அமீரக செய்திகள்

துபாய்: முக்கிய சுற்றுலா தலத்திற்கு மீண்டும் தொடங்கப்பட்டுள்ள பேருந்து சேவை…

கடந்த வாரம் துபாய் மிராக்கிள் கார்டன் மீண்டும் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, எமிரேட்டில் மீண்டும் பொதுப் பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. அந்தவகையில், மால் ஆஃப் தி எமிரேட்ஸ் பேருந்து நிலையத்திலிருந்து துபாய்லேண்டில் உள்ள மிராக்கிள் கார்டனுக்கு சேவை செய்யும் பேருந்தான ரூட் 105 மீண்டும் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, இப்போது ஞாயிறு முதல் வியாழன் வரை 30 நிமிட இடைவெளியிலும், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் 20 நிமிட இடைவெளியிலும் பொதுப் பேருந்து சேவை கிடைக்கும். இந்த பேருந்து சேவையை அணுக வேண்டுமெனில், பயணிகளிடம் நோல் கார்டு இருப்பது அவசியம். ஒரு வழிப் பயணத்திற்கு 5 திர்ஹம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மொத்த பயண நேரம் சுமார் 30 நிமிடங்கள் வரை ஆகலாம்.

துபாய் மிராக்கிள் கார்டன் சீசன்:

அமீரகத்தில் குளிர்காலம் நெருங்கி வரும் நிலையில், துபாய் மிராக்கிள் கார்டன் கடந்த வாரம் திறக்கப்பட்டுள்ளது. சுமார் 150 மில்லியனுக்கும் அதிகமான பூக்கள் பூத்துக் குலுங்கும் பூங்காவில் துல்லியமாக ஏற்பாடு செய்யப்பட்ட மலர் இயற்கை காட்சிகள் மற்றும் வடிவமைப்புகள் உள்ளன.

இந்த இடம் பார்வையாளர்களுக்கு திங்கள் முதல் வெள்ளி வரை காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரையிலும், வார இறுதி நாட்களில் (வெள்ளி மற்றும் சனி) மற்றும் பொது விடுமுறை நாட்களில் காலை 9 மணி முதல் இரவு 11 மணி வரை செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பார்வையாளர்கள் டிக்கெட்டுகளை ஆன்லைன் அல்லது பூங்கா வாயிலில் வாங்கிக் கொள்ளலாம்.

குறிப்பாக, மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவச நுழைவை அனுமதிக்கும் இந்த பூங்காவில் 12 வயதுக்கு மேல் 95 திர்ஹம் மற்றும் 3 முதல் 12 வயது வரையிலான சிறுவர்களுக்கு 80 திர்ஹம்களும் கட்டணமாக வசூலிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!