அமீரக செய்திகள்

துபாய் ஃபிட்னஸ் சேலஞ்ச்: துபாய் ரன்னில் பங்கேற்பதற்கான இலவச ரெஜிஸ்டரேஷன் திறப்பு..!!! இந்தாண்டு பதிப்பில் 200,000 பேர் பங்கேற்பாளர்கள் என்று எதிர்பார்ப்பு…!!

துபாயின் பட்டத்து இளவரசரும் துபாய் நிர்வாக கவுன்சிலின் தலைவருமான மாண்புமிகு ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்களால் கடந்த 2017-ம் ஆண்டு மக்களுக்கு உடற்பயிற்சி சம்பந்தமான விழிப்புணர்வே ஏற்படுத்தும் பொருட்டு துபாய் ஃபிட்னஸ் சேலஞ்ச் (Dubai Fitness Challenge) எனும் நிகழ்வினை துவங்கி வைத்து அதில் கலந்து கொள்ளவும் செய்தார். ஒவ்வொரு வருடமும் நடைபெற்று வரும் இந்த பதிப்பில் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெறும். அதில் துபாய் ரன் மற்றும் துபாய் ரைடு மக்களிடையே பிரசித்தி பெற்றதாகும்.

இந்நிலையில் துபாய் ரன்னின் ஐந்தாவது பதிப்பு அடுத்தமாதம் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு துபாய் ரன்னில் பங்கேற்பதற்கான ரெஜிஸ்டரேஷன் திறக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

துபாய் ஃபிட்னஸ் சேலஞ்சின் (DFC) முதன்மையான நிகழ்வுகளில் ஒன்றான இந்த மெகா நிகழ்வானது வயது மற்றும் திறமையைப் பொருட்படுத்தாமல் அனைத்து தரப்பினரையும் வரவேற்கும் என்பதால், இந்த வருடம் கிட்டத்தட்ட 200,000 பேர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், ஷேக் சயீத் சாலையில் தொடங்கும் துபாய் ரன்னில் பங்கேற்பவர்கள் இரண்டு வெவ்வேறு வழிகளைத் தேர்வுசெய்யலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. முதலாவது, துபாய் ஓபரா, துபாய் மால் மற்றும் புர்ஜ் கலீஃபா உள்ளிட்ட துபாயின் ஐகானிக் அடையாளங்களை கடந்து செல்லும் 5-கிமீ டவுன்டவுன் குடும்பப் பாதை (Family route) மற்றும் இரண்டாவது ஷேக் சயீத் சாலையில் இருந்து துபாய் கேனல் வரை நீண்டு பின்னோக்கிச் சென்று துபாய் இன்டர்நேஷனல் ஃபினான்சியல் சென்டர் (DIFC) அருகில் உள்ள அல் முஸ்தக்பால் ஸ்ட்ரீட்டில் முடிவடையும் 10-கிமீ ஷேக் சயீத் சாலைப் பாதையை உள்ளடக்கியதாகும்.

அதாவது, குடும்பப் பாதையானது, குடும்பங்கள் மற்றும் அனைத்து நிலைகளிலும் உள்ள ஓட்டப்பந்தய வீரர்களுக்கு ஏற்றது. ஆனால், இரண்டாவது பாதை அதிக அனுபவம் வாய்ந்த ஓட்டப்பந்தய வீரர்களுக்கு மட்டுமே ஏற்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலவசமாக பதிவு செய்வது எப்படி?

  • இந்த மெகா நிகழ்வில் பங்கேற்க விரும்பும் குடியிருப்பாளர்கள் முதலில்  https://www.dubairun.com/ என்ற லிங்க் மூலம் உள்நுழைந்து படிவத்தை நிரப்பவும்.
  • ஒருமுறை சைன்-அப் (sign up) செய்தவுடன், பார்வையாளர்கள் ‘Sun & Sand Sports’ வழங்கும் தங்களின் பிப்கள் (bibs) மற்றும் டி-ஷர்ட்களை, ஒன் சென்ட்ரலில் அமைந்துள்ள DFCயின் புதிய ரன் மற்றும் ரைடு சென்ட்ரலில் இருந்து வாங்கிக் கொள்ள அழைக்கப்படுவார்கள்.

‘Mai Dubai ‘ வழங்கும் துபாய் ரன் 2023 நிகழ்வு முன்னெப்போதையும் விட பெரியதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. கடந்த ஆண்டு துபாய் ரன்னில் 193,000 ஓட்டப்பந்தய வீரர்கள் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து தெரிவிக்கையில் கடந்த ஆண்டு, துபாய் ரன்னில் பங்கேற்பாளர்களின் சாதனை எண்ணிக்கை அதிகரித்ததாகவும், எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், இந்த பதிப்பில் கூடுதலான பங்கேற்பைப் பார்க்க ஆவலுடன் காத்திருப்பதாக துபாய் ஸ்போர்ட்ஸ் கவுன்சிலின் பொதுச்செயலாளர் சயீத் ஹரேப் என்பவர் கூறியுள்ளார்.

இந்நிகழ்வு குறித்து DFREயின் CEO அஹ்மத் அல் காஜா அவர்கள் பேசுகையில், ஆரோக்கியமான மற்றும் சுறுசுறுப்பான எதிர்காலத்திற்கான மாபெரும் நிகழ்வில் ஒரு துடிப்பான சமூகமாக அனைவரும் ஒன்றிணைவதால், இந்த தனித்துவமான வாய்ப்பை அனுபவிக்க வயது மற்றும் உடற்பயிற்சி திறன் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் அனைவரும் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!