ADVERTISEMENT

அமீரகத்தில் முதல் முறையாக கண்களுக்கு விருந்தளிக்கும் “லைட் ஆர்ட் கண்காட்சி”.. பல வண்ணங்களில் ஒளிரப்போகும் அபுதாபி..!!

Published: 15 Oct 2023, 4:38 PM |
Updated: 15 Oct 2023, 5:31 PM |
Posted By: Menaka

அபுதாபியில் உள்ள முக்கிய இடங்கள் ஒளிரும் பொருட்டு புதிதாக “மனார் அபுதாபி கண்காட்சி” எனும் நிகழ்வானது நடைபெறவுள்ளது. இதில் அபுதாபியின் கடற்கரைகள், தீவுகள் மற்றும் சதுப்புநிலங்கள் என பல முக்கிய இடங்கள் அனைத்தும் வரும் நவம்பர் 15 முதல் நார்த்தர்ன் லைட்ஸ் (Northern Lights) அல்லது அரோரா பொரியாலிஸ் (aurora borealis) விளக்குகளால் ஒளிர்வதைப் பார்வையாளர்கள் காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மேலும், ‘கிரவுண்டிங் லைட் (Grounding Light)’ என்ற கருப்பொருளுடன் தொடங்கப்படும் மனார் அபுதாபி கண்காட்சியில் (Manar Abu Dhabi exhibition), 35 இடங்களில் ஏராளமான ஒளிச் சிற்பங்கள், ஒளிப்படம் போன்ற சர்வதேச கலைஞர்களின் பிரம்மிப்பூட்டும் கலைப்படைப்புகள் காட்சிப்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.

இது குறித்து தெரிவிக்கையில் “கிரவுண்டிங் லைட் என்பது நம்மைச் சுற்றியுள்ள உலகத்தைப் பற்றிய நமது உணர்வை மாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு அனுபவமாகும்” என்று பப்ளிக் ஆர்ட் அபுதாபியின் (Public Art Abu Dhabi) கலை இயக்குனர் ரீம் ஃபடா விளக்கமளித்துள்ளார்.

ADVERTISEMENT

நவம்பர் மாதத்தில் துவங்கும் மனாரின் இந்த தொடக்கப் பதிப்பானது, ஜனவரி 30, 2024 வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, குடியிருப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்கள், பிரம்மிப்பூட்டும் ஒளிப்படங்கள் மற்றும் ஒளிச் சிற்பங்களின் காட்சிகளை அனுபவித்து மகிழலாம் என கூறப்பட்டுள்ளது.

லுலு, சாதியாத், ஜுபைல், அல் சமாலியா மற்றும் ஃபாஹித் ஐலேண்ட் மற்றும் கார்னிச் ரோடு மற்றும் கிழக்கு சதுப்புநிலங்கள் போன்ற பிற கடற்கரைப் பகுதிகள் உட்பட அபுதாபி முழுவதும் பல முக்கிய இடங்களின் இயற்கைக் காட்சிகள் ஒளி அமைப்புகளின் பிரகாசத்தில் மனதை ஈர்க்கும் வகையில் ஜொலிக்கும் என கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இது போன்ற அமீரகத்தின் செய்திகளை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel