ADVERTISEMENT

நாளை முதல் அபுதாபியில் இருந்து இயங்கும் இந்திய விமானங்கள் புதிய டெர்மினலுக்கு மாற்றம்..!! பட்டியல் வெளியீடு..!!

Published: 31 Oct 2023, 8:25 PM |
Updated: 31 Oct 2023, 8:39 PM |
Posted By: Menaka

அபுதாபியில் கட்டப்பட்டு வந்த புதிய விமான நிலையமான டெர்மினல் A நாளை (நவம்பர் 1) முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், நவம்பர் 1 முதல் 14 வரை விமான நிறுவனங்கள் டெர்மினல் Aக்கு செயல்பாடுகளை மாற்றும் என்றும் கூறப்பட்டிருந்தது. அடுத்ததாக, நவம்பர் 15 முதல், அனைத்து விமான நிறுவனங்களும் டெர்மினல் A இலிருந்து விமானங்களை இயக்கும் .

ADVERTISEMENT

எனவே, முதல் இரண்டு வாரங்களில் நீங்கள் அபுதாபிக்கு அல்லது அங்கிருந்து புறப்படுகிறீர்கள் என்றால், நீங்கள் எங்கு அணுக வேண்டும் என்பதைப் பற்றி தெரிந்து கொள்ள அபுதாபி சர்வதேச விமான நிலைய இணையதளத்திலோ அல்லது உங்கள் விமான நிறுவனத்தின் விமானத் தகவல் பற்றிய சமீபத்திய புதுப்பிப்புகளைச் சரிபார்க்க வேண்டும்.

ADVERTISEMENT

அபுதாபி ஏர்போர்ட்ஸ் வெளியிட்டுள்ள தகவல்களின் படி, புதிய சர்வதேச விமான நிலையமானது அதன் முதல் பயணிகளுக்கு முக்கிய சேவைகள் மற்றும் வசதிகளை வழங்குவதற்கு தயாராக உள்ளது. சுமார் 28 விமான நிறுவனங்கள் புதிய விமான நிலையத்தில் இருந்து உலகளவில் 117 இடங்களுக்கு நெட்வொர்க்கில் சேவை செய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது.

டெர்மினல் A இலிருந்து எந்த விமான நிறுவனங்கள் செயல்படும்?

நவம்பர் 1 முதல் ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், இண்டிகோ மற்றும் 15 சர்வதேச விமான நிறுவனங்கள் புதிய விமான நிலையத்தில் இருந்து விமானச் சேவைகளை வழங்கும். அதையடுத்து, எதிஹாட் ஏர்வேஸ் நவம்பர் 9 ஆம் தேதி முதல் தினசரி 16 விமானங்களை இயக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இறுதியாக, நவம்பர் 14 முதல் எதிஹாட் மற்றும் ஏர் அரேபியா அபுதாபி உட்பட அனைத்து 28 விமான நிறுவனங்களும் டெர்மினல் A இலிருந்து முழுமையாக விமானங்களை இயக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய விமான நிலையத்திற்கு எப்படி செல்வது?

நீங்கள் அபுதாபி சிட்டியில் இருந்து புறப்படுகிறீர்கள் என்றால், விமான நிலையத்திற்கு இரண்டு நெடுஞ்சாலைகள் செல்கின்றன. நீங்கள் E10 மற்றும் E20 ஆகிய இரு நெடுஞ்சாலைவழியாக சென்றால், வழிமுழுவதும் உள்ள விமான படங்களுடன் கூடிய அடையாளங்களைப் பின்தொடர்ந்து, புதிய டெர்மினல் A பகுதியை அடையலாம்.

அல் அய்ன் – டெர்மினல் A:

அபுதாபி-அல் அய்ன் நோக்ககி செல்லும் E22 நெடுஞ்சாலையில் ஏறக்குறைய 140கிமீ தூரம் பயணித்து, பின்னர் E10 நெடுஞ்சாலையில் வடக்கே துபாய் செல்லும் சாலையைப் பிடியுங்கள். பிறகு, விமானம் ஐகான் மற்றும் பயணிகள் டெர்மினல் Aக்கான பலகைகளைப் பின்தொடரவும்.

துபாய்-டெர்மினல் A:

துபாயின் பிரதான சாலையான ஷேக் சையத் சாலையில் இருந்து அபுதாபியை நோக்கி சுமார் 80 கி.மீ தொலைவிற்கு ஓட்டி, பின்னர் E10 நெடுஞ்சாலையில் இருந்து வழிகாட்டிப் பலகைகளைப் பின்தொடர்ந்து டெர்மினல் A ஐ அடையலாம்.

புதிய நிலையத்தில் ஸ்மார்ட் கேட்ஸ் மற்றும் பயோமெட்ரிக் அமைப்புகள் உள்ளதா?

டெர்மினல் Aயில் ஒன்பது பயோமெட்ரிக் டச் பாயிண்ட்கள் இருப்பதாக டெர்மினல் ஆப்பரேட்டர் தரப்பில் கூறப்பட்டுள்ளது. எனவே, பயணிகள் போர்டிங் கேட் வரை தடையற்ற பயணத்தை அனுபவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் கட்டத்தில், செல்ப் சர்வீஸ் லக்கேஜ் டிராப்ஸ், இமிக்ரேஷன் ஸ்மார்ட் கேட்ஸ் மற்றும் போர்டிங் கேட்ஸ் போன்ற முக்கிய பகுதிகளில் பயோமெட்ரிக் முறைகள் நிறுவப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதையடுத்து, ஸ்கிரீனிங் செய்யவும், காத்திருப்பு நேரத்தைக் குறைக்கவும் முக அங்கீகாரத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் அபுதாபி சர்வதேச விமான நிலையத்தில் டெர்மினல்களுக்கு இடையே பயணிக்க இலவச ஷட்டில் பேருந்து வசதிகளும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel