அமீரக செய்திகள்

அமீரகத்தில் இந்த மாத இறுதியில் வரவிருக்கும் 3 நாட்கள் தொடர் விடுமுறை..!! எப்போது..??

நடப்பு ஆண்டின் இறுதி காலாண்டை நெருங்கிக்  கொண்டிருக்கும் வேளையில் அமீரகவாசிகள் இன்னும் இரண்டு நீண்ட விடுமுறைகளை எதிர்கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலாவதாக எதிர்வரும் செப்டம்பர் 27 அன்று நபிகள் நாயகத்தின் பிறந்த நாள் அதாவது மீலாது நபி கொண்டாடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வானில் தோன்றும் நிலவினைப் பொறுத்து இந்த தேதியானது உறுதி செய்யப்படும் என அறிவித்திருந்தாலும் குடியிருப்பாளர்கள் இதனை முன்னிட்டு மூன்று நாள் விடுமுறையை அனுபவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

அதாவது, செப்டம்பர் 29 வெள்ளிக்கிழமையன்று இந்த நன்னாளை நினைவுகூரும் வகையில் பொது விடுமுறை அறிவிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்படுகிறது எனும்போது, சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளை இணைத்து மூன்று நாள் வார விடுமுறையை குடியிருப்பாளர்கள் எதிர்பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் இது சனி மற்றும் ஞாயிறு விடுமுறை உள்ளவர்களுக்கே மூன்று நாட்கள் விடுமுறை பொருந்தும். சனிக்கிழமை வேலை நாள் கொண்டவர்களுக்கு இது இரண்டு நாட்கள் விடுமுறையை தரும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

அதனையடுத்து, இந்தாண்டின் இறுதியில், டிசம்பர் 2 மற்றும் 3 தேதிகளில் அமீரகத்தின் தேசிய தினம் (National Day) வருகிறது. இது நாடு முழுவதும் கொண்டாடப்படும் மற்றொரு குறிப்பிடத்தக்க பொது விடுமுறையாகும். அத்துடன் தியாகிகள் தினம் (நவம்பர் 30) வியாழக்கிழமையும் வருவதால், குடியிருப்பாளர்கள் மற்றொரு நீண்ட வார இறுதி விடுமுறை நாட்களை அனுபவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆகையால், ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிப்பவர்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் தங்கள் குடும்பம் மற்றும் உறவினர்களுடன் பொன்னான நேரத்தை செலவிடவும், நாட்டின் கலாச்சார பாரம்பரியத்தை ஆராயவும், பல்வேறு நிகழ்வுகள் மற்றும் செயல்பாடுகளில் பங்கேற்கவும் இந்த பொது விடுமுறை நாட்கள் அவர்களுக்கு சிறந்த வாய்ப்பாக அமையும் எனவும் கூறப்படுகின்றது.

Related Articles

Back to top button
error: Content is protected !!