ADVERTISEMENT

UAE: வெளிப்புற இருக்கைகள் அமைக்க விரும்பும் கடைகள் அனுமதி பெறுவது அவசியம்..!!! அனுமதியின்றி இருக்கைகளை அமைத்தால் அபுதாபியில் 5,000 திர்ஹம் அபராதம்…

Published: 25 Oct 2023, 5:44 PM |
Updated: 25 Oct 2023, 5:48 PM |
Posted By: Menaka

பொதுவாகவே அமீரகத்தில் கஃபே, உணவகங்கள் போன்ற இடங்களில் வாடிக்கையாளர்களுக்காக கடைகளின் வெளிப்புறங்களிலும் இருக்கைகள் அமைக்கப்பட்டிருக்கும். வெளியில் அமர்ந்து கொண்டு சாப்பிட விரும்பும் பலர் இந்த இருக்கைகளையே தேர்வு செய்கின்றனர்.

ADVERTISEMENT

இந்நிலையில் அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில் உணவகங்கள், கஃபேக்கள் மற்றும் கடைகள் போன்றவை தற்காலிக வெளிப்புற இருக்கை ஏற்பாடுகளை அமைப்பதற்கு அனுமதி பெற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அனுமதியின்றி இருக்கைகளை அமைத்தால் 5,000 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

எனவே, கடை உரிமையாளர்கள் சம்பந்தப்பட்ட அரசுத் துறை மற்றும் ஒழுங்குமுறை அமைப்புகளிடமிருந்து தேவையான அனுமதிகளைப் பெறுவதை உறுதி செய்ய வேண்டும். இது அவர்களின் வளாகத்தை ஒட்டிய வெளிப்புற இடங்களை சட்டப்பூர்வமாகவும் முறையாகவும் பயன்படுத்த அவர்களுக்கு உதவும்.

ADVERTISEMENT

அபுதாபி சிட்டி முனிசிபாலிட்டி, சிட்டி முனிசிபாலிட்டி சென்டருடன் இணைந்து, கடைகள், உணவகங்கள் உள்ளிட்ட வணிக நிறுவனங்களுக்கு அருகிலுள்ள நடைபாதைகளை ஒட்டி வெளிப்புற இருக்கைகள் அமைப்பது தொடர்பான அளவுகோல்கள், வழிகாட்டுதல்கள் மற்றும் செயல்பாட்டு நடைமுறைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த ஒரு பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது.

இந்த பிரச்சாரத்தில் அதிகாரிகள், கடைகள், கஃபேக்கள் மற்றும் உணவகங்களின் உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்களை வெளிப்புற இருக்கைகள் அமைப்பதற்கான விதிமுறைகள், தரநிலைகள் மற்றும் வழிகாட்டுதல்களை கடைபிடிக்குமாறு  வலியுறுத்தியுள்ளனர்.

ADVERTISEMENT

தற்போது, ஐக்கிய அரபு அமீரகத்தில் குளிர்ச்சியான வானிலை நிலவி வருவதால், அபுதாபியில் உள்ள உணவகங்கள் மற்றும் கடைகள் வெளிப்புற இருக்கைகள் அனுமதிகளைப் பற்றி 6 விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும்:

  1. கட்டிட உரிமையாளரின் சம்மதம் மற்றும் குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்கு செல்லுபடியாகும் குத்தகை ஒப்பந்தத்தை வைத்திருப்பவர்கள் TAMM தளத்தின் மூலம் அனுமதிக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.
  2. முக்கியமாக, அறிவிக்கப்பட்ட விதிகளுக்கு இணங்க நாற்காலிகள் மற்றும் நிழல் சாதனங்களின் ஏற்பாட்டைக் குறிப்பிடும் விரிவான தளவமைப்புத் திட்டம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
  3. அதையடுத்து, சிட்டி முனிசிபாலிட்டி சென்டர் அனுமதி கோரப்பட்ட வெளிப்புற இருக்கை பரிமாணங்களை மதிப்பீடு செய்து அதற்கான கட்டணங்களை நிர்ணயிக்கும்.
  4. இந்த அனுமதிக் கட்டணமானது, தேவையான இடத்தின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது மற்றும் 10,000 திர்ஹம் திரும்பப் பெறக்கூடிய டெபாசிட் தொகையும் அடங்கும்.
  5. வழங்கப்படும் அனுமதிகள் ஒரு வருடத்திற்கு செல்லுபடியாகும், மீண்டும் புதுப்பிக்கும் விருப்பம் உள்ளது.
  6. விதிமுறைகளை மீறினால், முனிசிபாலிட்டி அனுமதியை ரத்து செய்யும். அதேபோல, நிபந்தனைகளை மீறினால் 3,000 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும். மேலும், நகர்ப்புற மேம்பாட்டிற்கு தேவைப்படும் போது, அனுமதி ரத்துசெய்யப்படலாம். அப்போது அனுமதி வைத்திருப்பவருக்கு ஏற்படும் இழப்புகளுக்கு முனிசிபாலிட்டி பொறுப்பு ஏற்காது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel