ADVERTISEMENT

இனி வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் திருமணத்தைப் பதிவு செய்யலாம்..!!! அமீரகத்தில் விரைவில் நடைமுறைக்கு வரும் புதிய டிஜிட்டல் சேவை…

Published: 23 Oct 2023, 4:18 PM |
Updated: 23 Oct 2023, 4:21 PM |
Posted By: Menaka

துபாய் வேர்ல்ட் டிரேட் சென்டரில் நடைபெற்ற Gitex Global 2023 என்ற தொழில்நுட்பக் கண்காட்சியில், துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) ஏற்கனவே குடியிருப்பாளர்களுக்காக பல்வேறு நவீன டிஜிட்டல் சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

இந்நிலையில், தற்போது அபுதாபி நீதித்துறை (ADJD) தொழில்நுட்பத்தின் உதவியுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம், தொலைவில் இருந்தவாறே திருமணத்தைப் பதிவு செய்யும் டிஜிட்டல் சேவை ஒன்றை கண்காட்சியில் காட்சிப்படுத்தியுள்ளது.

இதன்மூலம், அமீரகக் குடியிருப்பாளர்கள் திருமணச் சான்றிதழுக்கு விண்ணப்பிப்பது மற்றும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது போன்றவற்றை ஆன்லைனிலேயே எளிதாக முடிக்கலாம். மேலும் இரு தரப்பினரின் டிஜிட்டல் கையொப்பங்களும் சட்டப்பூர்வமாக பிணைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மேலும், இவ்வாறு சட்டப்பூர்வமாக பிணைக்கப்பட்ட இறுதி திருமண ஒப்பந்த ஆவணத்தையும் குடியிருப்பாளர்கள் ஆன்லைனிலேயே பெற்றுக் கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் திருமணத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி?

  1. UAE PASS-ஐ பயன்படுத்துவதன் மூலம், விண்ணப்பதாரர்கள் டிஜிட்டல் சேவையைப் பெறலாம். முதலில் டிஜிட்டல் முறையில் திருமண ஒப்பந்தத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும்.
  2. அதன் பிறகு, ஒப்புதலுக்காக காத்திருந்து ஆன்லைனில் பேமன்ட் நடைமுறைகளை முடிக்கவும்.
  3. அடுத்த படியாக WebEx (வெப் கான்பரன்சிங்) மூலம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஒரு சந்திப்பை மேற்கொள்ள வேண்டும். பின்னர், இரு தரப்பினரின் டிஜிட்டல் கையொப்பங்களுடன் இறுதி திருமண ஒப்பந்தத்தைப் பெற காத்திருக்கவும்.

இது தொடர்பாக ADJD துணைச் செயலாளரான ஆலோசகர் யூசுப் சயீத் அல் அப்ரி பேசுகையில், அமீரக துணைத் தலைவர், துணைப் பிரதமர் ஷேக் மன்சூர் பின் சயீத் அல் நஹ்யான் அவர்களின் உத்தரவுகளுக்கு இணங்க, டிஜிட்டல் மாற்றம் மற்றும் நவீன தொழில்நுட்பங்கள் அபுதாபியில் நீதித்துறைப் பணியை அடிப்படையில் மாற்றியமைத்துள்ளன என்று தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel