ADVERTISEMENT

நாளை முதல் பயன்பாட்டிற்கு வரும் அபுதாபியின் புதிய விமான நிலையம்.. அனைத்து விமான நிறுவனங்களும் நவம்பர் 15 முதல் இயக்கப்படும் எனத் தகவல்…

Published: 30 Oct 2023, 9:15 PM |
Updated: 31 Oct 2023, 9:19 AM |
Posted By: Menaka

அபுதாபியில் பல ஆண்டுகளாக கட்டப்பட்டு வந்த புதிய சர்வதேச விமான நிலையமான டெர்மினல் A பொதுமக்கள் பயன்பாட்டிற்கு எதிர்வரும் நவம்பர் மாதம் 1 ஆம் தேதி முதல் திறக்கப்படும் என்றும் பின் புதிய விமான நிலையத்தில் பயணிகள் சேவை தொடங்கப்படும் என்றும் முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

அதுமட்டுமின்றி, டெர்மினல் Aவின் அதிகாரப்பூர்வ திறப்புவிழாவிற்கு முன்னதாக, எதிஹாட் ஏர்வேஸ் அக்டோபர் 31 ஆம் தேதி ஒரு கொண்டாட்ட முறையிலான விமானத்தை (ceremonial flight) இயக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதற்கு அடுத்ததாக, அபுதாபியை தலைமையிடமாகக் கொண்டு விமான சேவை புரிந்து வரும் விமானங்களும், மற்ற விமான நிறுவனங்களின் விமானங்களும் இரண்டு வார காலப்பகுதியில் மூன்று கட்டங்களாக புதிய டெர்மினல் Aக்கு மாற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதன் தொடர்ச்சியாக, அனைத்து விமான நிறுவனங்களும் நவம்பர் 15 முதல் டெர்மினல் A இலிருந்து இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புதிய விமான நிலையத்திற்கு வரும் முதல் பயணிகளுக்கான அனைத்து முக்கிய சேவைகளையும் வசதிகளையும் தயார் நிலையில் வைத்திருப்பதாக அபுதாபி ஏர்போர்ட்ஸ் தெரிவித்துள்ளது.

எனவே, விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் மற்றும் பார்வையாளர்கள் எந்த வழியில் செல்ல வேண்டும் என்பதை தெளிவுபடுத்தும் விழிப்புணர்வு பிரச்சாரம் ஏர்போர்ட் ஆப்பரேட்டரால் தொடங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், டெர்மினல்களுக்கு இடையே விரைவாக செல்ல விரும்பும் பயணிகளை அழைத்துச் செல்வதற்காக ஏர்போர்ட் ஆப்பரேட்டர் இன்டர்-டெர்மினல் ஷட்டில் பேருந்துகளை நிறுவியுள்ளதாகக் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

 

ஏர்போர்ட் ஆப்பரேட்டர் வெளியிட்ட அறிக்கையில், நவம்பர் 1 முதல் 14 வரை இடைப்பட்ட நாட்களில் அபுதாபியில் இருந்து பயணிக்கும் பயணிகள் தங்கள் டெர்மினல்கள் குறித்து விமான நிலைய இணையதளத்தில் சரிபார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

குறிப்பாக, விமான நிலையத்திற்குச் செல்வதற்கு முன்பு அல்லது விமான நிலையத்திலிருந்து பார்வையாளர்களை வரவேற்பதற்கு முன்பு அந்தந்த விமான நிறுவனங்களுடன் பயணத் தகவல்களைச் சரிபார்க்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

Google Maps மற்றும் Waze போன்ற அனைத்து பிரபலமான GPS  ஆப்களிலும் புதிய விமான நிலையத்தின் சரியான இடம் சமீபத்தில் சேர்க்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது E10, E11 மற்றும் புதிய விமான நிலையத்தைச் சுற்றியுள்ள பிற இடங்களில் நெடுஞ்சாலைப் பலகைகள் நிறுவப்பட்டிருப்பதால், பயணிகள் அபுதாபி மற்றும் துபாய் ஆகிய இரு இடங்களிலிருந்தும் சுலபமாக டெர்மினல் Aக்கு சென்று விடலாம் என்று கூறப்பட்டுள்ளது.

இது குறித்து அபுதாபி விமான நிலையத்தின் CEO ஃபிராங்க் மெக்ரோரி அவர்கள் பேசுகையில், புதிய விமான நிலையம் பயணிகளின் போக்குவரத்தில் பெரிய அதிகரிப்பை ஏற்படுத்தும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel