய்ய வேண்டும் என்பது பற்றியும்  பின்வருமாறு பார்க்கலாம்.

மத்திய அரசாங்கத்தின் ஜாப் போர்டல் – பொதுத் துறை மனிதவளங்களுக்கான ஃபெடரல் அத்தாரிட்டி இணையதளம்:

https://www.federalerp.gov.ae/OA_HTML/OA.jsp?page=/oracle/apps/irc/candidateSelfService/webui/VisHomePG&_ri=821&OAPB=IRC_BRAND&_ti=798971511&OAPB=IRC_BRAND&AGES=79897151798971511

எப்படி பதிவு செய்வது?

  • போர்டலின் முகப்புப் பக்கத்தில் உள்ள ‘Register today’ என்பதைக் கிளிக் செய்து, உங்களின் முழுப்பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும். அதன்பிறகு, கடவுச்சொல்லை அமைத்து, ‘Submit’ என்பதைத் தட்டவும்.
  • வேலைக்கான உங்கள் விண்ணப்பத்தை அப்லோட் செய்து, ‘Continue’ என்பதைக் கிளிக் செய்யவும்.
  • அதனையடுத்து, உங்கள் பாலினம், திருமண நிலை, முகவரி மற்றும் தொடர்பு எண் போன்ற அடிப்படை தனிப்பட்ட விவரங்களை நிரப்பும்படி கேட்கப்படுவீர்கள்.
  • நீங்கள் கணக்கை உருவாக்கியதும், எமிரேட்ஸ் ஹெல்த் சர்வீசஸ் எஸ்டாபிளிஷ்மென்ட் (EHS), அடையாளம், குடியுரிமை, சுங்கம் மற்றும் துறைமுக பாதுகாப்புக்கான ஃபெடரல் அத்தாரிட்டி,  (ICP), UAE விண்வெளி நிறுவனம் போன்ற பல்வேறு மத்திய அரசு துறைகள் வழங்கும் வேலைகளை நீங்கள் தேடலாம்.

அபுதாபி அரசாங்கத்தின் ஜாப் போர்டல் இணையதளம்:

வெளிநாட்டவர்கள், அரசாங்க அதிகாரிகளின் வலைத்தளங்களில் உள்ள கரியர்ஸ் பக்கத்தின் (careers page) மூலம் நேரடியாக அரசாங்க வேலைகளுக்கு விண்ணப்பிக்க பல விருப்பங்கள் உள்ளன. பிரத்யேக தொழில் பக்கத்தைக் கொண்ட சில அரசாங்கத் துறைகள் இங்கே:

துபாய் அரசின் ஜாப் போர்ட்டல்:

https://dubaicareers.ae/

பதிவு செய்வது எப்படி:

  • திரையின் மேற்புறத்தில் உள்ள மெனு பட்டியில் ‘My Profile’  என்பதைக் கிளிக் செய்து, ‘New User’என்பதைக் கிளிக் செய்யவும்.
  • அடுத்த படியாக, உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு கடவுச்சொல்லை உருவாக்கவும்.
  • அது முடிந்ததும், ‘My Profile’ என்பதற்குச் சென்று, உங்கள் புதிய கணக்கில் உள்நுழையவும்.
  • அதற்கு முன், உங்கள் விண்ணப்பத்தின் டிஜிட்டல் நகல் .pdf அல்லது .doc வடிவத்தில் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
  • உங்கள் எமிரேட்ஸ் ஐடி, பாஸ்போர்ட் நகல் மற்றும் கல்விச் சான்றிதழ்களைப் பதிவேற்றி உங்கள் தனிப்பட்ட தகவலை நிரப்பவும்.
  • ஆன்லைன் பதிவு படிவத்தை நீங்கள் பூர்த்தி செய்தவுடன்,  ‘job search’ விருப்பத்தின் மூலம் வேலைகளுக்கு விண்ணப்பிக்க ஆரம்பிக்கலாம்.

ஷார்ஜாவின் வேலை வாய்ப்பு போர்ட்டல்:

வெளிநாட்டவர்கள் பின்வரும் அரசாங்கத் துறை இணையதளங்களின் பக்கத்தில் விண்ணப்பிக்கலாம்:

கவாதர் (Kawader)- அஜ்மான் அரசு வேலைகள்

இணையதளம்-https://www.ajmanhrd.gov.ae/kawader/home

பதிவு செய்வது எப்படி?

  • உங்களிடம் ஏற்கனவே UAE PASS கணக்கு இருந்தால், உங்கள் UAE பாஸைப் பயன்படுத்தி நீங்கள் உள்நுழையலாம். இல்லையெனில், மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்தியும் கடவுச்சொல்லை அமைப்பதன் மூலமும் கணக்கை உருவாக்க வேண்டும்.
  • பின்னர், இணையதளத்தில் உள்நுழைந்து மேலே உள்ள உங்கள் பெயரைக் கிளிக் செய்வதன் மூலம் உங்கள் சுயவிவரத்தை முடிக்கவும்.
  • அதைத் தொடர்ந்து, பணி அனுபவம், தகுதி, தொழில்முறை பயிற்சி மற்றும் தனிப்பட்ட திறன்களை போன்ற தனிப்பட்ட தகவல்களை வழங்குவதன் மூலம் சுயவிவரத்தை நிரப்பவும்.
  • அதன் பிறகு, ‘search jobs’ இல் உங்களுக்கான வேலைகளைத் தேடலாம் மற்றும் வேலை உங்கள் சுயவிவரத்திற்கு ஏற்றதாக இருந்தால்  ‘Apply’ என்பதைக் கிளிக் செய்யவும்.

ராஸ் அல் கைமா அரசு வேலைகள்:

இணையதளம்: https://careers.rak.ae/

பதிவு செய்வது எப்படி?: 

  • திரையில் வலதுபுறத்தில் உள்ள ‘Profile’ விருப்பத்தை கிளிக் செய்து, ‘Create an account’ என்பதைக் கிளிக் செய்வதன் மூலம் ஒரு கணக்கை உருவாக்கவும்.
  • உங்கள் எமிரேட்ஸ் ஐடி எண் மற்றும், மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு கடவுச்சொல்லை அமைக்கவும். பின்னர் மின்னஞ்சல் மூலம் நீங்கள் பெறும் OTPயை உள்ளிடவும்.
  • உங்கள் கணக்கு உருவாக்கப்பட்டதும், ‘Profile’ என்பதைக் கிளிக் செய்து, உங்கள் CV, எமிரேட்ஸ் ஐடி நகல் மற்றும் கல்விச் சான்றிதழ்களை அப்லோட் செய்து,  விண்ணப்பதாரரின் சுயவிவரத்தை நீங்கள் பூர்த்தி செய்யலாம்.
  • அடுத்து, முழுப்பெயர், தேசியம் மற்றும் பாஸ்போர்ட் எண் போன்ற உங்களின் தனிப்பட்ட விவரங்களை வழங்கவும்.
  • உங்கள் சுயவிவரம் அமைக்கப்பட்டதும், ‘All jobs’ என்ற விருப்பத்தின் மூலம் ஏற்கனவே உள்ள காலியிடங்களைத் தேடலாம் மற்றும் புதிய காலியிடங்கள் அறிவிக்கப்படும்போது நோட்டிபிகேஷன்களைப் பெறுவதற்கான விருப்பத்தையும் தேர்ந்தெடுக்கலாம்.

Related Articles

Back to top button
error: Content is protected !!