ADVERTISEMENT

துபாயில் உணவுகளை டெலிவரி செய்ய ட்ரோன் டெலிவரி சேவை.. அடுத்த வருடம் முதல் நடைமுறைக்கு வரும் என தகவல்..!!

Published: 23 Oct 2023, 10:08 AM |
Updated: 23 Oct 2023, 10:12 AM |
Posted By: Menaka

துபாயில் வெகு விரைவிலேயே உணவுகளை டெலிவரி செய்ய ட்ரோன்கள் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த டெலிவரி சேவைகளுக்கு அடுத்த ஆண்டு முதல் தானியங்கு ட்ரோன்கள் பயன்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது. இந்த நவீன தானியங்கு ட்ரோன்கள் எப்படி டெலிவரி செய்யும் என்பது தொடர்பான ஒத்திகை துபாய் வேர்ல்ட் டிரேட் சென்டரில் (DWTC)  நடைபெற்ற Gitex Global 2023 கண்காட்சியில் நடத்திக் காட்டப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அந்த சோதனை ஓட்டத்திற்கு, DWTCயின் பார்க்கிங் பகுதியில் ஒரு பிக்-அப் கியோஸ்க் (இறங்கும் துறைமுகம்) அமைக்கப்பட்டது மற்றும் ட்ரோன் ஒரு லாஞ்ச்பேடில் இருந்து கியோஸ்க்குக்கு முன்னரே தீர்மானிக்கப்பட்ட பாதையில் இயக்கப்பட்டது. இவ்வாறு ஆர்டர் செய்யப்பட்ட உணவு மற்றும் பானங்களை தானியங்கு ட்ரோன்கள் நான்கு நிமிடங்களுக்குள் டெலிவரி செய்து அசத்திக் காட்டியுள்ளது.

மேலும், இந்த பைலட் திட்டமானது, துபாயை தளமாகக் கொண்ட FEDS ட்ரோன்-இயங்கும் தீர்வுகள் (FEDS) மற்றும் சீன நிறுவனமான Meituan UAS (Unmanned Aircraft Systems) மூலம் நிரூபித்துக் காட்டப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

 

ட்ரோன் பற்றிய தகவல்:

  • 2.5 கிலோ பேலோடை (payload) எடுத்துச் செல்லக் கூடிய ட்ரோனில் ஆறு ரோட்டர்கள் உள்ளன. இதன் அளவு 1370 X 1370 X 450 மிமீ ஆகும். 10-கிமீ சுற்றளவில் டெலிவரி செய்யக் கூடிய ட்ரோன்கள் 5G அல்லது 4G மற்றும் WiFi போன்ற தகவல் தொடர்பு அமைப்புகள் மூலம் இயங்குகிறது.
  • வினாடிக்கு 10 மீட்டர் வேகத்தில் மேலே பறக்கும் ட்ரோன்கள், வினாடிக்கு 6 மீட்டர் வேகத்தில் தரையிறங்கும் என்று கூறப்படுகிறது. அதேபோல், 50 மீட்டர் முன்னோக்கியும் 15 மீட்டர் மேல்நோக்கியும் அதன் வழியில் உள்ள இடையூறுகளை உணரும் திறன் கொண்டவை.
  • இவற்றால் -20 டிகிரி செல்சியஸ் முதல் 60 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பநிலையிலும் , மிதமான மழையிலும் தடையின்றி இயங்க முடியும் என்று கூறப்படுகிறது.

புதிய திட்டம் குறித்து FEDS இன் நிறுவனர் மற்றும் CEO ராபின் அவர்கள் பேசுகையில், மனித விநியோகத்திற்கு சிறந்த பதிலீடு டிரோன் டெலிவரி என்று கூறியுள்ளார். ஏனெனில், வான்வழியில் போக்குவரத்து நெரிசல் இருக்காது என்பதால், விரைவாக ஆர்டர்கள் டெலிவரி செய்யப்படும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

ADVERTISEMENT

முதலில் 10 முதல் 20 ட்ரோன்கள் சோதனைக் காலத்திற்கு பயன்படுத்தப்படும் என்றும், வெகுவிரைவில் நூற்றுக்கணக்கான ட்ரோன்கள் துபாய் முழுவதும் செயல்பட பயன்படுத்தப்படும் என்று ராச்செட் தெரிவித்துள்ளார்.

இதேபோன்ற ட்ரோன் டெலிவரி சிஸ்டம் ஏற்கனவே 2021இல் சீனாவின் மூன்று முக்கிய நகரங்களில் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், ஆகஸ்ட் 2023 நிலவரப்படி 184,000 க்கும் மேற்பட்ட உணவு, பானங்கள் மற்றும் பிற தினசரி தேவைகளை வாடிக்கையாளர்களுக்கு வெற்றிகரமாக விநியோகித்துள்ளததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த தானியங்கு ட்ரோன்கள் Gitex Global அல்லது அலுவலகங்கள், குடியிருப்பு மற்றும் வணிகப் பகுதிகள் போன்ற பல்வேறு இடங்களில் நெகிழ்வாகப் பயன்படுத்தக்கூடிய தரையிறங்கும் துறைமுகத்துடன் இணைந்து செயல்படக் கூடியவை.

ஆகவே, ட்ரோன்களுக்கான பாதைகள் மற்றும் தரையிறங்கும் இடங்களை திட்டமிடுவதற்காக நகரத்தில் உள்ள வான்வெளியை வரைபடமாக்குவதில் தீவிரமாக செயல்பட்டு வருவதாக துபாய் முனிசிபாலிட்டி (DM) கண்காட்சியில் உறுதிப்படுத்தியுள்ளது. ஏற்கனவே துபாய் சிலிக்கான் ஒயாசிஸில் பயிற்சியை முடித்துள்ள நிலையில், இப்போது முழு நகரத்திற்கும் இதைச் செய்ய திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel