அமீரக செய்திகள்

UAE விசிட் விசாவை ஒருமுறை அதுவும் 30 நாட்களுக்கு மட்டுமே நீட்டிக்க அனுமதி..!! ICP வெளியிட்டுள்ள நிபந்தனைகள் மற்றும் தேவையான தரநிலைகள்…

ஐக்கிய அரபு அமீரகத்தில் விசிட் விசாவில் வசிக்கும் வெளிநாட்டவர்கள் தங்களின் விசாக்களை ஒரு முறை மட்டுமே நீட்டிப்பு செய்ய முடியும் என்றும், அதுவும் 30 நாட்களுக்கு மட்டுமே விசாவை நீட்டிக்க முடியும் என்றும் அமீரகத்தின் அடையாளம், குடியுரிமை, சுங்கம் மற்றும் துறைமுகப் பாதுகாப்புக்கான ஃபெடரல் அத்தாரிட்டி (ICP) அறிவித்துள்ளது.

அதன்படி, அமீரகத்திற்கு வந்த விசிட்டர்கள் “UAEICP” என்ற ஸ்மார்ட் அப்ளிகேஷன் மூலம் விசிட் விசாவை ஒரு முறை மட்டும் 30 நாட்களுக்கு நீட்டிக்க அதிகாரம் அனுமதி அளிக்கிறது. அவ்வாறு விண்ணப்பிக்க விரும்பும் வெளிநாட்டினரின் அசல் என்ட்ரி பெர்மிட் மற்றும் வண்ண புகைப்படம் போன்ற ஆவணங்கள் அவசியம் ஆகும்.

எனவே, நீங்கள் 750 திர்ஹம் கட்டணம் செலுத்தி ஆன்லைனிலேயே 30-நாள் நீட்டிப்புக்கு விண்ணப்பிக்கலாம். இதில் 500 திர்ஹம் வழங்கல் கட்டணம் மற்றும் விண்ணப்பத்திற்கு 100 திர்ஹம், 100 ஸ்மார்ட் சேவைக் கட்டணம் மற்றும் இன்சூரன்ஸ் மற்றும் அதிகாரக் கட்டணத்திற்கு திர்ஹம் 50 ஆகியவை அடங்கும்.

விசா நீட்டிப்புக்கான தரநிலைகள் மற்றும் நிபந்தனைகள்:

ICPயின் படி, விசாவை நீட்டிக்க வேண்டுமெனில், அமீரகத்திற்குள் ஸ்பான்சர் செய்யப்பட்ட நபர் இருக்க வேண்டும். அதேபோல், நீட்டிப்புக்கு விண்ணப்பிக்கும் போது குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்கு செல்லுபடியாகும் பாஸ்போர்ட் இருக்கவேண்டும்.

அதுமட்டுமில்லாமல், ஒரு உறவினர் அல்லது நண்பரைப் பார்ப்பதற்கு வழங்கப்படும் விசிட் விசாவிற்கு பல நிபந்தனைகள் உள்ளன என்று ICPயின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறு அதிகாரத்தால் நிர்ணயிக்கப்பட்ட நிபந்தனைகளின் படி, நீட்டிப்புக்கு விண்ணப்பிப்பவர் அமீரகத்தில் வசிக்கும் குடிமகன் அல்லது வெளிநாட்டவரின் உறவினர் அல்லது நண்பராக இருக்க வேண்டும்.

அதேசமயம், உறவுக்கான ஆதாரம், வருகைக்கான காரணம், மற்றும் நிதி உத்தரவாதம் போன்றவற்றை சமர்ப்பித்து நிரூபிக்க வேண்டும்.எனவே, விண்ணப்பத்தின் மூலம் விசிட் விசா வழங்குவதற்கான சேவையை நீங்கள் தேர்வுசெய்தவுடன், நாட்டில் ஹோஸ்ட் செய்யப்பட்ட நபரின் அனைத்து தரவுகளும் தானாகவே தோன்றும்.

மேலும் அவர் செய்ய வேண்டியது எல்லாம் விண்ணப்பத்தைச் சமர்ப்பித்தல் மற்றும் சேவையிலிருந்து பயனடையும் நபரின் அடையாளத் தரவை உள்ளிடுதல், பின்னர் தேவையான ஆவணங்களை இணைத்தல் மற்றும் விசா வழங்குவதற்கான நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்களைச் செலுத்துதல் போன்றவை ஆகும்.

குறிப்பாக, உள்ளிடப்பட்ட தரவுகளில் ஏதேனும் பிழைகள் அல்லது தேவையான ஆவணங்களைச் சமர்ப்பிக்கத் தவறினால் விண்ணப்பம் திருப்பி அனுப்பப்படும் மற்றும் 30 நாட்களுக்குப் பிறகு  டிஜிட்டல் முறையில் விண்ணப்பம் நிராகரிக்கப்படும். அதாவது, தரவுகளில் உள்ள குறைபாடுகள் அல்லது தேவையான ஆவணங்களை பூர்த்தி செய்யத் தவறியதால் விண்ணப்பம் மூன்று முறை திருப்பி அனுப்பப்பட்டால் அது நிராகரிக்கப்படும்.

அந்த வகையில், விண்ணப்பத்தைச் சமர்ப்பித்த நாளிலிருந்து ஆறு மாதங்களுக்கு மிகாமல் கிரெடிட் கார்டு, காசோலை அல்லது வங்கிப் பரிமாற்றம் மூலம், நாட்டிற்குள் அமைந்துள்ள வங்கிகளுக்கு மட்டுமே அந்த கட்டணத் தொகை திருப்பியளிக்கப்படும் என்பதையும் ICP சுட்டிக்காட்டியுள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!