ADVERTISEMENT

குளிர்காலத்தில் பார்வையாளர்கள் அதிகம் விரும்பும் இடங்களில் துபாய் 3வது இடம்.. பல்வேறு ஈர்ப்புகளுடன் பார்வையாளர்களை வரவேற்கும் எமிரேட்..!!

Published: 10 Oct 2023, 8:01 PM |
Updated: 11 Oct 2023, 9:20 AM |
Posted By: Menaka

உலகளவில் உள்ள பல்வேறு இடங்களில் குளிர்காலத்தின் போது பார்வையாளர்களுக்கு சிறந்த அனுபவத்தை தரும் நகரங்கள் குறித்து சமீபத்தில் ஒரு ஆய்வு ஒன்று நடத்தப்பட்டுள்ளது. அந்த ஆய்வின் முடிவில் வெளியான தகவல்களின்படி, பார்வையாளர்களின் முதன்மையான குளிர்கால இடங்களின் பட்டியலில் துபாய் மூன்றாவது இடத்தை பிடித்து அசத்தியுள்ளது.

ADVERTISEMENT

குளிர்காலத்தில் நிலவும் சராசரி வெப்பநிலை மற்றும் மழைப்பொழிவு போன்ற பல்வேறு அளவீடுகளின் அடிப்படையில் உலகெங்கிலும் உள்ள இடங்களை பகுப்பாய்வு செய்து, பகல் நேரம் குளிர்ச்சியாக இருக்கும்போது மக்கள் உற்சாகமடைவார்கள் என்பது இந்த ஆய்வின் முடிவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், குளிர்காலத்தில் ஒரு நாளைக்கு அதிக சூரிய ஒளி வீசும் நகரங்களில் துபாய் 8.75 மதிப்பெண்களைப் பெற்று, உலகளவில் ஆறாவது நகரமாக இடம்பிடித்துள்ளது. அதேபோல், தென் ஆப்பிரிக்காவில் உள்ள கேப் டவுன் (Cape Town) குளிர்கால வெயிலுக்கு ஏற்ற இடங்களில் இரண்டாவது இடமாக உள்ளது.

ADVERTISEMENT

அத்துடன், துபாயில் பல கடற்கரைகளில் கைட் சர்ஃபிங் (kitesurfing), ஜெட்-ஸ்கையிங் (jet-skiing), புர்ஜ் கலீஃபாவிலிருந்து பிரம்மிக்க வைக்கும் காட்சிகள், பாலைவனத்திற்குள் உற்சாகமான டூன் பேஷிங் (dune bashing) மற்றும் தாறுமாறான சவாரி (buggy ride) என எக்கச்சக்கமான செயல்பாடுகள் சுற்றுலாப்பயணிகளுக்கு சிறந்த அனுபவத்தையும் வழங்குகின்றன.

அமீரகத்தில் கோடை காலங்களில வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தாலும், டிசம்பர் முதல் தொடங்கும் குளிர் காலத்தில் நாடு முழுவதும் மிதமான வெப்பமும், குளிர்ந்த காற்றும் வீசும். அதேபோன்று துபாயில் குளிர்காலத்தின் போது அதிகபட்சமாக 24.6℃ வரை வெப்பநிலை பதிவாகும். இதனால் குளிர்கால சீசனின் போது துபாயில் உள்ள பல்வேறு ஈர்ப்புகள் பார்வையாளர்கள் அனுபவிப்பதற்கான ஏராளமான வாய்ப்பையும் வழங்கும்.

ADVERTISEMENT

அதற்கேற்ப, துபாயும் குளோபல் வில்லேஜ், துபாய் சஃபாரி மற்றும் மிராக்கிள் கார்டன்ஸ் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் மற்றும் வெளிப்புற சாகசப் பிரியர்களுக்கான பல்வேறு ஈர்ப்புகளுடன் இந்த குளிர்கால சீசனை இம்மாதம் முதல் தொடங்கவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

உடனடி செய்திகளை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel