அமீரக செய்திகள்

UAE: துபாயின் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு..!! 365,000 ஆக உயர்ந்து புதிய சாதனை படைப்பு…!!

துபாயில் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை கடந்த நவம்பர் 2022ஆம் ஆண்டில் பதிவான 326,000 என்ற எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் இந்தாண்டு 12 சதவீதம் அதிகரித்து 365,000 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன.

ஒரே ஆண்டில் 39,000 மாணவர் சேர்க்கை அதிகரித்து சாதனை படைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது எமிரேட்டின் கல்வித் துறை (KHDA) 2007 இல் நிறுவப்பட்டதில் இருந்து மிகப்பெரிய உயர்வு என்றும், துபாயில் தொடர்ந்து மக்கள்தொகை அதிகரித்து வருவதால் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக KHDA இன் இயக்குநர் ஜெனரல் டாக்டர் அப்துல்லா அல் கரம் அவர்கள் பேசுகையில், வாழ்வதற்கும், செழிப்பதற்கும் மற்றும் வேலை செய்வதற்கும் துபாய் முன்னணி இடமாகத் திகழ்வதற்கு மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு ஒரு சான்றாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, ஏப்ரல் 2022 இல், துபாயில் உள்ள பல இந்தியப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்ததாகவும், குறிப்பாக அமீரகத்திற்கு வந்த குடும்பங்களின் சேர்க்கை அதிகரித்துள்ளதாக தரவுகள் குறிப்பிடுகின்றன.

துபாயில் 220 தனியார் பள்ளிகள் உள்ளன, 180க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு 17 பாடத்திட்டங்களை வழங்குகிறது. இது எமிரேட்டில் உள்ள பள்ளிகள் பாடத்திட்டங்கள், இருப்பிடங்கள் மற்றும் மக்கள்தொகை ஆகியவற்றில் பன்முகத்தன்மையை வழங்குவதைப் பிரதிபலிக்கிறது.

துபாய் இலட்சிய மக்களுக்கு ஒரு காந்தமாகும், அது ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான குடும்பங்கள் மற்றும் ஆசிரியர்களை தொடர்ந்து வரவேற்கிறது. எனவே, 2040 ஆம் ஆண்டளவில் எமிரேட்டின் மக்கள்தொகை  5.8 மில்லியனாக உயரும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர்.

இதற்கிடையில், அமீரகத்தின் தலைநகரான அபுதாபி 11 புதிய தனியார் மற்றும் பட்டயப் பள்ளிகளைத் திறந்துள்ளது. அதுமட்டுமல்லாமல், புதிய கல்வியாண்டின் தொடக்கத்தில் சுமார் 15,000 கூடுதல் பள்ளி இடங்கள் உருவாக்கப்பட்டு 450க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!